முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உண்ணும் சோறும் பருகும் நீரும்

     ஆங்கோர் உணவு விடுதிக்கார முதியவர், அவர் முன் வந்து, 'உண்ணுவதைப் பற்றியும் பருகுவதைப் பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்:      நிலத்தின் புழுதியிலே  வாழ்ந்து, ஒளியினாலே நிலைபெற்று   நிற்கும் காற்றுத் தாவரம் போல், நீங்கள் வாழ்தல் கூடுமோ?      நீங்கள் உண்ணுவதற்காகப் பிற உயிர்களைக்  கொல்கின்கிறீர்கள்.  உங்கள் நீர்வேட்கையைத்  தணித்தற்கெனவும் பருகுவதற்கெனவும், பசுவின் பாலைப் பச்சைப் பசுங்கன்றுக்கும்  கொடாமல் பறிக்கின்றீர்கள். அவற்றிடையேயும்  வாழ்க்கையின் வழிபாடு பின்னிக் கலந்து விளங்கட்டும்.      உங்கள் இருக்கை ஒரு பலிபீடமாக அமையட்டும். அங்குப் பலியிடப்படும் வயல்வெளிகளின் தூய  விளைவுகளும், முல்லை நிலத்தின் கள்ளங்  கபடமற்ற கால்நடைகளும், மாந்தர்களின்  உள்ளத்திலே உறையும் மிகத் தூயதும்  கபடமற்றதுமான ஆத்மாவுக்குப்  பலியிடப்படுவதாகட்டும்.      நீங்கள் ஓர் உயிரை அழிக்கும் போது உங்கள் உள்ளத்திலே   இவ்வண்ணம் நினைவ...

ஈகைத்திறன்

       அங்குள்ள ஒரு செல்வந்தர், அவரை நோக்கி,  'ஐயா! ஈகையைப் பற்றி எங்களுக்குச்  சொல்லுங்கள்' என்றார்.  அவர் சொல்லலுற்றார்:      உங்களுக்குரிய உடைமையிலிருந்து நீங்கள்  கொடுக்கும்போது       நீங்கள் மிகக் குறைவாகத் தான்  கொடுப்பவர்கள் ஆவீர்கள்.      ஆனால், நீங்கள் உங்களையே பிறருக்குக்  கொடுத்துவிடும்       போது தான் நீங்கள் உண்மையான  கொடை  வள்ளல்கள்.      உங்கள் உடைமை என்பது என்ன?  நாளைக்கு  உங்களுக்கு இவை இவை தேவைப்படும்  என்பதாகக் கருதிப் பொருளை அச்சத்தோடு  காப்பாற்றி வருவதன்றோ உடைமை என்பது.      நாளை, இந்த நாளை என்பது என்ன?      யாத்திரீகர்களைத் தொடர்ந்து செல்லும் மிக  விழிப்பான நாய் தனக்குத் தேவைப்படும் எனக்  கருதி நெறியற்ற மணல் வெளியிலே எலும்புத்  துண்டுகளைப் புதைத்து வைத்து அந்த  யாத்திரீகர்களைத் தொடர்ந்து சென்றுவிட்டால்  அந்த எலும்புத் துண்டுகள் மறுநாள் அந்த  வி...

