முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்லனவும் தீயனவும்

      அதன்பின், அந்நகரத்தின்  முதியவர்களுள் ஒருவர், 'நல்லன, தீயனவற்றைப்பற்றி எங்களுக்கு விளக்குங்கள்' என, அவர் கூறுவார்.     உங்களுள் உள்ள நல்லதைப்பற்றி மட்டுமே நான் கூற முடியும்.  ஆனால் தீமையைப் பற்றியல்ல.     ஏனெனில், தன்னுடைய பசியாலும் தாக்கத்தாலும் சித்திரவதை செய்யப்பட்ட நன்மையின் வேறுருவமே தீமை என்பது அல்லாமல், தீமை என்பது வேறென்ன?     உண்மையாகவே, நன்மையானது தான் பசியோடிருக்கும் போது , தன் உணவை இருண்ட குகைகளிலும் கூடத் தேடுகின்றது; தண்ணீரில்லாமல் நா வறண்டு தாகம் எடுக்கும் போது, நச்சு நீரைக் கூடப் பருகுகின்றது.     நீங்கள் உங்களுள் ஒன்றி நிற்கும் நல்லவர்கள்.     ஆனால், உங்களோடு நீங்கள் ஒன்றி நிற்காமலிருக்கும் போதும் நீங்கள் கெட்டவர்கள் அல்லர்.     ஏனெனில், பகுக்கப்பட்ட வீடு திருடர்களின் குகை அன்று.  அஃது இரண்டாக்கப்பட்ட ஒரு வீடு தான்.     சுக்கான் இல்லாத கப்பல் இலக்கில்லாமல் ஆபத்து நிறைந்த பல தீவுகளுக்கிடையே திரிந்தாலும் கடலின் அடித்தளத்திற்கு மூழ்கிப் போகாது.     உங்களையே த...

காலம்

      பின்னர் ஒரு வான்வெளிக் கலைஞர் அவரை நோக்கி, 'காலத்தைப் பற்றிய தங்கள் கருத்து யாது?' என, அவர் விளக்கலுற்றார்.      அளத்தற்கு அரியதும், அளவிட முடியாததுமான காலத்தையும்  உங்களால் அளந்திட முடியும்.      உங்களுடைய ஒழுக்கத்தையும், ஏன் உங்கள் உயிராற்றலின் இயக்கத்தையும், நாழிகைகள், பருவ காலங்கள் இவற்றுக்கேற்ப நேராக்கி நெறியுய்க்கலாம்.      காலத்தையே ஓர் அருவியாக்கி அவ்வருவிக் கரையோரம்       நீங்கள் அமர்ந்து அதன் நீரோட்டத்தைக் காணலாம்.      உங்களுள் வசிக்கும் காலங்கடந்த ஒன்று. வாழ்க்கையின்      காலங்கடந்த தன்மையை உணர்ந்துள்ளது.      நேற்றென்பது இன்றைய நினைவே என்பதும், நாளை என்பது இன்றைய நாளின் கனவே என்பதும் அஃது அறிந்த ஒன்றேயாகும்.      உங்களுள்ளே எந்த ஒன்று இசைபாடிச் சிந்திக்கின்றதோ, அஃது அப் பரந்த வெளியிலே விண்மீன்களைச் சிதறிய அம் முதல் விநாடியின் வரம்பிடையேதான் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிறது.      தன்னுடைய அன்பின் வலிமைக்கு எ...

உரையாடல்

      பின்னர் ஒரு புலவர், 'சொற்பொழிவைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லலுற்றார்:      உங்கள் எண்ணங்களோடு உற்ற அமைதி முடிவடைந்த பின்னரே நீங்கள் பேசுகின்றீர்கள்.      உங்கள் இதயத்தின் தனிமையிலே வசிக்க முடியாத நேரத்தில் எல்லாம் உங்கள் உதட்டினாலே வாழ்கின்றீர்கள்.  பேச்சொலி உங்களுக்கு ஒரு மாறுதலாகவும் பொழுது போக்காகவுமே உள்ளது.      அதிகமான பேச்சால் உங்கள் சிந்தனை பாதிக்கு மேல் கொலை செய்யப்படுகிறது.      ஏனெனில், சிந்தனை என்பது பரந்த வெளியிலே பறக்கும் பறவையாகும்.  வார்த்தைகளாம் கூட்டிலே உண்மையாகவே அது தன் சிறகுகளை விரிக்க இயலுமாயினும் அதனால் பறக்க முடியாது.      உங்களிலே பலர் தனித்திருத்தலுக்கு அஞ்சிப் பேசுபவர்களைத் தேடிப் போகின்றீர்கள்.      தனிமையின் அமைதி அப்படிப்பட்டவர்கள் கண்களுக்குத் தங்கள் ஆத்மாவின் உண்மை உருவை வெளிப்படுத்துகிறது.  எனவே, அவர்கள் அதிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்.      இன்னும் பலர் பேசுவார்கள்.  அவர்கள் பேசும்போது சிந்தனையோ முன்யோ...

