முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடவுள்

      கடவுள் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை . - டால்ஸ்டாய்      மக்களிடையே கடவுளை நாடுக. - நோவாலிஸ்      நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது. - எக்கார்ட்       கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான்.  அதனால் மனிதன் தன்னைப் போலவே கடவுளையும் படைத்திருக்கிறான். - ஹெர்மீஸ்        கடவுள் கோவில் கட்டும் இடத்தில் எல்லாம் சாத்தானும் ஒரு கோவில் கட்டிவிடுகிறான்.  அதுமட்டுமா?  அவன் கோவிலுக்கே அடியார்களும் அதிகம். - டீபோ      மனிதனுக்கு எத்துணைப் பைத்தியம்! ஒரு புழுவைச் சிருஷ்டிக்க முடியாது.  ஆயினும் கணக்கில்லாத கடவுளரைச் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கிறான். - மான்டெய்ன்      கடவுள் தகுதி உடையவர்க்குத் தாட்சண்யம் காட்டுவார்.  தகுதி அற்றவர்களே நியாயத்தை மட்டும் வழங்குவர். - பிளாட்டஸ்      தெய்வபக்தி லட்சியமன்று, சாதனமே.  அந்தச் சாதனத்தால் ஆன்ம விருத்தி அடையலாம்.வேஷதாரிகளே தெய்வ பக்தியை லட்சியமாகச் செய்து கொள்வர். - க...

வாய்மை

     உண்மையே ஞானத்தின் உறைவிடம்.  - பழமொழி      உண்மை உரைத்துச் சாத்தானை நாணமடையச் செய்க. - ராபிலே       கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே. - போப்      உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே . - ஹீன்       உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம். - பாஸ்கல்        உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஓலைக் குடிசையிலேயே வாழ்கின்றது.- ஷேக்ஸ்பியர்      உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம், அவ்வளவு கம்பீரம்:- அதைப் பார்த்தால் போதும் நேசியாமல் இருக்க முடியாது. - ட்ரைடன்       உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன்.  உண்மை அறிவதொன்றே என் விருப்பம். - லாக்ரடீஸ்      கடவுள் வலது கையில் முழு உண்மையையும், இடது கையில் உண்மையைத் தேடுவதில் அழியா ஆசையையும் வைத்துக்கொண்டு, எது வேண்டும் என்று என்னைக் கேட்டால் - இடது கையில் உள்ளதை விரும்பினால் என்றும் இருட்டிலேயே இருக்க வேண்டியிருப்பினும் - நான் இடது கை முன் தலையைத்...

மறம்

     வாழ்வு என்ற ஆடையில் எப்பொழுதும் இரண்டு வகை நூல்கள் இருந்தே தீரும்.  அவை நன்மை, தீமையே! - ஷேக்ஸ்பியர்     "அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை." - உலகப் பொதுமறை திருக்குறள்      மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே. - ரஸ்கின்       தீயொழுக்கத்திற்குக் கட்டுப்பாடில்லை என்று நினைப்பது தவறு.  தீயவனே எஜமானர்கள் அனைவரிலும் கொடிய எஜமானனுக்கு அடிமையாய் இருக்கிறான்.  அக்கொடிய எஜமானன் யார்?  அவனுடைய சொந்தத் தீய உணர்ச்சிகளே. - ஆவ்பரி      மருந்து பல சமயங்களில் பலிக்காமல் இருக்கக் கூடும்.  ஆனால், விஷமோ ஒருபோதும் பலிக்காமல் போகாது. - ரஸ்கின்   பாவம் செய்பவன் மனிதன் பாவத்துக்காக வருந்துபவன் ஞானி;  பாவத்துக்காகப் பெருமை கொள்பவன் சாத்தான். - புல்லர்      சாத்தானுடைய பந்துக்களில் ஒருவரை வீட்டுக்குக் கூட்டிச் சென்றால் போதும், அவன் குடும்பம் முழுவதுமே குடி புகுந்துவிடும். - ஆவ்பரி    ...

