பின்னர் ஒரு வணிகன், ' கொடுத்தலைப் பற்றியும், கொள்ளுதலைப் பற்றியும் எங்களுக்குக் கூறுங்கள் ' என , அவர் கூறத் தொடங்கினார். உங்களுக்காக நில நல்லாள் தன் பலன்களைத் தருகிறாள். நீங்கள் உங்கள் கைகளை எவ்வண்ணம் நிரப்பிக் கொள்வதென அறிந்தால் போதும். நீங்கள் தாழ்ச்சியுற மாட்டீர்கள். மண் தந்த வளத்தைப் பரிமாறிக் கொள்வதிலேயே நீங்கள் அளவற்ற வளத்தைக் கண்டு திருப்தி உறுவீர்கள். ஆயினும் அந்தப் பரிமாறுதல் தான் அன்போடும் கருணை வாய்ந்த நீதியின் மூலமும் நடைபெற வில்லை எனின், அது சிலரைப் பேராசைக்கும் மற்றும் பலரைப் பசிப்பிணிக்கும் ஆளாக்கி விடும். அங்காடி வீதியிலும், கடலிலும், வயலிலும், திராட்சைத் தோட்டத்திலும் உழைக்கும் உழைப்பாளிகளாகிய நீங்கள், நெசவாளர்களையும், குயவர்களையும், வாசனைத் திரவியம் சேகரிப்பவர்களையும் காணும் போது, அந்த நேரத்திலே, உங்கள் மத்தியிலே வந்து உங்கள் துலாக் கோலைத் தூயதாக்கிப் ...