முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குற்றமும் தண்டனையும்

      பிறகு அந்நகர நீதிபதி ஒருவர் அவர் முன்பு வந்து,'      'குற்றத்தைப்பற்றியும் தண்டனையைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லுங்கள் ' என்றார். அவர் சொல்லத் தொடங்கினார்:      உங்கள் உயிர் காற்றிலே அலைந்து திரியும்போது தான் - நீங்கள் மட்டுமே துணையின்றி உள்ள போது தான் - நீங்கள் பிறருக்குத் தவறிழைத்து அதன் மூலம் உங்களுக்கு நீங்களே ' தவறிழைத்துக் கொள்கின்றீர்கள் .      அத்தகைய உங்கள் தவறுகளுக்காக , நீங்கள் பரலோகத்தின் கதவைத் தட்டும் போது, ஆங்குப் பதிலளிப்போர் இல்லாமையால், சிறிது காலம்  பரலோகத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டியதே.      உங்கள் அரிய உயிர் ஒரு கடலைப் போன்றது. எக்காலத்திலும் அது வற்றாது.  வேறு நீரைப் பெய்து அதை நிரப்ப வேண்டியும் இராது.      காற்றைப் போல இலேசான சிறகுடையவற்றை மட்டுமே அது மேலெழுப்ப வல்லது. மற்றும் உங்கள் தூய ஆத்மா கதிரவனைப் போன்றதுமாகும்.      அந்த ஆத்மாவோ கறையானின் வழிகளையும் அறியாது; பாம்பின் வளைகளையும் தேடாது.      உங்கள் தூய உயிர் உங்களுள்ள...

கொடுத்தலும் கொள்ளலும்

     பின்னர் ஒரு வணிகன், ' கொடுத்தலைப்   பற்றியும், கொள்ளுதலைப் பற்றியும்  எங்களுக்குக் கூறுங்கள் ' என , அவர் கூறத் தொடங்கினார்.      உங்களுக்காக நில நல்லாள் தன் பலன்களைத்  தருகிறாள்.  நீங்கள் உங்கள் கைகளை  எவ்வண்ணம் நிரப்பிக் கொள்வதென  அறிந்தால் போதும்.  நீங்கள் தாழ்ச்சியுற மாட்டீர்கள்.      மண் தந்த வளத்தைப் பரிமாறிக்  கொள்வதிலேயே நீங்கள் அளவற்ற வளத்தைக்  கண்டு திருப்தி உறுவீர்கள்.      ஆயினும் அந்தப் பரிமாறுதல் தான் அன்போடும்  கருணை வாய்ந்த நீதியின் மூலமும்  நடைபெற வில்லை எனின், அது சிலரைப்  பேராசைக்கும் மற்றும் பலரைப் பசிப்பிணிக்கும் ஆளாக்கி விடும்.      அங்காடி வீதியிலும், கடலிலும், வயலிலும்,  திராட்சைத் தோட்டத்திலும் உழைக்கும்  உழைப்பாளிகளாகிய நீங்கள்,  நெசவாளர்களையும், குயவர்களையும்,  வாசனைத் திரவியம் சேகரிப்பவர்களையும்  காணும் போது, அந்த நேரத்திலே, உங்கள்  மத்தியிலே வந்து உங்கள் துலாக் கோலைத்   தூயதாக்கிப் ...

