முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 9, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்மா

      உடல் - அது மண்ணேயன்றி வேறென்று. ஆன்மா - அது நித்தியத்தின் முகை ஆகும்.  -கல்வெர்வெல்       மனிதனையும் அவன் செயல்களையும் அடக்கி ஆள்வது ஜட  சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும். - கார்லைல்       ஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒரு முறை திறந்துவிட்டால், பின் யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர் என்று கூறிவிட முடியாது. - ஹோம்ஸ்       அறிவு கண்ணில் விளங்கும் - அன்பு முகத்தில் விளங்கும் - ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்த சிறு குரலிலேயே. - லாங்பெலோ        மனத்தில் உயர்ந்த எண்ணங்களும் இலட்சியங்களும் இருக்குமானால், ஆன்மா உடம்பில் இருக்கும் பொழுதே ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதாகும். - ஸெனிகா   ஆன்மா சூரியனை ஒக்கும். இரவில் அஸ்தமித்து விடுகிறது. கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால் வேறு இடத்தில் வெளிச்சம் பரப்புவதற்காகவே சென்றுள்ளது என்பதே உண்மை. - கதே       ஆன்மாவின் செல்வம் அது எவ்வளவு அதிகமாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்; ஆன்மாவின் வறுமை எவ்வளவு குறை...

தத்துவ ஞானம்

       தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும்.  முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய்.  மன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுக மரணம். - கோல்ரிட்ஜ்       நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடமையே அதன் இலட்சணம். - தோரோ       வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும். - வால்டேர்       உண்மையான தத்துவ ஞானம், இல்லாததைச் சிருஷ்டிக்காது, உள்ளதையே நிரூபித்து உறுதி செய்யும். - கலின்       தவரான அபிப்பிராயத்தை ஒழிப்பதும், அறிவைத் தூய்மை செய்வதும், நமது அறியாமையின் ஆழத்தை உறுதி செய்வதுமே தத்துவ ஞானத்தின் தொழில். - ஹாமில்டன்       தத்துவ ஞானத்தின் லட்சியம் அறம். - பீட்டர் பெயின்       அறிவின் உதவியின்றி உணர்ச்சி மூலம் நம்பப் படுபவைகளுக்குத் தவறான காரணம் கண்டுபிடிப்பதே தத்துவ சாஸ்திர...