முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 11, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குற்றம் காணல்

  தன்னைக் காண்பதுவே மிகக்  கடினமான காரியம். பிறர் செயல்களில் குற்றம் காண்பதுவே மிக எளிதான காரியம். - தேல்ஸ்  தீயோர் தம் குற்றங்களைத் தாமே மன்னித்து விடுவர்; நல்லோர் இனிமேல் அத்தகைய குற்றங்கள் செய்யாதிருப்பர்; முதற் குற்றத்தைச் சரியென்று சாதிப்பவன் மூன்றாவது குற்றம் செய்தவனாகின்றான். - பென் ஜான்ஸன்  பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் விசேஷ லட்சணம். - சிசரோ  பிறர் குற்றங்களை நம் கண் முன் வைத்துக் கொள்கிறோம்.  நம் குற்றங்களை நம் பின்புறம் வைத்துக் கொள்கிறோம். - செனிக்கா  ஒருவனிடம் குறைகாண்பது கடவுளிடம் குறை காண்பதாகும்.  கடவுள் அவனிடம் விளங்க விரும்பாத பொழுது நாம் ஏன் மனிதனைக் குறை கூற வேண்டும்? - பால் ரிச்சர்ட்  நாம் பிறரிடம் கண்டு பரிகாசம் செய்யுங் குற்றங்கள் நமக்குள் நம்மையே பரிகாசம் செய்யும். - ப்ரௌன்  எல்லா விஷயங்களிலும் நல்ல அம்சத்தைக் காணவே எப்பொழுதும் முயல்க.  அநேகமாக ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல அம்சம் உண்டு. - ஆவ்பரி  பிறர் குற்றம் கூறினால் அதை எதிர்க்கவும் முடியாது.  காப்பாற்றிக் கொள்ளவும் முடியாத...

வணக்கம்

  உயர்ந்ததினிடம் உண்டாகும் பக்தியிலும் உயர்ந்த உணர்ச்சி கிடையாது. - கார்லைல்  வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம்.  - கோல்ரிட்ஜ்  மக்கள் அனைவரும் பக்தர்களே.  சிலர் புகழையும் பலர் பெரும்பாலோர் சுகத்தையும் வணங்குவர். - கிரீஷியன்  அன்பும் நம்பிக்கையும் உடையவரே ஆண்டவனை வணங்குபவர். - அகஸ்டைன் ஞானி 

கருணை

  கருணையானது பிழியப்படுவதன்று. மழைபோல் பொழிவதாகும். அது அளிப்போனையும் பெறுவோனையும் ஆசிர்வதிக்கும்.  அதுவே ஆற்றல்களில் தலைசிறந்த ஆற்றல்.  அதுவே கடவுளின் இலட்சணம்.  நீதியின் கடுமையைத் தணிக்கும் கருணையுடன் கூடிய மனித சக்தியே கடவுள் சக்தியை ஒக்கும். -ஷேக்ஸ்பியர் கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான். ஷெரிடன்  தீயோர் கருணையையும், பேராசைக்காரர் வண்மையையும், கர்விகள் பணிவையும் விரும்புவர் பிறரிடத்தில்.  - கோல்டன்  கடவுளின் பிரதம லட்சணம் கருணையே.  - பிளச்சர்  கோழைகள் குரூரமாய் நடப்பர் வீரர்கள் கருணை உடையவர். - ஜான்கே  இனிய கருணையே பெருந்தன்மையின் அடையாளமாகும். - ஷேக்ஸ்பியர்   

சான்றோர்

     பிறர்க்கு இன்பம் அளிப்போரே பாக்கியவான்கள்.  பிறரிடம் சச்சரவை நீக்கி சாந்தியை விளைவிப்போரே பாக்கியவான்கள். - பீச்சர்  இவர் அனைத்தையும் தியாகம் செய்தார்; அவ்வளவு அதிகமாக அதைச் செய்தார்; அதிகமாக மன்னிக்கவும் இரங்கவும் செய்தார்.யாரையும் துவேசித்ததில்லை. - மாஜினி கல்லறைமீது  சால்பின் சாரம் அறத்தைச் செய்வதற்கு அறமாகிய காரணமே போதும் என்பதே. - எமர்சன்  சான்றோர் என்பவர் குறைகளை அறியாதவர் அல்லர்; குறைகள் இருந்தும் அவைகளைத் திருத்திக் குணங்களை உண்டாக்கிக் கொண்டவரே சான்றோர் ஆவர். - ஷேக்ஸ்பியர்  எனக்குத் தெரிந்தவற்றில் சிறந்ததையும் என்னால் செய்யக் கூடியதில் தலைசிறந்ததையுமே செய்கின்றேன்.  இறுதிவரை அப்படியே செய்துகொண்டிருப்பேன் .  இறுதியில் நான் செய்தது நியாயமாகுமானால் இப்பொழுது எனக்கு விரோதமாகச் சொல்வதெல்லாம் எள்ளளவும் நிற்காது போகும்.  இறுதியில் நான் செய்தது தவறாய் முடியுமானால் இவர் செய்தாலும் தவறு சரி ஆகிவிடாது. - லிங்கன்  பணம், படிப்பு, பதவி முதலியவைகளில் பிறரைப்போல் இருப்பதே சுகம் என்று எண்ணுகிறோம்.  ஆனால் கடவுளோ துன்பத்தையும் ...