முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறிவு

 'அறிவு' - ஆம், அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு. - ஷேக்ஸ்பியர் கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்! - எமர்சன் எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும். - சாக்ரடீஸ் சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான். - கார்லைல்  நூலறிவு பேசும் - மெய்யறிவு கேட்கும். - ஹோம்ஸ்  ஞானத்தின் முதல் வேலை தன்னை அறிதல்; அன்பின் முதல் வேலை தனக்குத் தான் போதுமானதாயிருத்தல். - ரஸ்கின்  நுண்ணறிவு அன்புடன் சேர்ந்து விட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது. - கதே  மனோ விகாரங்களே வாழ்வாகிய கப்பலைச் செலுத்தும் காற்று. அறிவே அதை நடத்தும் சுக்கான். காற்றின்றேல் கப்பல் நின்றுவிடும். சுக்கானின்றேல் தரை தட்டிவிடும். - ஷூல்ஜ்  வாழ்வு யோசிப்பவனுக்கு இன்ப நாடகம், உணர்பவனுக்குத் துன்ப நாடகம். - வால்ப்போல்  நீ எண்ணுவது எல்லோருக்கும் சொந்தம், நீ உணர்வதே உனக்குச் சொந்தம். - ஷில்லர்   மனிதனுடைய உடைமையாயிருக்கக கூடியது அறிவு ஒன்றே . ஆகையால் அறிவை விருத்தி செய்வதே ஆசைப்பட்டு அடைய முயலத்...

நன்மை - தீமை

 நன்மை என்றும் தீமை என்றும் இல்லை; அவ்விதம் ஆக்குவது மனமே. - ஷேக்ஸ்பியர் 'நன்மை, தீமை' - நம் அறியாமையால் எழும் இரு பெயர்கள். நம் மனத்திற்கு உகந்ததை நன்மை என்கிறோம், பிறர் மனத்திற்கு உகந்ததைத் தீமை என்கிறோம்.  ' தீமை' -  நமக்குத் தீங்கு இழைப்பது. 'நன்மை' அநேகமாய்ப் பிறர்க்குத் தீங்கு இழைப்பது. - பால் ரிச்சர்டு  நேர்வழியில் அடைய முடியாததை ஒரு நாளும் நேர் அல்லாத வழியில் அடைந்துவிட முடியாது. - கதே   அற்ப விஷயங்கள் மனத்தைக் கலக்கினால் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம். துரதிர்ஷ்ட காலத்தில் அற்ப விஷயங்கள் உணர்ச்சிக்கு எட்டுவதில்லை. - ஷோப்பனார்   எப்பொழுதும் நமது சூரிய ஒளியில் ஒரு கறுப்புப் புள்ளி உண்டு, நமது நிழலே அது. - கார்லைல்   ஐயோ பேயை அடக்குவதினும் எழுப்புவது எளிது. - காரிக்   நன்மை தீமையினின்று பிறவாவிடினும்  அது தீமையை எதிர்ப்பிலேயே அடையக்கூடிய அபிவிருத்தி அனைத்தையும் அடையும். - ரஸ்கின்  செல்வர், வறிஞர் காரியத்தில் சிரத்தை காட்டும் பொழுது ,அது தர்மம் எனப்படும். வறிஞர், செல்வர் காரியத்தில் சிரத்தை காட்டும் பொழுது, அது ஒழுங...

இலட்சியம்

  இலட்சியம் இல்லாத மனிதன் திசையறி கருவி இல்லாத கப்பலை ஒப்பான். -  ஆவ்பரி        மேல் நோக்காதவன் கீழேயே நோக்குவான். உயரப் பறக்கத் துணியாத ஆன்மா ஒருவேளை தரையில் புரளவே விதிக்கப்பட்டிருக்கும் .  - பீக்கன்ஸ் பீல்டு        தாழ்ந்த இலட்சியத்தில் ஜெயம் பெறுவதைவிட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறுவதே சிலாக்கியம். - ராபர்ட் பிரௌணிங்       எவ்விதம் இறந்தான் என்பதன்று கேள்வி.  எவ்விதம் வாழ்ந்தான் என்பதே கேள்வி. -  டாக்டர் ஜான்சன்            தன் சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழியவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாயிருத்தல் அவசியம். - ரிக்டர்       உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி - இம்மூன்றையும் மனிதன் அநுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது. - பழமொழி       மானிட உள்ளத்தின் தலைசிறந்த சிருஷ்டிகள் கூடப் பரிபூரணத்தில் மிகக் குறைந்தவை என்பது முற்றிலும் நியாயம். - வாவனார்கூஸ்       ஒருவனுடைய லட்சிய...

ஆன்மா

      உடல் - அது மண்ணேயன்றி வேறென்று. ஆன்மா - அது நித்தியத்தின் முகை ஆகும்.  -கல்வெர்வெல்       மனிதனையும் அவன் செயல்களையும் அடக்கி ஆள்வது ஜட  சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும். - கார்லைல்       ஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒரு முறை திறந்துவிட்டால், பின் யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர் என்று கூறிவிட முடியாது. - ஹோம்ஸ்       அறிவு கண்ணில் விளங்கும் - அன்பு முகத்தில் விளங்கும் - ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்த சிறு குரலிலேயே. - லாங்பெலோ        மனத்தில் உயர்ந்த எண்ணங்களும் இலட்சியங்களும் இருக்குமானால், ஆன்மா உடம்பில் இருக்கும் பொழுதே ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதாகும். - ஸெனிகா   ஆன்மா சூரியனை ஒக்கும். இரவில் அஸ்தமித்து விடுகிறது. கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால் வேறு இடத்தில் வெளிச்சம் பரப்புவதற்காகவே சென்றுள்ளது என்பதே உண்மை. - கதே       ஆன்மாவின் செல்வம் அது எவ்வளவு அதிகமாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்; ஆன்மாவின் வறுமை எவ்வளவு குறை...