அறம்

     அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்!  அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளைச் செய்யத் துணிக!     அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஆப்ரஹாம் லிங்கன் அறம் என்ற தத்துவத்தை நோக்கும் பார்வை இது!     மனத்தில் குற்றமான நோக்கமே இல்லாமல் செய்கின்ற நல்ல செயல்கள் தான் அறம்.  அந்த அறம் தன்னலம் உடையதாக இருந்தால், அது வெறும் ஆடம்பரம், அறமன்று - உலக பொதுமறை திருக்குறள் .     அறத்தின் வழி நில்! அஞ்சவேண்டாம்! உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை - உன் கடவுளை - உண்மையைப் பற்றியதாகவே இருக்கட்டும்.  அங்ஙனமாயின் நீ வீழ்ந்து விட்டாலும் பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய். - ஷேக்ஸ்பியர்       அறத்தின் இலட்சணம் அறியாதவரே , 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர். - மேட்டாலிங்க்      அதர்மம் அணியும் ஆடை ஐஸ்வரியம்; தர்மம் தரிப்பது தரித்திரம்.  - தியோக்னீஸ்       பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான். - ஸெனீக்கா       குளிர் மிகுதிதான். கந்தை உடைத...

அன்பு

  அழுது கொண்டே பிறக்கின்ற உலகக் குழந்தைகள், இறுதியில் சிரித்துக் கொண்டே இறக்கும் வரைக்கும் வாழ்வியல் அறம் வகுத்துத் தந்துள்ள உலகப் பொதுமறையாளர் திருவள்ளுவர் பெருமான் அன்பு என்ற சுக உணர்வை எவ்வாறு புறம் காட்டுகிறார் என்று நோக்கலாமா ? இதோ அவரது குறட்பாவின் பொழிவு!     அன்புள்ள உடல்தான் உயிருள்ளது;  அதன் வழியில் நடந்து கொள்கிறவர்களது உடல்தான் உயிருள்ளது;  அன்பில்லாத உடல் வெறும் தோலால் போர்த்தப்பட்ட எலும்புகளே .       இப்சன் என்பவர் நார்வே நாட்டில் வாழ்ந்த ஒரு நாடக ஆசிரியர்.  அவர் பல நாடகங்கள் எழுதிப் புகழ்பெற்ற ஒரு புதுமைப் புரட்சியாளர்.  இவர் கி.பி. 1826 ஆம் ஆண்டில் பிறந்தார்.  1906 ஆம் ஆண்டின் இடையில் இறந்தார்.  இவர், அன்பு என்ற தத்துவத்தைப் பற்றி என்ன எழுதியுள்ளார் தெரியுமா?  இதோ:  "அன்பு என்பதைப்  போல, பொய்யும் புலையும் நிறைந்த மொழி, வேறு எதுவும் கிடையாது" என்கிறார்.     அதே அன்பு பற்றி எழுதுகின்ற அந்தோனி என்ற அறிஞர் ஒருவர் இப்சன் கருத்துக்கு சற்று முரணாக, "உலகத்தின் மக்களிடம் எவன் ஒருவன் உண்மையான...

இறுதி

      அப்போது மாலைக்காலம் ஆயிற்று.     ஆல் மித்ரா என்னும் அத் தீர்க்கதரிசினி, 'இந்த நாளும், இந்த இடமும், பல தத்துவங்கள் அனைத்தையும் விளக்கிய உங்களுடைய ஆத்மாவும் வாழ்க என்றாள் .     அதற்கு அவர் பேசியவன் நானா?     கேட்பவருள் நானும் ஒருவன் அல்லனோ' என்றார் .     பின்னர் அவர் கோயிலின் படிக்கட்டுகளை விட்டுக் கீழிறங்கிச் சென்றார்.  எல்லா மக்களும் அவரைப் பின்தொடர, அவர் கப்பலைச் சென்று அடைந்து, அதன் மேல் தட்டில் ஏறி நின்றார்.  ஆங்கு நின்று அவர் மக்களை நோக்கித் தம் குரலை உயர்த்திக் கூறத் தொடங்கினார்.     ஆர்பலீஸ் நகர மக்களே, உங்களை விட்டுப் பிரிந்து செல்லக் காற்று என்னைப் பணிக்கிறது.  காற்றைக் காட்டிலும் நான் விரைவு குறைந்தவனே.  ஆயினும் நான் போகத் தான் வேண்டும்.     நாங்கள் துறவிகள், நாடோடிகள்; எப்போதும் தனித்த நெறியைத் தேடுபவர்கள்; எங்கும் ஒரு நாளைக் கழித்த இடத்திலே மறு நாளைத் தொடங்காதவர்கள், மற்றும் உதிக்கின்ற ஞாயிறு மறைந்த மாலைக் கால ஞாயிறு விட்ட இடத்திலே எங்களைக் காண்பதில்லை.  நிலம் உறக்கத்தில்...