முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இல்லங்கள்

      ஒரு கொத்தனார் அவர் முன் வந்து நின்று, 'ஐயா! எங்களுக்கு இல்லங்களைப் பற்றிக் கூறுங்கள்', என்றார்.  அவர் சொல்லத் தொடங்கினார்:

     நகரத்தின் மதில்களிடையே ஒரு மாளிகையை நீங்கள் கட்டுவதற்கு முன்னர், உங்கள் கற்பனைக்குத் தக்க ஒரு கொடி வீட்டைக் கானிலே கட்டுங்கள் .

     மாலைக் காலத்தின் மங்கிய ஒளியிலே நீங்கள் எவ்வண்ணம் வீடு திரும்புவீர்களோ,அவ்வண்ணமே சேய்மைக் கண்ணே தனித்துள்ள உங்கள் உள்ளமெனும் வழிப்போக்கனும், தன் வீட்டை நோக்கியே திரும்புவான்.

     உங்கள் பரு உடலே உங்கள் இல்லம்.

     அந்த இல்லம் கதிரவனின் கதிரொளியிலே வளர்ந்து இரவின் அமைதியிலே உறங்குகின்றது.

     உங்கள் குடிசை கனவு காண்பதில்லையா? கனவோடே இந்த நகரத்தைவிட்டு நீங்கி, பூங்காவுக்கோ, குன்றின் உச்சிக்கோ போவதில்லையா?

     உங்கள் இல்லங்களை எல்லாம் நான் என் கைகளில் ஏந்தி, விதைப்பவன் விதை தூவுவதைப் போலக் காட்டிடையேயும்  வயற்புறத்தேயும் தூவுவதற்கியலுமா?

    மலையிடையே உள்ள பள்ளத்தாக்குகளே உங்கள் வீதிகளாகவும், பச்சைப் புல்வெளி ஒற்றையடிப் பாதையே உங்கள் வீதிச் சந்துகளாகவும் அமைய, நீங்கள் ஒருவரை ஒருவர் கொடிமுந்திரித் தோட்டங்களிலே 
சந்தித்து உங்கள் உடைகளிலே நில நல்லாளின் தூசுபடிய வருதல் கூடுமா?

     இவை இப்போதைக்கு இயலாதன .

     உங்கள் முன்னோர்கள் தங்களது அச்சத்தினால் உங்கள் யாவரையும் மிக அணுக்கமாக ஒருங்கு சேர்த்தார்கள். அந்த அச்சம் இன்னும் சில காலம் நீடிக்கலாம்.  இன்னும் சில காலமே, உங்கள் நகரத்தின் மதிற்சுவர்கள் உங்களுடைய வயற்புறத்தை உங்கள் அடுப்பங் கரையிலிருந்து வேறுபடுத்தி நிற்கும்.

     ஆர்பலீஸ் நாட்டு மக்களே! உங்கள் இல்லங்களிலே என்ன வைத்திருக்கின்றீர்கள்?மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் எதைக் 
காப்பாற்றுகிறீர்கள் என எனக்குக் கூறுவீர்களா?

     ஆங்கே உங்கள் வல்லமையை வெளிப்படுத்திக் காட்டும் சாந்த சக்தியாம் அமைதியுண்டோ? நினைவுச் சின்னங்களோ, ஒளிவீசும்  விளைவுகளோ, மாட கூடங்களோ உங்கள் உள்ளத்தினைத் தம் உயர்ந்த உச்சியளவுக்கு உயர்த்துவன ஆங்கு உண்டோ?

     கற்களாலும் மரத்தாலும் பொலிவூட்டப்பட்டுள்ள அந்த இல்லங்களிலே உங்கள் இதயத்தைத் தூய மலை உச்சிக்கு உயர்த்தத் தக்கதாய் அழகு தான் உண்டோ? இவை உங்கள் இல்லங்களிலே உள்ளனவா?

     ஆம் . அந்த ஆசை தான் உங்களுக்குத் தலைவனாகி விடுவது மட்டுமல்லாமல், உங்களை ஆட்டுவிப்போனுமாகிச் சாட்டையால் தாற்றுக்கோலாலும் அடித்துச் சொடுக்கிக் குத்தி உங்களுடைய  பேராசைகளைப் பொம்மலாட்டமென ஆட்டியன்றோ வைக்கின்றது.

     அதனுடைய கரங்கள் பட்டைப் போல் மிருதுவாக இருந்தாலும் அதன் இதயம் இரும்பைக் காட்டிலும் கடினமானது.

     நீங்கள் உறங்கும் படியாக அது தாலாட்டுப் பாடுவது, உங்கள் படுக்கையின் பக்கத்திலே அது நின்று, உங்கள் உடலின் பெருமித்தத்தைக் கேலி செய்வதற்கே.

     அந்த ஆசை தான் உங்களுடைய கூர்மையான புலன் உணர்ச்சிகளைப் பார்த்துக் கேலியோடு சிரித்து அவற்றை உடைந்து போகும்  மட்பாண்டங்களைப் போல் முட்புதர்களிலே வீசிவிடும்.

     உண்மையிலேயே இன்பத்துக்கான பேராசை தான், தன் உயிரின் வேட்கையைக் கொன்றுவிட்டுப் பிறகு, தானும் அந்த மரண ஊர்வலத்திலே கேலிச் சிரிப்போடு கலந்து கொள்ளும்.



     ஆனால், நீங்கள் பரவெளியின் குழந்தைகள். அமைதியில் அமைதியற்றிருப்பவர்கள். நீங்கள் வலைக்குட்படவோ ஆட்டி வைக்கப்படவோ கூடாது.

     உங்கள் இல்லம் ஒரு நங்கூரமாக இல்லாமல் பாய்மரமாக இருக்க வேண்டும்.

     அது புண்ணை மறைக்கும் சல்லாத் துணியாக இல்லாமல் கண்ணைக் காக்கும் இமையாக விளங்கட்டும்.

     நீங்கள் வாயில் வழியிலே நுழைவதற்காக, உங்கள் சிறகுகளை மடக்க வேண்டாம். வாயில் நிலை முட்டும் என்பதற்காகத் தலையை வணங்கத் தேவையுமில்லை.  மூச்சுவிட்டால் சுவர்கள் எங்கே ஓட்டை விட்டு விடுமோ என்று அஞ்சவும் வேண்டா.

     இறந்து போனவர்கள் இருப்பவர்களுக்காகக் கட்டிய கல்லறையிலே நீங்கள் வசிக்கவும் வேண்டா.

    எழிலும் பொலிவும் மிகப் பெற்று இருப்பினும், உங்கள் இல்லம் உங்கள் உள்ளக் கிடக்கையை மறைத்துக் காப்பாற்றவோ உங்கள் ஏக்கங்களை 
மூடி மறைக்கவோ முடியாது.

     ஏன் எனில், உங்களுக்குள்ளே வரம்பற்றுக் கிடக்கும் ஒன்று, (ஆத்மா) விண்வெளியாகிய பெரிய மாளிகையிலே  குடி இருக்கிறது; அம் 
மாளிகையின் கதவுகளோ, மலர்ந்தும் மலராத விடியலின் தண் பனியே! அம் மாளிகையின் பலகணியோ, இரவுக் காலத்தின் அமைதியும்  ஒலிக்கும் இன்னிசையுமே ஆம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...