முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 5, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நூல் அறிமுகம்

  கலீல் கிப்ரான் என்ற ஞானி லெபனான் நாட்டவர். இவர் 1882 இல் பிறந்து 1931 இல் மறைந்தவர்.  இவருடைய தாய்மொழி அரபி.  ஆனால், ஆங்கில மொழியிலும் சிறந்த புலமை உடையவர்.  "THE PROPHET" என்னும் மிகச் சிறந்த நூலை இவர் ஆங்கிலத்தில் இயற்றினார்.  இதை நலங்கிள்ளி என்னும் புனைபெயருடைய திரு.வி.சாரங்கபாணி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார்கள்.  மூல நூலின் சாரம் பெரும்பாலும் இத் தமிழாக்கத்தின் மூலம் தமிழிலும் இறங்கி விட்டது என்று சொல்லலாம்.  இந்த நூலை அழகாக அச்சிட்டு , விரைவாக வெளிக்கொணர்ந்த  தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ரா. குழந்தைவேல் அவர்களுக்கும், அவர்களுடைய அலுவலகத்தைச் சார்ந்த அனைவருக்கும், எங்கள் வல்லுநர் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ். மகராஜன் தலைவர் தமிழ்நாடு சிறப்பிலக்கியமொழிபெயர்ப்புத் திட்ட வல்லுநர் குழு.

பகுத்தறிவும் மனவெழுச்சியும்

     அதன் பின் கோயில் அர்ச்சகரின் மனைவி அவரைப் பார்த்து, எங்களுக்கு விவேகத்தைப்  பற்றியும் மன எழுச்சியைப் பற்றியும்  சொல்ல வேண்டும்' என, அவர் சொல்வார்:      பல நேரங்களில் உங்கள் ஆத்மா ஒரு போர்க்களமாக  மாறி நிற்க, அங்கே உங்கள் விவேகமும் தீர்ப்பும் உங்கள்  மன எழுச்சி, அவா எனும் இவற்றோடு போர் செய்கின்றது.      உங்கள் ஆத்மாவுக்கு நான் ஒரு சமாதானத்  தூதுவனாகி, விலக்கப்பட்ட, போட்டி இடுகின்ற  உங்களது  புலன் உணர்ச்சிகள் யாவும் ஒருங்கிணைந்து பண்ணிசைக்கும்படி என்னால் மாற்ற இயலுமா?      உங்களுள் நீங்களே அமைதியை விரும்புபவர்களாக  விளங்காத முன், இல்லை -- புலன் உணர்வினைக்  காதலிப்பவர்களாக அமையாத காலத்து, என்னால்  இஃது எப்படிச் செய்வதற்கு இயலும்?      கடற்பயணம் செய்யும் உங்கள் ஆத்மாவுக்கு உங்கள்  பகுத்தறிவும் மனவெழுச்சியும் சுக்கானும்  பாய்மரமுமாய் விளங்கும்.      அந்தச் சுக்கான் உடைந்து விட்டாலும், பாய்மரம் முறிந்து  விட்டாலும் நீங்கள் தட்டுத் தடும...