ஆண்டுக்கு ஒருமுறை அந்நகரத்திற்கு வருகின்ற ஒரு துறவி, அவர் முன் வந்து. 'எமக்கு மகிழ்ச்சியைப் பற்றிக் கூறுங்கள்' என, அவர் கூறுவார்: மகிழ்ச்சி என்பது விடுதலை கீதம். ஆனால், அது விடுதலையன்று. அது உங்கள் ஆசையின் மலர்ச்சி. ஆனால், அது உங்கள் ஆசையின் பலன் அன்று. அது உயர்ச்சி என்று கூறப்படும் பெரும்பள்ளம். ஆனால், அது பள்ளமுமன்று உயர்ச்சியும் அன்று. அது சிறைப்படுத்தப் பட்ட சிறகுடைய ஒரு பறவை. ஆனால், அது அப் பறவையைச் சூழ்ந்துள்ள வெளியன்று . ஆம்! உண்மையில் மகிழ்ச்சி ஒரு விடுதலை கீதமே! நீங்கள் உங்கள் இதயத்தின் முழுமையோடு மகிழ்ச்சி எனும் அந்த இசையைப் பாட நான் மகிழ்வேன். ஆனால், நீங்கள் அவ்வின்னிசையிலே உங்கள் இதயத்தை எல்லாம் இழந்து விட ஒப்புக் கொள்ள மாட்டேன். உங்களிலே சில இளைஞர்கள், யாவும் மகிழ்ச்சியிலே தான் உள்ளதென்னும் நோக்கத்தோடு அதனையே அடைய முயல்கின்றனர். நீங்கள் அவர்களைச் சீர்தூக்கி நியாயம் கூறிக் கண்டிக்கின்றீர்கள். நான் அவர்களைப் பற்றித் தீர்ப்பளிக்க மாட்ட...