முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 3, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுதந்தரம்

      பிறகு ஒரு பேச்சாளர், 'சுதந்தரத்தைப் பற்றிக் கூறுங்கள்' என, அவர் கூறுவார்.      நகர வாயிற் புறத்திலேயும், உங்களது குளிர் காயும் கணப் பருகிலேயும், நீங்கள் உங்கள் சொந்த விடுதலையினையே (சுதந்தரத்தையே) சாஷ்டாங்கமாக வீழ்ந்து தண்டனிட்டு வணங்கு கின்றீர்கள்.      கொடுங்கோல் மன்னன் முன்னர், ஓர் அடிமை தலைதாழ்ந்து நிற்பதைக் போலவும் அம் மன்னன் தன் கழுத்தை வெட்டுங் காலத்திலும் அவ்வடிமை அவனைத் துதி செய்வதைப் போலவுமே சுதந்தரத்தை நீங்கள் வணங்குகின்றீர்கள்.      கோயிலைச் சுற்றியுள்ள பூங்காவிலும் கோட்டையின் நிழலிலும் உங்களுக்குள்ளே உரிமை வேட்கை மிகுந்தவர்கள், தங்கள் சுதந்தரத்தையே தமக்கு நுகத்தடியாகவும் கைவிலங்காகவும் பிணிக்க அணிந்து உள்ளமையைக் கண்டு இருக்கிறேன்.      என் இதயம் என்னுள்ளே குருதி சிந்துகிறது.  ஏனெனில் விடுதலையைத் தேடும் வேட்கையே உங்களுக்குக் கடிவாளம் போல அமையும் போது,       அத்தகைய சுதந்தரத்தையே எல்லை என்றும் பூரணமானது என்றும் பேசுவதை நீங்கள் எக்காலத்தில் நிறுத்துவீர்களோ, அக்காலத்திலே தான...