இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக இந்தப் பூக்கள் உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய கால்களை அர்ச்சிக்க இவை கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல் பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை யார் வாங்குவார்கள்? ◆ இவை எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின் கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக் கலங்கும் இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம் கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது சமரசம் செய்து கொள்ள சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான் இதயமுள்ள எந்த மனிதனையும் இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...