முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 7, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மறம்

     வாழ்வு என்ற ஆடையில் எப்பொழுதும் இரண்டு வகை நூல்கள் இருந்தே தீரும்.  அவை நன்மை, தீமையே! - ஷேக்ஸ்பியர்     "அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை." - உலகப் பொதுமறை திருக்குறள்      மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே. - ரஸ்கின்       தீயொழுக்கத்திற்குக் கட்டுப்பாடில்லை என்று நினைப்பது தவறு.  தீயவனே எஜமானர்கள் அனைவரிலும் கொடிய எஜமானனுக்கு அடிமையாய் இருக்கிறான்.  அக்கொடிய எஜமானன் யார்?  அவனுடைய சொந்தத் தீய உணர்ச்சிகளே. - ஆவ்பரி      மருந்து பல சமயங்களில் பலிக்காமல் இருக்கக் கூடும்.  ஆனால், விஷமோ ஒருபோதும் பலிக்காமல் போகாது. - ரஸ்கின்   பாவம் செய்பவன் மனிதன் பாவத்துக்காக வருந்துபவன் ஞானி;  பாவத்துக்காகப் பெருமை கொள்பவன் சாத்தான். - புல்லர்      சாத்தானுடைய பந்துக்களில் ஒருவரை வீட்டுக்குக் கூட்டிச் சென்றால் போதும், அவன் குடும்பம் முழுவதுமே குடி புகுந்துவிடும். - ஆவ்பரி    ...