முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இறுதி

      அப்போது மாலைக்காலம் ஆயிற்று.     ஆல் மித்ரா என்னும் அத் தீர்க்கதரிசினி, 'இந்த நாளும், இந்த இடமும், பல தத்துவங்கள் அனைத்தையும் விளக்கிய உங்களுடைய ஆத்மாவும் வாழ்க என்றாள் .     அதற்கு அவர் பேசியவன் நானா?     கேட்பவருள் நானும் ஒருவன் அல்லனோ' என்றார் .     பின்னர் அவர் கோயிலின் படிக்கட்டுகளை விட்டுக் கீழிறங்கிச் சென்றார்.  எல்லா மக்களும் அவரைப் பின்தொடர, அவர் கப்பலைச் சென்று அடைந்து, அதன் மேல் தட்டில் ஏறி நின்றார்.  ஆங்கு நின்று அவர் மக்களை நோக்கித் தம் குரலை உயர்த்திக் கூறத் தொடங்கினார்.     ஆர்பலீஸ் நகர மக்களே, உங்களை விட்டுப் பிரிந்து செல்லக் காற்று என்னைப் பணிக்கிறது.  காற்றைக் காட்டிலும் நான் விரைவு குறைந்தவனே.  ஆயினும் நான் போகத் தான் வேண்டும்.     நாங்கள் துறவிகள், நாடோடிகள்; எப்போதும் தனித்த நெறியைத் தேடுபவர்கள்; எங்கும் ஒரு நாளைக் கழித்த இடத்திலே மறு நாளைத் தொடங்காதவர்கள், மற்றும் உதிக்கின்ற ஞாயிறு மறைந்த மாலைக் கால ஞாயிறு விட்ட இடத்திலே எங்களைக் காண்பதில்லை.  நிலம் உறக்கத்தில்...

மரணம்

      ஆல்மித்ரா பின்னர் அவரை நோக்கி, 'நாங்கள் இப்போது மரணத்தைப்பற்றி விளக்கங் கேட்கிறோம்' என, அவர் சொல்வார்:     மரணத்தின் இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டும்.     ஆனால், வாழ்க்கையின் இதயத்திலே தேடினால் அன்றி, நீங்கள் அதை எவ்வண்ணம் காண இயலும்?     இரவில் மட்டுமே காணக் கண் படைத்திட்ட ஆந்தை, பகலில் காண இயலாததால் ஒளியின் தத்துவத்தை அஃது அறிய முடியாது.     உண்மையாகவே மரணத்தின் ஆற்றலை நீங்கள் காண விரும்பினால் உங்கள் வாழ்வின் பரு உடலைக் காண, இதயத்தை நன்கு திறந்து விடுங்கள்.     ஏனெனில், வாழ்வும் மரணமும் நதியும் கடலும் போல் ஒன்றேயாகும்.     உங்கள் நம்பிக்கை, ஆசை இவற்றின் ஆழத்திலே எட்டாத் தொலைவின் மௌன அறிவு தங்கியுள்ளது.     பனிப்படலத்தின் கீழே நிலத்தின் அடியில் புதைந்துள்ள ஒரு விதை கனவு காண்பதைப் போல, உங்கள் இதயம் வசந்தத்தைப் பற்றிக் கனவு காண்கிறது.     கனவுகளை நம்புங்கள். ஏனெனில், அவற்றிலே தான் மோட்சத்தின் வாயில் அமைந்திருக்கிறது.     மரணத்துக்கு நீங்கள் அஞ்சி நடுங்குதல் கௌரவத்தின் அடையாளமாகத...

சமயம்

      பின்னர் ஒரு வயது முதிர்ந்த பூசாரி அவரை நோக்கி, 'எங்களுக்குச் சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள்' என அவர் கூறினார்.     நான் உங்களிடையே இன்று, வேறு எதைப் பற்றியாவது பேசினேனா? சமயம் என்பது எல்லாச் செயல்களும் எல்லாச் சிந்தனைகளுமேயன்றோ?     அதுதான் செயல்களும் சிந்தனைகளும் இல்லையாயினும், கைகள் கல்லைச் செதுக்கும் போதோ, தறியைச் செப்பனிடும் போதோ, மக்கள் ஆத்மாவிலிருந்து திடீரென உதயமாகும் வியப்பும் உணர்வுமே அன்றோ?     யாரால் தன்னுடைய செயல்களில் இருந்து தன் விசுவாசத்தைத் துண்டித்துக் கொள்ள முடியும்? அல்லது தன் தொழிலில் இருந்து தன்  நம்பிக்கையைப் பிரிக்க முடியும்?     யார் தன்னுடைய காலத்தைத் தனக்கு முன்னால் பரப்பி, இது கடவுளுக்காக, இஃது எனக்காக என்றும், இஃது என் ஆத்மாவுக்கு, இஃது என் உடலுக்கு என்றும் கூற முடியும்?     எல்லா நாழிகைகளும் ஓர் ஆத்மாவிலிருந்து மற்றோர் ஆத்மாவுக்குச் சிறகடித்துப் பறப்பனவே.      யார் தம்முடைய ஒழுக்கமே, தனக்குச் சிறந்த ஆடை எனக் கொள்கின்றனரோ அவருக்கு வேறு ஆடையே தேவை இல்லை.     புய...

