முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மறம்

     வாழ்வு என்ற ஆடையில் எப்பொழுதும் இரண்டு வகை நூல்கள் இருந்தே தீரும்.  அவை நன்மை, தீமையே! - ஷேக்ஸ்பியர்

    "அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை." - உலகப் பொதுமறை திருக்குறள் 

    மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே. - ரஸ்கின் 

    தீயொழுக்கத்திற்குக் கட்டுப்பாடில்லை என்று நினைப்பது தவறு.  தீயவனே எஜமானர்கள் அனைவரிலும் கொடிய எஜமானனுக்கு அடிமையாய் இருக்கிறான்.  அக்கொடிய எஜமானன் யார்?  அவனுடைய சொந்தத் தீய உணர்ச்சிகளே. - ஆவ்பரி 

    மருந்து பல சமயங்களில் பலிக்காமல் இருக்கக் கூடும்.  ஆனால், விஷமோ ஒருபோதும் பலிக்காமல் போகாது. - ரஸ்கின் 

பாவம் செய்பவன் மனிதன் பாவத்துக்காக வருந்துபவன் ஞானி;  பாவத்துக்காகப் பெருமை கொள்பவன் சாத்தான். - புல்லர் 

    சாத்தானுடைய பந்துக்களில் ஒருவரை வீட்டுக்குக் கூட்டிச் சென்றால் போதும், அவன் குடும்பம் முழுவதுமே குடி புகுந்துவிடும். - ஆவ்பரி 

    ஒருவன் தன்  ஒளியில் தான் நிற்கும்பொழுது உண்டாக்கும் நிழலே அவன் வாழ்வில் அதிக இருள் உடையதாகும். - ஆவ்பரி 



    தீச் செயல் நம்மைத் துன்புறுத்துவது, செய்த காலத்தில் அன்று.  வெகு காலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்பொழுது தான்.  அதற்குக் காரணம் அதன் ஞாபகத்தை ஒருபொழுதும் அகற்ற முடியாததே. - ரூஸோ 

    மனிதன் பிறர்க்குக் கேடு சூழ்வதில் தனக்கே கேடு சூழ்ந்து கொள்கிறான். - ஹேஸியாட்

    அறத்திற்குப் போலவே மறத்திற்கும் பிராணத் தியாகிகள் உண்டு.- கோல்டன் 

    தீய செயல் குறித்துத் தெய்வத்தின் முன் நாணாமல், மனிதன் முன் நாணக் கற்றுக்கொள்.  அப்பொழுதே விமோசனம் ஆரம்பமாகும். - ரஸ்கின் 

    ஓடைகள் சேர்ந்து நதிகள், நதிகள் சேர்ந்து கடல்,அதுபோலவே தீய வழக்கங்கள் அறியா அளவாகக் கூடி வளர்ந்துவிடும். - ட்ரைடன் 

    உடல் துன்பம், மனச்சான்றின் பச்சர்த்தாபம் இவ்விரண்டும் தவிர இதர துன்பங்கள் எல்லாம் வெறுங்கற்பனைகளே, உண்மையானவை அல்ல. - ரூஸோ 

    நல்ல சேவை செய்வதற்கு உரிய ஆற்றலைக் கெட்ட மனிதனிடம் ஒரு நாளும் காண முடியாது. - பர்க் 

    அநேகர் தங்கள் காலத்தில் பெரும் பாகத்தைப் பிறரை அவலத்திற்கு உள்ளாக்குவதிலேயே கழிக்கின்றனர். - லாபுரூயர் 

    கயவர் முட்டாள்களின் நாட்டில் பட்டினியாய் இருப்பதில்லை. - சர்ச்சில்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...