முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குற்றம் காணல்

  தன்னைக் காண்பதுவே மிகக்  கடினமான காரியம். பிறர் செயல்களில் குற்றம் காண்பதுவே மிக எளிதான காரியம். - தேல்ஸ்  தீயோர் தம் குற்றங்களைத் தாமே மன்னித்து விடுவர்; நல்லோர் இனிமேல் அத்தகைய குற்றங்கள் செய்யாதிருப்பர்; முதற் குற்றத்தைச் சரியென்று சாதிப்பவன் மூன்றாவது குற்றம் செய்தவனாகின்றான். - பென் ஜான்ஸன்  பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் விசேஷ லட்சணம். - சிசரோ  பிறர் குற்றங்களை நம் கண் முன் வைத்துக் கொள்கிறோம்.  நம் குற்றங்களை நம் பின்புறம் வைத்துக் கொள்கிறோம். - செனிக்கா  ஒருவனிடம் குறைகாண்பது கடவுளிடம் குறை காண்பதாகும்.  கடவுள் அவனிடம் விளங்க விரும்பாத பொழுது நாம் ஏன் மனிதனைக் குறை கூற வேண்டும்? - பால் ரிச்சர்ட்  நாம் பிறரிடம் கண்டு பரிகாசம் செய்யுங் குற்றங்கள் நமக்குள் நம்மையே பரிகாசம் செய்யும். - ப்ரௌன்  எல்லா விஷயங்களிலும் நல்ல அம்சத்தைக் காணவே எப்பொழுதும் முயல்க.  அநேகமாக ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல அம்சம் உண்டு. - ஆவ்பரி  பிறர் குற்றம் கூறினால் அதை எதிர்க்கவும் முடியாது.  காப்பாற்றிக் கொள்ளவும் முடியாத...

வணக்கம்

  உயர்ந்ததினிடம் உண்டாகும் பக்தியிலும் உயர்ந்த உணர்ச்சி கிடையாது. - கார்லைல்  வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம்.  - கோல்ரிட்ஜ்  மக்கள் அனைவரும் பக்தர்களே.  சிலர் புகழையும் பலர் பெரும்பாலோர் சுகத்தையும் வணங்குவர். - கிரீஷியன்  அன்பும் நம்பிக்கையும் உடையவரே ஆண்டவனை வணங்குபவர். - அகஸ்டைன் ஞானி 

கருணை

  கருணையானது பிழியப்படுவதன்று. மழைபோல் பொழிவதாகும். அது அளிப்போனையும் பெறுவோனையும் ஆசிர்வதிக்கும்.  அதுவே ஆற்றல்களில் தலைசிறந்த ஆற்றல்.  அதுவே கடவுளின் இலட்சணம்.  நீதியின் கடுமையைத் தணிக்கும் கருணையுடன் கூடிய மனித சக்தியே கடவுள் சக்தியை ஒக்கும். -ஷேக்ஸ்பியர் கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான். ஷெரிடன்  தீயோர் கருணையையும், பேராசைக்காரர் வண்மையையும், கர்விகள் பணிவையும் விரும்புவர் பிறரிடத்தில்.  - கோல்டன்  கடவுளின் பிரதம லட்சணம் கருணையே.  - பிளச்சர்  கோழைகள் குரூரமாய் நடப்பர் வீரர்கள் கருணை உடையவர். - ஜான்கே  இனிய கருணையே பெருந்தன்மையின் அடையாளமாகும். - ஷேக்ஸ்பியர்   

சான்றோர்

     பிறர்க்கு இன்பம் அளிப்போரே பாக்கியவான்கள்.  பிறரிடம் சச்சரவை நீக்கி சாந்தியை விளைவிப்போரே பாக்கியவான்கள். - பீச்சர்  இவர் அனைத்தையும் தியாகம் செய்தார்; அவ்வளவு அதிகமாக அதைச் செய்தார்; அதிகமாக மன்னிக்கவும் இரங்கவும் செய்தார்.யாரையும் துவேசித்ததில்லை. - மாஜினி கல்லறைமீது  சால்பின் சாரம் அறத்தைச் செய்வதற்கு அறமாகிய காரணமே போதும் என்பதே. - எமர்சன்  சான்றோர் என்பவர் குறைகளை அறியாதவர் அல்லர்; குறைகள் இருந்தும் அவைகளைத் திருத்திக் குணங்களை உண்டாக்கிக் கொண்டவரே சான்றோர் ஆவர். - ஷேக்ஸ்பியர்  எனக்குத் தெரிந்தவற்றில் சிறந்ததையும் என்னால் செய்யக் கூடியதில் தலைசிறந்ததையுமே செய்கின்றேன்.  இறுதிவரை அப்படியே செய்துகொண்டிருப்பேன் .  இறுதியில் நான் செய்தது நியாயமாகுமானால் இப்பொழுது எனக்கு விரோதமாகச் சொல்வதெல்லாம் எள்ளளவும் நிற்காது போகும்.  இறுதியில் நான் செய்தது தவறாய் முடியுமானால் இவர் செய்தாலும் தவறு சரி ஆகிவிடாது. - லிங்கன்  பணம், படிப்பு, பதவி முதலியவைகளில் பிறரைப்போல் இருப்பதே சுகம் என்று எண்ணுகிறோம்.  ஆனால் கடவுளோ துன்பத்தையும் ...

