நரகத்திற்குச் செல்ல மனிதர் எவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்கின்றனர். அதில் நேர் பாதி போதுமே சுவர்க்கத்திற்குச் செல்ல - அதை நல்வழியில் எடுத்துக் கொள்ளும் துணிவு மட்டுமே தேவை. பென் ஜான்ஸன்
நரகம் என்பது வேறெங்குமில்லை. நன்றாய் ஆராய்ந்தால், அது பாவமேயாகும். கடவுளினின்று பிரிந்திருப்பதே நரகம். - பாஸ்ட்
நரகம் என்பது யாது? காலங்கடந்து கண்ட உண்மை; பருவம் கடந்து செய்த கடமை. - எட்வார்ட்ஸ்
நரகத்திற்குள்ள வழி எளிது, கண்களை மூடிக்கொண்டே போகலாம். - பியன்
நான் நரகம் உண்டென்று நம்ப மட்டும் செய்யவில்லை. நரகம் உண்டென்று அறியவும் செய்பவன். அது மட்டுமா? நரகத்துக்கு அஞ்சி அறநெறி நிற்பவர் யாவரும் நரகத்தில் கால் வைத்துவிட்டரே என்பதையும் அறிவேன். - ரஸ்கின்
சாஸ்திரிகளும், சாவோரும் நரகத்தைப் பற்றிப் பேசட்டும். ஆனால் நரக வேதனைகள் எல்லாம் என் இதயத்திலேயே உள்ளவை. - ஷேக்ஸ்பியர்
0 கருத்துகள்