தத்துவ ஞானம்

       தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும்.  முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய்.  மன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுக மரணம். - கோல்ரிட்ஜ்       நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடமையே அதன் இலட்சணம். - தோரோ       வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும். - வால்டேர்       உண்மையான தத்துவ ஞானம், இல்லாததைச் சிருஷ்டிக்காது, உள்ளதையே நிரூபித்து உறுதி செய்யும். - கலின்       தவரான அபிப்பிராயத்தை ஒழிப்பதும், அறிவைத் தூய்மை செய்வதும், நமது அறியாமையின் ஆழத்தை உறுதி செய்வதுமே தத்துவ ஞானத்தின் தொழில். - ஹாமில்டன்       தத்துவ ஞானத்தின் லட்சியம் அறம். - பீட்டர் பெயின்       அறிவின் உதவியின்றி உணர்ச்சி மூலம் நம்பப் படுபவைகளுக்குத் தவறான காரணம் கண்டுபிடிப்பதே தத்துவ சாஸ்திர...

மதம்

      நூறு விதமாய்க் கூறினாலும் மதம் ஒன்றுதான் உண்டு.  - பெர்னார்ட்ஷா       உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம். - தாமஸ் பெய்ன்       மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ?' என்னும் பயமே மதம்.  - ஜார்ஜ் எலியட்        அவனியில் உள்ள சமயங்களில் அறத்தாறு உய்ப்பது ஒன்றே உண்மைச் சமயம். -ஸவனரோலா       நம்மிடம் பகைப்பதற்குப் போதுமான சமய உணர்ச்சி உளது. ஆனால் அன்பு செய்வதற்குப் போதுமான அளவு இல்லை. - ஸ்விப்ட்        ஞானிகள் அனைவர்க்கும் ஒரே மதமே.  அவர்கள் தத்தம் மதத்தை வெளியே கூறுவதில்லை. - லார்ட் ஷாப்ட்ஸ் பரி       பண விஷயமாய் நம்பத் துணியாத இடத்தில் ஆன்ம விஷயமாய் நம்பத் துணிவது எவ்வளவு விபரீதம்! மதாசாரியர் காலணா கொடுத்தால் அது செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகிப்போம். ஆனால் அவர்கள் கூறும் மதத்தை ஆராயாது சரி என்று அங்கீகரித்து வருகிறோம். என்னே மனிதர் மடமை! -  பென்       சரியாக அறியாத சமயமே...

நரகம்

      நரகத்திற்குச் செல்ல மனிதர் எவ்வளவு  சிரமம் எடுத்துக்கொள்கின்றனர்.  அதில் நேர் பாதி போதுமே சுவர்க்கத்திற்குச் செல்ல - அதை நல்வழியில் எடுத்துக் கொள்ளும் துணிவு மட்டுமே தேவை. பென் ஜான்ஸன்       நரகம் என்பது வேறெங்குமில்லை. நன்றாய் ஆராய்ந்தால், அது பாவமேயாகும்.  கடவுளினின்று பிரிந்திருப்பதே நரகம். - பாஸ்ட்       நரகம் என்பது யாது? காலங்கடந்து கண்ட உண்மை; பருவம் கடந்து செய்த கடமை. - எட்வார்ட்ஸ்      நரகத்திற்குள்ள வழி எளிது, கண்களை மூடிக்கொண்டே போகலாம். - பியன்      நான் நரகம் உண்டென்று நம்ப மட்டும் செய்யவில்லை.  நரகம் உண்டென்று அறியவும் செய்பவன்.  அது மட்டுமா? நரகத்துக்கு அஞ்சி அறநெறி நிற்பவர் யாவரும் நரகத்தில் கால் வைத்துவிட்டரே என்பதையும் அறிவேன். - ரஸ்கின்       சாஸ்திரிகளும், சாவோரும் நரகத்தைப் பற்றிப் பேசட்டும்.  ஆனால் நரக வேதனைகள் எல்லாம் என் இதயத்திலேயே உள்ளவை. - ஷேக்ஸ்பியர் 

மோட்சம்

      அன்பும்  அறமும்  எவ்வளவோ சுவர்க்கமும் அவ்வளவே. -  பார்க்கர்       சுவர்க்கத்தின் ஆசை ஒருவனைச்  சுவர்க்க மயமாய் ஆக்கிவிடும். - ஷேக்ஸ்பியர்       அறம்  விரும்பு; அதுவே வீடு. - மில்டன்       மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது  சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம். - பேக்கன்        நான்  சுவர்க்கத்தில் இருக்க வேண்டுமானால், முதலில் சுவர்க்கம் என்னிடம் காணப்பட வேண்டும். - ஸ்டான்போர்டு       ஆன்மாவுக்கு விமோசனம் சுவர்க்கத்திலேயே என்று நடப்பவன் விமோசனம் பெறுவதில்லை. ஆனால் அன்பு வழியில் அன்பு நெறியில் நிற்பவனை ஆண்டவன் தானே தன் சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வான். - வான் டைக்      சுவர்க்கத்துக்கு வெகுதூரத்தில் உள்ளது பூமி,  பூமிக்கு வெகு சமீபத்தில் உள்ளது சுவர்க்கம். - ஹேர்       வாழ்வில் கற்க வேண்டிய கடின பாடங்களில் ஒன்று உண்டு. அதைப் ப...