"பாரதிதாசன் மேல்நாட்டுக் கவிகளைப் போல் கலையைக் கண்ணாடியாக்குகிறார். காலத்தையே சிருஷ்டிக்கிறார் என்பது மாத்திரமல்ல; காலத்தையே மாற்றுகிறார். காலத்தையே மாற்றுகிறார் என்பது மாத்திரமல்ல; மாறிய காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் என்பது மாத்திரமல்ல; சமயம் கிடைத்தால் முன்னேயும் பிடித்துத் தள்ளுகிறார்" - பேரறிஞர் அண்ணா கருத்தை விதையாகக் கொண்டது கவிதை; கற்பனையைக் களமாகக் கொண்டது கவிதை; கவிஞனின் உணர்வில் விளைவது கவிதை; வாழ்வில் முகிழ்ப்பது கவிதை. ' சொற்கள் சிறப்பாகக் கோர்க்கப்படுவது உரைநடை, சிறந்த சொற்கள் சிறப்பாகக் கோர்க்கப்படுவது கவிதை' - அறிஞர் ஸேம்யல் காலெரிட்ஜ் "வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர் செயங்கொண்டான்; விருத்தமென்னும் ஒன்பாவிற் குயர் கம்பன்; கோவையுலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன் கண்பாய களம்பகத்திற் கிரட்டையர்கள் வசைபாடக் காளமேகம் பண்பாக உயர்சந்தம் படிக்காசு அலாதொருவர் பகரொணாதே " "கவிதைக்கு மிகவும் நெருக்கமானவை ஒரு துண்டு ரொட்டியும் ஒரு கலயம் கஞ்சி...