குழந்தைச் செல்வம்

      தன் மார்பிலே ஒரு குழந்தையை அணைத்த  வண்ணம் அங்கு நின்றிருந்த ஒரு தாய் அவரை  நோக்கி, 'ஐயா, எங்களுக்குக்  குழந்தைகளைப் பற்றிச் சொல்லுங்கள்' என,  அவர் சொல்லலுற்றார் :      உங்கள் குழந்தைகள்  உங்கள் குழந்தைகள்  அல்லர்.       அவர்கள் அனைவரும் தங்களுக்காகவே  ஏக்கமுற்றிருக்கும் வாழ்க்கையின் புதல்வரும்  புதல்வியருமே ஆவர்.  அவர்கள் உங்கள்  மூலமாக வந்தார்களே  அல்லாமல்  உங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர்.      அவர்கள் உங்களுடனே இருந்த போதிலும்  உங்களுடைய உடைமைகள் அல்லர்.      நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டுமே  கொடுக்கலாம். உங்கள் எண்ணங்களை அல்ல.  ஏனெனில், அவர்களுக்கென வேறு  எண்ணங்கள் உள்ளன.      அவர்கள் உயிர்களுக்கல்ல. உடல்களுக்கு  மட்டுமே, நீங்கள் இருப்பிடம் தரலாம்.  ஏனெனில்,   அவர்களின் உயிர் (ஆத்மா) நாளை என்னும்  வீட்டிலே தான் உள்ளது.  நீங்களோ உங்கள்  கனவிலுங் கூட அங்குச் செல்லு...

திருமணம்

  திருமணம்       நீங்கள் அனைவரும் இணைந்தே பிறந்தீர்கள்.   இனி எப்போதும் இணைந்தே இருப்பீர்கள்.      உங்களுடைய வாழ்நாள்களை மரணம் தன்  வெண் சிறகுகளால் சிதற அடிக்கும் காலத்தும்  இணைந்தே இருப்பீர்கள்.      ஆம், இறைவனுக்கான அமைதி மிக்க தியான  நேரத்திலும் நீங்கள் இணைந்தே இருப்பீர்கள். ஆனாலும், உங்கள் இணைப்பின் இடையே  சிறிது இடைவெளி இருக்கட்டும்.  அந்த  இடைவெளியிலே வானுலகத்தில் காற்று  நடனம் புரியட்டும்.      ஒருவரை ஒருவர் காதலியுங்கள்.  ஆனால், அக்  காதலினால் பிணிப்பான தளையை  உண்டாக்கிக் கொள்ளாதீர்கள்.      அக் காதல் உங்கள் உயிராற்றங் கரைகளிலே  அலை மோதும் கடலாக விளங்கட்டும்.      நீங்கள் ஒருவருக்கொருவர் மற்றொருவருடைய  குவளையை நிரப்புங்கள்.  ஆனால், ஒரே  குவளையிலுள்ள பானத்தை இருவரும்  பருகாதீர்கள்.     அதைப்போலவே, தனக்குரியதான உணவையும்  ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுங்கள். ஆனால், ஒரே அப்பத் துண்டின...

அன்பு

 அன்பு       அன்பினது வழி கரடுமு ரடாகவும்   பள்ளத்தாக்குகள் நிறைந்ததாகவும் இருப்பினும், அன்பு உங்களை அழைக்கும் போது  அதைப்  பின்பற்றிச் செல்லுங்கள். அந்த அன்பு  தன்னுடைய சிறகுகளால் மூடி உங்களைப்  பாதுகாக்கும் போது , அதனிடையே நீங்கள்  உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதன் சிறகுகளின் இடையிலே மறைந்துள்ள குத்துவாள்  உங்களை ஊறு  செய்தாலும் அதனால் பாதகமில்லை.      அன்பு உங்களுடன் உரையாடும்போது அதன்  குரலொலி உங்கள் கனவுகள் அனைத்தையும்  வாடைக்காற்று பூங்காவை அழித்து விடுவதைப்  போலச் சிதறச் செய்வது போல் இருப்பினும்  நீங்கள் அதன் வார்த்தையை நம்புங்கள்.  ஏனெனில், அன்பு எப்படி உங்களுக்கு முடி  சூட்டுகிறதோ அப்படியே உங்களை அழிக்கிறது.   அது எவ்வண்ணம் உங்களை வளர்க்கிறதோ   அவ்வண்ணமே உங்களைத் தேய்க்கிறது.      உங்களின் உச்சிக்கு அது உயர்ந்து சூரியன் முன்  அசைந்தாடும் பசிய இளந்தளிர்களை எல்லாம்  எங்கனம் அது தடவிக் கொடுத்துத் தழுவி  நிற்க...