முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடைகள்

      அடுத்து ஒரு நெசவாளி  அவரை நோக்கி , 'ஆடைகளைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்:

     உங்கள் ஆடைகள் உங்களது அழகின் பெரும் பகுதியை மறைத்து விடுகின்றன.  ஆனால், உங்கள் அழகின்மையையோ அவை மறைப்பதே இல்லை.

     உங்கள் உடைகளிலே, தனிமையில் இருந்து விடுதலையை  நீங்கள் தேடிய போதிலும் 
அவற்றிடையே  ஒரு கடிவாளமமும் ஒரு கால்
விலங்கும் உள்ளதைக்  காண்பீர்கள்.

     நீங்கள் ஞாயிற்றையும் காற்றையும் குறைந்த ஆடையுடனும் அதிகமாகத் திறந்த உடலோடும் காண - சந்திக்க- இயலாதா?

     ஏனெனில் வாழ்க்கையின் மூச்சு, ஞாயிற்றின் ஒளியிலும் வாழ்க்கையின் கைகள் காற்றிலும் அல்லவோ உள்ளன.

     உங்களில் சிலர் நாம் அணிந்துள்ள ஆடையை வாடைக் காற்று தான் செய்தது என்று சொல்கிறீர்கள்.

     நானும் கூறுவேன் வாடைக்காற்றே அதை நெய்தது.

     ஆனால், வெட்கமே அதன் தறியாகவும் மிருதுவாக்கப்பட்ட தசை நாய்களே அதன் இழையாகவும் இருந்தன.

     நெசவாளியாகிய அவ் வாடைக்காற்று, தன் நெசவுத் தொழில் முடிந்த பின்னர்க் கானகத்திலே நின்று உரக்கச் சிரித்தது.

     நாணுடைமை என்பது தூய்மையற்ற பார்வைக்கு எதிரான கேடயம் தான் என்பதை மறவாதீர்கள்.

     தூய்மையற்ற தன்மையே இல்லாமல் போகுமானால், நாணுடைமை என்பது உள்ளத்தின் தளையும் சாக்கடையும் அல்லாமல் வேறென்ன?

     இந்த மண் உங்கள் வெறுங் கால்களைத் தீண்டுதலாலே மகிழ்ச்சி உறுகின்றதென்பதையும், காற்று உங்கள் தலை முடியோடு விளையாடுவதற்கே ஏங்குகின்ற தென்பதையும் நீங்கள் மறவாதீர்கள்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...