நட்பு

      அங்கிருந்த ஓர் இளைஞன், 'எமக்கு நட்பைப் பற்றிச் சொல்ல வேண்டும்' என, அவர் கூறுவார்:      உங்களது நிறைவேற்றப்பட்ட தேவைகளே உங்கள் நண்பன் ஆகும்.      நீங்கள் அன்போடு விதை தூவி, நன்றியோடு அறுவடை செய்யும் வயலும் அவனே.      உங்கள் உணவும் உங்களது குளிர்காயும் கணப்பும் அவனே.      ஏனெனில், அவனிடம் நீங்கள் பசியுடனே வருகின்றீர்கள்;      உங்கள் அமைதிக்காகவே அவனைத் தேடுகின்றீர்கள்.   உங்கள் நண்பன், தன் உள்ளத்தைத் திறந்து உங்களிடம் பேசும் போது, உங்கள் உள்ளத்திலே உதிக்கும் மாறான கருத்துக்கான அச்சமும் நீங்கள் கொள்வதில்லை.  உடன்பாட்டுக் கருத்தையும் நீங்கள் மறைப்பதில்லை.      அவன் பேசாமல் மௌனமுற்றிருக்கும் போதும் உங்கள் நெஞ்சம் அவன் இதய ஒலியைக் கேட்பதைத் தடுப்பதும் இல்லை.      ஏனெனில், நட்பின் இடையே சொற்களின்றி எல்லா நினைவுகளும், எல்லா அவாக்களும், விருப்பு வெறுப்புகளும், எல்லா எதிர்பார்த்தலும் உதித்து இருவரிடையேயும் மகிழ்வோடு, ஆனால் ஆரவாரமின்றிப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன...

உபதேசம்

    அங்கு ஆசிரியர் ஒருவர் பின்னர் அவரை நோக்கி, 'ஐயா! எங்களுக்குப் போதித்தலைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லுவார்:      உங்கள் உள்ளத்திலே, ஏற்கெனவே பாதி உறக்கத்திலே கிடக்கும் அறிவின் உதயத்தை அல்லாமல், வேறெதையும் எந்த மனிதனாலும் உங்களுக்குப் போதிக்க முடியாது.      கோயிலின் நிழலிலே தன் மாணவர் குழுவுடன் அமர்ந்துள்ள ஆசிரியர், தம்முடைய ஞானத்தை அவர்களுக்குத் தருவதில்லை.  மாறாகத் தம்முடைய நம்பிக்கையையும் விருப்பத்தையுமே  தருகிறார்.      அவர் உண்மையாகவே ஞானமிக்கவரானால், தம் அறிவகத்தின் வாயிலுக்கு உங்களை அழைக்கமாட்டார்.  மாறாக உங்கள் உள்ளத்தினுடைய, அறிவின் நுழைவாயிலுக்கே வழிகாட்டுவார்.      வான்வெளியைக் கணிப்பவர், உங்களிடம் தம் வான சாஸ்திர ஞானத்தை எல்லாம் போதிக்கலாம்.  ஆனால், அவர் உங்களுக்குத் தம்முடைய சாத்திர ஞான அறிவைப் பங்கிட்டுத் தர முடியாது.      பரந்தவெளி அனைத்திலும் பரவிக் கிடக்கும் இசை ஞானத்தை எல்லாம் திரட்டி, ஒரு பாடகன் உங்களுக்கு இன்னிசை வழங்கலாம்.  ஆனால், அப் பாடகன் அவ்வி...