உடைகள்

      அடுத்து ஒரு நெசவாளி  அவரை நோக்கி ,  'ஆடைகளைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்:      உங்கள் ஆடைகள் உங்களது அழகின் பெரும் பகுதியை மறைத்து விடுகின்றன.  ஆனால்,  உங்கள் அழகின்மையையோ அவை மறைப்பதே இல்லை.      உங்கள் உடைகளிலே, தனிமையில் இருந்து  விடுதலையை  நீங்கள் தேடிய போதிலும்  அவற்றிடையே  ஒரு கடிவாளமமும் ஒரு கால் விலங்கும் உள்ளதைக்  காண்பீர்கள்.      நீங்கள் ஞாயிற்றையும் காற்றையும் குறைந்த  ஆடையுடனும் அதிகமாகத் திறந்த உடலோடும்  காண - சந்திக்க- இயலாதா?      ஏனெனில் வாழ்க்கையின் மூச்சு, ஞாயிற்றின்  ஒளியிலும் வாழ்க்கையின் கைகள் காற்றிலும்  அல்லவோ உள்ளன.      உங்களில் சிலர் நாம் அணிந்துள்ள ஆடையை  வாடைக் காற்று தான் செய்தது என்று சொல்கிறீர்கள்.      நானும் கூறுவேன் வாடைக்காற்றே அதை நெய்தது.      ஆனால், வெட்கமே அதன் தறியாகவும்  மிருதுவாக்கப்பட்ட தசை நாய்களே அதன்  இழை...

இல்லங்கள்

      ஒரு கொத்தனார் அவர் முன் வந்து நின்று, 'ஐயா!  எங்களுக்கு இல்லங்களைப் பற்றிக் கூறுங்கள்',  என்றார்.  அவர் சொல்லத் தொடங்கினார்:      நகரத்தின் மதில்களிடையே ஒரு மாளிகையை  நீங்கள் கட்டுவதற்கு முன்னர், உங்கள்  கற்பனைக்குத் தக்க ஒரு கொடி வீட்டைக்  கானிலே கட்டுங்கள் .      மாலைக் காலத்தின் மங்கிய ஒளியிலே நீங்கள்  எவ்வண்ணம் வீடு திரும்புவீர்களோ, அவ்வண்ணமே சேய்மைக் கண்ணே  தனித்துள்ள உங்கள் உள்ளமெனும்  வழிப்போக்கனும், தன் வீட்டை நோக்கியே திரும்புவான்.      உங்கள் பரு உடலே உங்கள் இல்லம்.      அந்த இல்லம் கதிரவனின் கதிரொளியிலே  வளர்ந்து இரவின் அமைதியிலே உறங்குகின்றது.      உங்கள் குடிசை கனவு காண்பதில்லையா?  கனவோடே இந்த நகரத்தைவிட்டு நீங்கி,  பூங்காவுக்கோ, குன்றின் உச்சிக்கோ போவதில்லையா?      உங்கள் இல்லங்களை எல்லாம் நான் என்  கைகளில் ஏந்தி, விதைப்பவன் விதை  தூவுவதைப் போலக் காட்டிடையேயும்   வயற்புறத்தேயும் தூவுவத...

இன்பமும் துன்பமும்

       அடுத்தபடி ஒரு மடந்தை அவரை நோக்கி 'ஐயா!  இன்பத்தைப் பற்றியும் துன்பத்தைப் பற்றியும்  எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்வார்:      உங்களது இன்பங்கள் யாவும் முகத்திரை  களையப்பட்ட துன்பங்களே.      உங்களது இதயத்தின் நிறைவினின்று எது  உங்கள் சிரிப்புக்கும் களிப்புக்கும் காரணமாக  இருந்ததோ அதுவே உங்கள் கண்களைக்  கண்ணீரால் நிறைக்கவும் காரணமாகலாம்.      மற்று  வேறெப்படி இருக்க முடியும்?      துன்பம் உங்கள் உள்ளத்தின் எவ்வளவு அடி   ஆழத்தில் உளைகின்றதோ  அவ்வளவுக்கு அதிகமான இன்பத்தை நீங்கள்  அடைகின்றீர்கள்.      நீங்கள் பழரசத்தை ஏந்திப் பருகும் அந்தக்  குவளை, குயவனாள் சூளையிலே வேகவைத்து  எடுக்கப்பட்டது அன்றோ?      உங்கள் இதயத்தை இன்னிசையால்  பரவசப் படுத்தும் அந்த வேய்ங்குழல் கத்தியால்  வெட்டிச் சீவி, துளையிட்டுச் செப்பஞ்  செய்யப்பட்டது தானே?      நீங்கள் மகிழ்ச்சியில் மைந்துறும் போது உங்கள்...

