முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குற்றமும் தண்டனையும்

      பிறகு அந்நகர நீதிபதி ஒருவர் அவர் முன்பு வந்து,'      'குற்றத்தைப்பற்றியும் தண்டனையைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லுங்கள் ' என்றார். அவர் சொல்லத் தொடங்கினார்:      உங்கள் உயிர் காற்றிலே அலைந்து திரியும்போது தான் - நீங்கள் மட்டுமே துணையின்றி உள்ள போது தான் - நீங்கள் பிறருக்குத் தவறிழைத்து அதன் மூலம் உங்களுக்கு நீங்களே ' தவறிழைத்துக் கொள்கின்றீர்கள் .      அத்தகைய உங்கள் தவறுகளுக்காக , நீங்கள் பரலோகத்தின் கதவைத் தட்டும் போது, ஆங்குப் பதிலளிப்போர் இல்லாமையால், சிறிது காலம்  பரலோகத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டியதே.      உங்கள் அரிய உயிர் ஒரு கடலைப் போன்றது. எக்காலத்திலும் அது வற்றாது.  வேறு நீரைப் பெய்து அதை நிரப்ப வேண்டியும் இராது.      காற்றைப் போல இலேசான சிறகுடையவற்றை மட்டுமே அது மேலெழுப்ப வல்லது. மற்றும் உங்கள் தூய ஆத்மா கதிரவனைப் போன்றதுமாகும்.      அந்த ஆத்மாவோ கறையானின் வழிகளையும் அறியாது; பாம்பின் வளைகளையும் தேடாது.      உங்கள் தூய உயிர் உங்களுள்ள...

கொடுத்தலும் கொள்ளலும்

     பின்னர் ஒரு வணிகன், ' கொடுத்தலைப்   பற்றியும், கொள்ளுதலைப் பற்றியும்  எங்களுக்குக் கூறுங்கள் ' என , அவர் கூறத் தொடங்கினார்.      உங்களுக்காக நில நல்லாள் தன் பலன்களைத்  தருகிறாள்.  நீங்கள் உங்கள் கைகளை  எவ்வண்ணம் நிரப்பிக் கொள்வதென  அறிந்தால் போதும்.  நீங்கள் தாழ்ச்சியுற மாட்டீர்கள்.      மண் தந்த வளத்தைப் பரிமாறிக்  கொள்வதிலேயே நீங்கள் அளவற்ற வளத்தைக்  கண்டு திருப்தி உறுவீர்கள்.      ஆயினும் அந்தப் பரிமாறுதல் தான் அன்போடும்  கருணை வாய்ந்த நீதியின் மூலமும்  நடைபெற வில்லை எனின், அது சிலரைப்  பேராசைக்கும் மற்றும் பலரைப் பசிப்பிணிக்கும் ஆளாக்கி விடும்.      அங்காடி வீதியிலும், கடலிலும், வயலிலும்,  திராட்சைத் தோட்டத்திலும் உழைக்கும்  உழைப்பாளிகளாகிய நீங்கள்,  நெசவாளர்களையும், குயவர்களையும்,  வாசனைத் திரவியம் சேகரிப்பவர்களையும்  காணும் போது, அந்த நேரத்திலே, உங்கள்  மத்தியிலே வந்து உங்கள் துலாக் கோலைத்   தூயதாக்கிப் ...

உடைகள்

      அடுத்து ஒரு நெசவாளி  அவரை நோக்கி ,  'ஆடைகளைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்:      உங்கள் ஆடைகள் உங்களது அழகின் பெரும் பகுதியை மறைத்து விடுகின்றன.  ஆனால்,  உங்கள் அழகின்மையையோ அவை மறைப்பதே இல்லை.      உங்கள் உடைகளிலே, தனிமையில் இருந்து  விடுதலையை  நீங்கள் தேடிய போதிலும்  அவற்றிடையே  ஒரு கடிவாளமமும் ஒரு கால் விலங்கும் உள்ளதைக்  காண்பீர்கள்.      நீங்கள் ஞாயிற்றையும் காற்றையும் குறைந்த  ஆடையுடனும் அதிகமாகத் திறந்த உடலோடும்  காண - சந்திக்க- இயலாதா?      ஏனெனில் வாழ்க்கையின் மூச்சு, ஞாயிற்றின்  ஒளியிலும் வாழ்க்கையின் கைகள் காற்றிலும்  அல்லவோ உள்ளன.      உங்களில் சிலர் நாம் அணிந்துள்ள ஆடையை  வாடைக் காற்று தான் செய்தது என்று சொல்கிறீர்கள்.      நானும் கூறுவேன் வாடைக்காற்றே அதை நெய்தது.      ஆனால், வெட்கமே அதன் தறியாகவும்  மிருதுவாக்கப்பட்ட தசை நாய்களே அதன்  இழை...

இல்லங்கள்

      ஒரு கொத்தனார் அவர் முன் வந்து நின்று, 'ஐயா!  எங்களுக்கு இல்லங்களைப் பற்றிக் கூறுங்கள்',  என்றார்.  அவர் சொல்லத் தொடங்கினார்:      நகரத்தின் மதில்களிடையே ஒரு மாளிகையை  நீங்கள் கட்டுவதற்கு முன்னர், உங்கள்  கற்பனைக்குத் தக்க ஒரு கொடி வீட்டைக்  கானிலே கட்டுங்கள் .      மாலைக் காலத்தின் மங்கிய ஒளியிலே நீங்கள்  எவ்வண்ணம் வீடு திரும்புவீர்களோ, அவ்வண்ணமே சேய்மைக் கண்ணே  தனித்துள்ள உங்கள் உள்ளமெனும்  வழிப்போக்கனும், தன் வீட்டை நோக்கியே திரும்புவான்.      உங்கள் பரு உடலே உங்கள் இல்லம்.      அந்த இல்லம் கதிரவனின் கதிரொளியிலே  வளர்ந்து இரவின் அமைதியிலே உறங்குகின்றது.      உங்கள் குடிசை கனவு காண்பதில்லையா?  கனவோடே இந்த நகரத்தைவிட்டு நீங்கி,  பூங்காவுக்கோ, குன்றின் உச்சிக்கோ போவதில்லையா?      உங்கள் இல்லங்களை எல்லாம் நான் என்  கைகளில் ஏந்தி, விதைப்பவன் விதை  தூவுவதைப் போலக் காட்டிடையேயும்   வயற்புறத்தேயும் தூவுவத...