மூடன் தன்னை அறிவாளி என்று மதித்துக் கொள்கிறான். ஆனால் அறிவாளியோ தன்னை முட்டாள் என்று அறிவான். - ஷேக்ஸ்பியர் தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர். - போப் முட்டாள்கள் தவறு செய்தால் அதனால் அவர்க்கு விளையும் தீமையினின்று அவர்களைக் காப்பாற்றி விட்டால், உலகத்தை முட்டாள்களால் நிரப்பியவர்களாவோம். - ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் ஒவ்வொருவனும் பிழை செய்யக் கூடியவனே. ஆனால் மூடனைத் தவிர வேறு யாரும் பிழையை விடாமல் பிடித்துக்கொள்ளார். - லிஸரோ உண்டென்றோ அல்லது இல்லையென்றோ பகுத்தறியாது பகர்வோரே மூடர்கள், அனைவரிலும் தாழ்ந்தவர். - தாந்தே மூடன் பிறரைக் குறை கூறுவான்; அரைகுறை அறிவாளி தன்னைக் குறைகூறிக் கொள்வான். அறிவு முற்றியவன் தன்னையும் குறை கூறான், பிறரையும் குறை கூறான். - ஹெர்டர் தங்கள் அபிப்பிராயத்தை ஒரு பொழுதும் மாற்றிக் கொள்ளாதவர் மூடரும் இறந்தவருமே. - லவல் ...