ஒரு கொத்தனார் அவர் முன் வந்து நின்று, 'ஐயா! எங்களுக்கு இல்லங்களைப் பற்றிக் கூறுங்கள்', என்றார். அவர் சொல்லத் தொடங்கினார்: நகரத்தின் மதில்களிடையே ஒரு மாளிகையை நீங்கள் கட்டுவதற்கு முன்னர், உங்கள் கற்பனைக்குத் தக்க ஒரு கொடி வீட்டைக் கானிலே கட்டுங்கள் . மாலைக் காலத்தின் மங்கிய ஒளியிலே நீங்கள் எவ்வண்ணம் வீடு திரும்புவீர்களோ, அவ்வண்ணமே சேய்மைக் கண்ணே தனித்துள்ள உங்கள் உள்ளமெனும் வழிப்போக்கனும், தன் வீட்டை நோக்கியே திரும்புவான். உங்கள் பரு உடலே உங்கள் இல்லம். அந்த இல்லம் கதிரவனின் கதிரொளியிலே வளர்ந்து இரவின் அமைதியிலே உறங்குகின்றது. உங்கள் குடிசை கனவு காண்பதில்லையா? கனவோடே இந்த நகரத்தைவிட்டு நீங்கி, பூங்காவுக்கோ, குன்றின் உச்சிக்கோ போவதில்லையா? உங்கள் இல்லங்களை எல்லாம் நான் என் கைகளில் ஏந்தி, விதைப்பவன் விதை தூவுவதைப் போலக் காட்டிடையேயும் வயற்புறத்தேயும் தூவுவத...