பணி

     நீங்கள் பணியில் ஈடுபடுவதால் பூமியோடும்       பூமியின் ஆன்மாவோடும் நீங்கள் பயணிக்க       முடிகிறது.  முடங்கி கிடப்பது நடக்கும் பருவ  காலங்களுக்கு அந்நியமாவதாகும் .  எல்லையில்லாத ஒன்றுக்கு  பெருமையோடு  கீழ்படிந்து அதை நோக்கி கம்பீரமாக  நடைபோட்டு செல்லும் பேரணியிலிருந்து  விலகுவதாகும்.      நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது  ஒரு  புல்லாங்குழல் ஆகிறீர்கள், உங்கள் இதயத்தின்  வாயிலாக காலத்தின் முனுமுனுப்புகள்  இசையாக மாறுகிறது .  உங்களில் யார்  துளைகள் அற்ற மூங்கிலாகவே, அமைதியாக, பேச முடியாமல் இருக்க விரும்புகிறீர்கள்,  மற்றவை எல்லாமே இசைந்து பாடும் போது .      உங்களுக்கு எப்போதும் கூறப்பட்டு  இருக்கிறது, பணி என்பது ஒரு சாபம் என்றும்  உழைப்பில் ஈடுபட வேண்டியிருப்பது ஒரு  துரதிட்டம்  என்றும்.      ஆனால், நான் சொல்கிறேன் நீங்கள் பணியில்  ஈடுபடும்போது தொலைவில் இருக்கும் பூமியின்  கனவை ...

உண்ணும் சோறும் பருகும் நீரும்

     ஆங்கோர் உணவு விடுதிக்கார முதியவர், அவர் முன் வந்து, 'உண்ணுவதைப் பற்றியும் பருகுவதைப் பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்:      நிலத்தின் புழுதியிலே  வாழ்ந்து, ஒளியினாலே நிலைபெற்று   நிற்கும் காற்றுத் தாவரம் போல், நீங்கள் வாழ்தல் கூடுமோ?      நீங்கள் உண்ணுவதற்காகப் பிற உயிர்களைக்  கொல்கின்கிறீர்கள்.  உங்கள் நீர்வேட்கையைத்  தணித்தற்கெனவும் பருகுவதற்கெனவும், பசுவின் பாலைப் பச்சைப் பசுங்கன்றுக்கும்  கொடாமல் பறிக்கின்றீர்கள். அவற்றிடையேயும்  வாழ்க்கையின் வழிபாடு பின்னிக் கலந்து விளங்கட்டும்.      உங்கள் இருக்கை ஒரு பலிபீடமாக அமையட்டும். அங்குப் பலியிடப்படும் வயல்வெளிகளின் தூய  விளைவுகளும், முல்லை நிலத்தின் கள்ளங்  கபடமற்ற கால்நடைகளும், மாந்தர்களின்  உள்ளத்திலே உறையும் மிகத் தூயதும்  கபடமற்றதுமான ஆத்மாவுக்குப்  பலியிடப்படுவதாகட்டும்.      நீங்கள் ஓர் உயிரை அழிக்கும் போது உங்கள் உள்ளத்திலே   இவ்வண்ணம் நினைவ...

