நன்மை என்றும் தீமை என்றும் இல்லை; அவ்விதம் ஆக்குவது மனமே. - ஷேக்ஸ்பியர் 'நன்மை, தீமை' - நம் அறியாமையால் எழும் இரு பெயர்கள். நம் மனத்திற்கு உகந்ததை நன்மை என்கிறோம், பிறர் மனத்திற்கு உகந்ததைத் தீமை என்கிறோம். ' தீமை' - நமக்குத் தீங்கு இழைப்பது. 'நன்மை' அநேகமாய்ப் பிறர்க்குத் தீங்கு இழைப்பது. - பால் ரிச்சர்டு நேர்வழியில் அடைய முடியாததை ஒரு நாளும் நேர் அல்லாத வழியில் அடைந்துவிட முடியாது. - கதே அற்ப விஷயங்கள் மனத்தைக் கலக்கினால் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம். துரதிர்ஷ்ட காலத்தில் அற்ப விஷயங்கள் உணர்ச்சிக்கு எட்டுவதில்லை. - ஷோப்பனார் எப்பொழுதும் நமது சூரிய ஒளியில் ஒரு கறுப்புப் புள்ளி உண்டு, நமது நிழலே அது. - கார்லைல் ஐயோ பேயை அடக்குவதினும் எழுப்புவது எளிது. - காரிக் நன்மை தீமையினின்று பிறவாவிடினும் அது தீமையை எதிர்ப்பிலேயே அடையக்கூடிய அபிவிருத்தி அனைத்தையும் அடையும். - ரஸ்கின் செல்வர், வறிஞர் காரியத்தில் சிரத்தை காட்டும் பொழுது ,அது தர்மம் எனப்படும். வறிஞர், செல்வர் காரியத்தில் சிரத்தை காட்டும் பொழுது, அது ஒழுங...