தன்னையறிதல்

      அதன் பின் ஒருவர், 'எங்களுக்குத் தன்னையறிதலைப் பற்றிச் சொல்லுங்கள்' என்றார் .  அவர் சொல்லத் தொடங்கினார்:      உங்கள் இதயம் தன்  அமைதியினால், பகல் இரவு ஆகியவற்றின் மறைபொருளை அறியவல்லது. ஆனால் உங்கள் காதுகளோ, அறிவின் இதய ஓலத்தைக் கேட்கத் தாகங் கொண்டனவாக இருக்கின்றன.      நீங்கள் எவற்றை உங்கள் நினைவாற்றலால் அறிந்துள்ளீர்களோ, அவற்றைச் சொற்களால் நீங்கள் அறியமுடியும்.      உங்கள் கனவின் (ஆடை) போர்வையற்ற உடல்களை உங்கள் விரல்களால் நீங்கள் தொடமுடியும்.      உங்களால் இப்படி இயல்வது நல்லதே!      உங்கள் ஆத்மாவினுள் மறைந்துள்ள நீர் ஊற்று, மேலே பொங்கி வழிந்து, கடலை நோக்கி இன்னிசையோடு ஓட வேண்டும்.      அப்போதே உங்களுடைய, எல்லையற்ற ஆழ்ந்த கருத்தின் பெருநிதியம் உங்கள் கண்களுக்கு விளக்கமுறும்.      அனால், உங்களுக்குப் புலப்படாத அப் பெருநிதியத்தைச் சீர்தூக்க எந்த துலாக்கோலையும் நீங்கள் தேட வேண்டா.         உங்கள் அறிவாற்றலின் ஆழத்தை அளந்தறியத்தக்க க...

துயரம்

      பின்னர் ஒரு நங்கை, 'எங்களுக்குத் துன்பத்தைப்  பற்றிச் சொல்லுங்கள் ' என்று கேட்க , அவர் சொல்லத் தொடங்கினார் .     உங்கள் துயரம் என்பது உங்களது பகுத்தறிவை மூடி மறைத்துள்ள புற  ஓட்டினை உடைத்தலே ஆகும்.  பழத்தின் உட்சுளையாகிய  இதயம்,சூரிய ஒளிச் சந்நிதியிலே நிற்பதற்கென, அப் பழத்தின் ஓட்டை உடைக்கும் கல்லைப்  போலவே , துயரத்தை நீங்கள் அறிதல் வேண்டும்.      உங்கள் வாழ்க்கையிலே ஏற்படும் அன்றாட அதிசயங்கள் உங்கள் இதயத்தை வியப்பிலே  நிலைக்கச் செய்ய முடியுமானால், உங்கள் துன்பம் உங்கள் இன்பத்தைவிடக் குறைந்த அளவு அதிசயமானதாக இராது.      உங்கள் வயல்கள் மீது கடந்து செல்லும் பருவ காலங்களைப் போலவே, உங்கள் இதயத்தின் பருவக்காலங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதே.      பின்னரே நீங்கள் உங்கள் துயரமாம் குளிர்காலத்தையும் அமைதியோடு கண்காணிப்பீர்கள் .  உங்கள் துயரத்தின் பெரும்பகுதி நீங்களாகத்  தேர்ந்தெடுத்ததே.      உங்கள் துயரமோ உங்களுள்ளே உள்ள மருத்துவன், பிணி வாய்ப்பட்ட உங்க...

தோற்றுவாய்

       அன்பால் மக்கள்  உள்ளங்களிலே குடி  கொண்டவரும்,  அவர்களால் மதிக்கப்பட்டு  அவர்  காலத்தின்  விடி வெள்ளியாகக்  கருதப்பட்டவருமான  ஆல் முஸ்தபா  என்பவர்,  ஏறத்தாழப் பன்னிரண்டு  ஆண்டுக்  காலம்  ஆர்பலீஸ் என்னும் நகரத்திலே  தங்கித் தம்  தாய்நாட்டுக்குத்  திரும்பத் தகுந்த கப்பலுக்காக  எதிர்நோக்கி இருந்தார்.      பன்னிரண்டாவது ஆண்டிலே  அறுவடைத் திங்களிலே,  ஏழாம் நாளன்று, நகரின்  புற மதில்களைக் கடந்து அவர்  ஒரு குன்றின் மீதேறிக் காண,  ஒரு கப்பல் மூடுபனியூடே  வருவதைக் கண்டார்.      அவருடைய இதயக் கதவுகள்  விரிந்து, மகிழ்ச்சிப்  பெருக்குக்  கடல் கடந்து ஓடியது.  தம்  கண்களை மூடி  அவர், தம்  இதயத்தின் அமைதியிலே  தியானம் செய்தார்.      ஆனால், குன்றிலிருந்து அவர்  கீழ் இறங்கிய போழ்து,  அவர்.   மனத்துள் கவலை புகவேே,  நினைக்கலுற்றார் :  நான் எவ்வண்ணம் அமைத...