தனிமை

     உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருபொழுதும் தனித்தவராகார்.  - ஸ்ர்பிலிப்       கொள்கை உறுதியாயிருப்பின் தனிமையாயிருப்பது தனிமையாகாது . - அனர்பாஷ்      தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது. - இப்சன்     உயர்ந்த எண்ணங்களின் தோழமை உடையோர் ஒருநாளும் தனிமை காண்பதிலர் . - பிலிப்      தனிமையாயிருக்கச் சக்தி இல்லாததினாலேயே சகல துன்பங்களும் விளைகின்றன. - லா புரூயர்      தனிமையாய் வாழ ஏன் நாம் அஞ்ச வேண்டும்? நாம் தன்னந் தனியாய் இறக்கத்தானே சர்வேஸ்வரனுடைய திருவுள்ளம்? - கெபிள்     தர்ம நெறி தவறியவரே தனியாயிருப்பவர். - டைடெரெட்      எந்தக் காலத்திலும் அறிஞர்கள் ஏழைகளினும் அதிகமான எளிய வாழ்க்கையே வாழ்ந்துளர் . - தோரோ      உலகத்தில் வெகு சிலரே தனியாக வாழத் தகுதியுடையவர்.  அவர்களுக்கு உலகத்தின் மாயையை அறியப் போதுமான லௌகிக ஞானமும், சகல மாயையையும் வெறுத்துத் தள்ளப் போதுமான அறவொழுக்கமும். - கௌலி     

துறவு

     இந்த உலகில் மூன்று விதத் துறவுகள் :-      அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு;  அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு; பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு.  இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே . - ரஸ்கின்      எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை.  ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை.  - பார்க்கர்      

கடமை

     கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன்.  - செல்ஸன்      உன் கடமையைச் செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய்.  - கதே      கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிகாட்டிகள் உள.  இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.  - அனடோல் பிரான்ஸ்  சாந்தம், குதூகலம் - இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன.  இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன .  - ஆர். எல். ஸ்டீவன்ஸன்      நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம்.  ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம். - ஸ்தே      பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது?  அவரை நல்லவராக்குவதா ? நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும்.  அவன் நானே.  பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும்.     - ஆர். எல். ஸ்டீவன்ஸன்   ...

மூட நம்பிக்கை

     மூட நம்பிக்கை மனித அமைப்பிலேயே ஓர் அம்சம்.  அதை ஓட்டிவிட்டோம் என்று மனோராஜ்யம் செய்யும் பொழுது அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கியிருக்கும்.  தனக்கு அபாயம் வராது என்ற நிலைமையில் திடீரென்று வெளியேறும்.  - கதே       மூட நம்பிக்கை பயந்து பதுங்கும்; அதனிடம் அதர்ம நினைவே அதிகம்; கடவுளிடம் நம்பிக்கை கிடையாது; துர்த் தேவதைகளை அஞ்சி நடுங்கும். - நியூமன் 

அறிவீனம்

      மூடன் தன்னை அறிவாளி என்று மதித்துக் கொள்கிறான். ஆனால் அறிவாளியோ தன்னை முட்டாள் என்று அறிவான்.  - ஷேக்ஸ்பியர்      தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர்.  - போப்       முட்டாள்கள் தவறு செய்தால் அதனால் அவர்க்கு விளையும் தீமையினின்று அவர்களைக் காப்பாற்றி விட்டால், உலகத்தை முட்டாள்களால் நிரப்பியவர்களாவோம்.  - ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்       ஒவ்வொருவனும் பிழை செய்யக் கூடியவனே.  ஆனால் மூடனைத் தவிர வேறு யாரும் பிழையை விடாமல் பிடித்துக்கொள்ளார்.  - லிஸரோ       உண்டென்றோ அல்லது இல்லையென்றோ பகுத்தறியாது பகர்வோரே மூடர்கள், அனைவரிலும் தாழ்ந்தவர்.  - தாந்தே       மூடன் பிறரைக் குறை கூறுவான்; அரைகுறை அறிவாளி தன்னைக் குறைகூறிக் கொள்வான்.  அறிவு முற்றியவன் தன்னையும் குறை கூறான், பிறரையும் குறை கூறான்.  - ஹெர்டர்      தங்கள் அபிப்பிராயத்தை ஒரு பொழுதும் மாற்றிக் கொள்ளாதவர் மூடரும் இறந்தவருமே.  - லவல்   ...