ஈகைத்திறன்

       அங்குள்ள ஒரு செல்வந்தர், அவரை நோக்கி,  'ஐயா! ஈகையைப் பற்றி எங்களுக்குச்  சொல்லுங்கள்' என்றார்.  அவர் சொல்லலுற்றார்:      உங்களுக்குரிய உடைமையிலிருந்து நீங்கள்  கொடுக்கும்போது       நீங்கள் மிகக் குறைவாகத் தான்  கொடுப்பவர்கள் ஆவீர்கள்.      ஆனால், நீங்கள் உங்களையே பிறருக்குக்  கொடுத்துவிடும்       போது தான் நீங்கள் உண்மையான  கொடை  வள்ளல்கள்.      உங்கள் உடைமை என்பது என்ன?  நாளைக்கு  உங்களுக்கு இவை இவை தேவைப்படும்  என்பதாகக் கருதிப் பொருளை அச்சத்தோடு  காப்பாற்றி வருவதன்றோ உடைமை என்பது.      நாளை, இந்த நாளை என்பது என்ன?      யாத்திரீகர்களைத் தொடர்ந்து செல்லும் மிக  விழிப்பான நாய் தனக்குத் தேவைப்படும் எனக்  கருதி நெறியற்ற மணல் வெளியிலே எலும்புத்  துண்டுகளைப் புதைத்து வைத்து அந்த  யாத்திரீகர்களைத் தொடர்ந்து சென்றுவிட்டால்  அந்த எலும்புத் துண்டுகள் மறுநாள் அந்த  வி...

குழந்தைச் செல்வம்

      தன் மார்பிலே ஒரு குழந்தையை அணைத்த  வண்ணம் அங்கு நின்றிருந்த ஒரு தாய் அவரை  நோக்கி, 'ஐயா, எங்களுக்குக்  குழந்தைகளைப் பற்றிச் சொல்லுங்கள்' என,  அவர் சொல்லலுற்றார் :      உங்கள் குழந்தைகள்  உங்கள் குழந்தைகள்  அல்லர்.       அவர்கள் அனைவரும் தங்களுக்காகவே  ஏக்கமுற்றிருக்கும் வாழ்க்கையின் புதல்வரும்  புதல்வியருமே ஆவர்.  அவர்கள் உங்கள்  மூலமாக வந்தார்களே  அல்லாமல்  உங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர்.      அவர்கள் உங்களுடனே இருந்த போதிலும்  உங்களுடைய உடைமைகள் அல்லர்.      நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டுமே  கொடுக்கலாம். உங்கள் எண்ணங்களை அல்ல.  ஏனெனில், அவர்களுக்கென வேறு  எண்ணங்கள் உள்ளன.      அவர்கள் உயிர்களுக்கல்ல. உடல்களுக்கு  மட்டுமே, நீங்கள் இருப்பிடம் தரலாம்.  ஏனெனில்,   அவர்களின் உயிர் (ஆத்மா) நாளை என்னும்  வீட்டிலே தான் உள்ளது.  நீங்களோ உங்கள்  கனவிலுங் கூட அங்குச் செல்லு...

திருமணம்

  திருமணம்       நீங்கள் அனைவரும் இணைந்தே பிறந்தீர்கள்.   இனி எப்போதும் இணைந்தே இருப்பீர்கள்.      உங்களுடைய வாழ்நாள்களை மரணம் தன்  வெண் சிறகுகளால் சிதற அடிக்கும் காலத்தும்  இணைந்தே இருப்பீர்கள்.      ஆம், இறைவனுக்கான அமைதி மிக்க தியான  நேரத்திலும் நீங்கள் இணைந்தே இருப்பீர்கள். ஆனாலும், உங்கள் இணைப்பின் இடையே  சிறிது இடைவெளி இருக்கட்டும்.  அந்த  இடைவெளியிலே வானுலகத்தில் காற்று  நடனம் புரியட்டும்.      ஒருவரை ஒருவர் காதலியுங்கள்.  ஆனால், அக்  காதலினால் பிணிப்பான தளையை  உண்டாக்கிக் கொள்ளாதீர்கள்.      அக் காதல் உங்கள் உயிராற்றங் கரைகளிலே  அலை மோதும் கடலாக விளங்கட்டும்.      நீங்கள் ஒருவருக்கொருவர் மற்றொருவருடைய  குவளையை நிரப்புங்கள்.  ஆனால், ஒரே  குவளையிலுள்ள பானத்தை இருவரும்  பருகாதீர்கள்.     அதைப்போலவே, தனக்குரியதான உணவையும்  ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுங்கள். ஆனால், ஒரே அப்பத் துண்டின...