அழகு

      அதன் பின் ஒரு கவிஞன் அவரைப் பார்த்து, 'ஐய ! அழகைப் பற்றிச் சிறிது சொல்லுங்கள்' என்றான்.  அவர் சொல்லத் தொடங்கினார்: அழகு எங்கே உள்ளது என்று உங்களால் தேட முடியுமா?  அந்த அழகே உங்கள் வழியாகவும் வழித்துணையாகவும் இருந்தாலன்றி, அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அந்த அழகே உங்கள் வார்த்தைகளின் கோர்வையாக அமைந்தாலன்றி, அதைப்பற்றி நீங்கள் எப்படிப் பேசமுடியும்? வருத்தப்படுவோரும் துன்பப்படுவோரும், அழகு என்னும் நங்கை, பரிவும் கனிவும் உடையவள்; தனக்கே உரிய பெருமிதத்தினால் நாணத்தோடு நடைபயிலும் கன்னித் தாயைப் போல், அந்த அழகு நம்மிடையே நடை பயில்கிறாள் என்கின்றனர். ஆர்வம் மிக்கவர்களோ அப்படியன்று.  அழகென்பது வன்மையும் அச்சமும் நிறைந்தது.  புயலைப் போல, அது நம் காலடியில் உள்ள பூமியையும் மேலுள்ள விண்ணையும் அசைத்து ஆட்டிவிடுகின்றது என்கின்றனர். களைப்புற்றவர்களும் சலிப்படைந்தவர்களும், அழகென்பது நம் காதின் அருகிலே கிசுகிசுக்கும்.  மென்மையாக ரகசியமாகப் பேசும் தன்மை வாய்ந்தது.  நம்முடைய ஆத்மாவிலேதான் அது உரையாகும் என்றும், சிறிய சுடர் இருளுக்கஞ்சி நடுங்கு...

மகிழ்ச்சி

     ஆண்டுக்கு ஒருமுறை அந்நகரத்திற்கு வருகின்ற ஒரு துறவி, அவர் முன் வந்து. 'எமக்கு மகிழ்ச்சியைப் பற்றிக் கூறுங்கள்' என, அவர் கூறுவார்:     மகிழ்ச்சி என்பது விடுதலை கீதம்.  ஆனால், அது விடுதலையன்று.  அது உங்கள் ஆசையின் மலர்ச்சி.  ஆனால், அது உங்கள் ஆசையின் பலன் அன்று.  அது உயர்ச்சி என்று கூறப்படும் பெரும்பள்ளம்.  ஆனால், அது பள்ளமுமன்று உயர்ச்சியும் அன்று.  அது சிறைப்படுத்தப் பட்ட சிறகுடைய ஒரு பறவை.  ஆனால், அது அப் பறவையைச் சூழ்ந்துள்ள வெளியன்று .  ஆம்! உண்மையில் மகிழ்ச்சி ஒரு விடுதலை கீதமே!     நீங்கள் உங்கள் இதயத்தின் முழுமையோடு மகிழ்ச்சி எனும் அந்த இசையைப் பாட நான் மகிழ்வேன்.  ஆனால், நீங்கள் அவ்வின்னிசையிலே உங்கள் இதயத்தை எல்லாம் இழந்து விட ஒப்புக் கொள்ள மாட்டேன்.     உங்களிலே சில இளைஞர்கள், யாவும் மகிழ்ச்சியிலே தான் உள்ளதென்னும் நோக்கத்தோடு அதனையே அடைய முயல்கின்றனர்.     நீங்கள் அவர்களைச் சீர்தூக்கி நியாயம் கூறிக் கண்டிக்கின்றீர்கள்.     நான் அவர்களைப் பற்றித் தீர்ப்பளிக்க மாட்ட...