முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 19, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வழிபாடு

     கடவுளை நோக்கி நிற்கும் ஆசையே பிரார்த்தனையின் தெளிவான லட்சியம் ஆகும். - பிலிப்ஸ் புரூக்ஸ்       கடவுளிடம், இது 'வேண்டும்' என்று குறிப்பிடாமல் பொதுவாகப் பிரார்த்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதைக் கடவுள் நன்கு அறிவார். - ஸாக்ரடீஸ்.         மனிதனுடைய இதயம் ஊமையாய் இருந்தாலன்றி கடவுள் ஒரு நாளும் செவிடாய் இருப்பதில்லை. - குவார்ல்ஸ்      கடவுளிடம் மக்கள் பிரார்த்திப்பது எல்லாம் இரண்டும் இரண்டும் நான்கு ஆகாமல் இருக்க வேண்டும் என்பதே. - ருஷ்ய பழமொழி      நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ  அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார். - ஜெரிமி டெய்லர்.      நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டாம். ஆனால் வேண்டுவதற்கு எல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம். - ஜெரிமி டெய்லர்      ' கடவுளே! தைரியம் அருளும்' என்று பிரார்த்தித்தால்,  துன்பத் தீயில் தள்ளுவதே அவர் அருளும் வழி. - ஸெஸி      என் பிரார்த்தனைகளுக்கு எல்லாம் கடவுள் அருளவில்லை என்பதற்காக அவருக்கு வந்த...