முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 6, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நரகம்

      நரகத்திற்குச் செல்ல மனிதர் எவ்வளவு  சிரமம் எடுத்துக்கொள்கின்றனர்.  அதில் நேர் பாதி போதுமே சுவர்க்கத்திற்குச் செல்ல - அதை நல்வழியில் எடுத்துக் கொள்ளும் துணிவு மட்டுமே தேவை. பென் ஜான்ஸன்       நரகம் என்பது வேறெங்குமில்லை. நன்றாய் ஆராய்ந்தால், அது பாவமேயாகும்.  கடவுளினின்று பிரிந்திருப்பதே நரகம். - பாஸ்ட்       நரகம் என்பது யாது? காலங்கடந்து கண்ட உண்மை; பருவம் கடந்து செய்த கடமை. - எட்வார்ட்ஸ்      நரகத்திற்குள்ள வழி எளிது, கண்களை மூடிக்கொண்டே போகலாம். - பியன்      நான் நரகம் உண்டென்று நம்ப மட்டும் செய்யவில்லை.  நரகம் உண்டென்று அறியவும் செய்பவன்.  அது மட்டுமா? நரகத்துக்கு அஞ்சி அறநெறி நிற்பவர் யாவரும் நரகத்தில் கால் வைத்துவிட்டரே என்பதையும் அறிவேன். - ரஸ்கின்       சாஸ்திரிகளும், சாவோரும் நரகத்தைப் பற்றிப் பேசட்டும்.  ஆனால் நரக வேதனைகள் எல்லாம் என் இதயத்திலேயே உள்ளவை. - ஷேக்ஸ்பியர் 

மோட்சம்

      அன்பும்  அறமும்  எவ்வளவோ சுவர்க்கமும் அவ்வளவே. -  பார்க்கர்       சுவர்க்கத்தின் ஆசை ஒருவனைச்  சுவர்க்க மயமாய் ஆக்கிவிடும். - ஷேக்ஸ்பியர்       அறம்  விரும்பு; அதுவே வீடு. - மில்டன்       மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது  சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம். - பேக்கன்        நான்  சுவர்க்கத்தில் இருக்க வேண்டுமானால், முதலில் சுவர்க்கம் என்னிடம் காணப்பட வேண்டும். - ஸ்டான்போர்டு       ஆன்மாவுக்கு விமோசனம் சுவர்க்கத்திலேயே என்று நடப்பவன் விமோசனம் பெறுவதில்லை. ஆனால் அன்பு வழியில் அன்பு நெறியில் நிற்பவனை ஆண்டவன் தானே தன் சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வான். - வான் டைக்      சுவர்க்கத்துக்கு வெகுதூரத்தில் உள்ளது பூமி,  பூமிக்கு வெகு சமீபத்தில் உள்ளது சுவர்க்கம். - ஹேர்       வாழ்வில் கற்க வேண்டிய கடின பாடங்களில் ஒன்று உண்டு. அதைப் ப...