முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உபதேசம்

   அங்கு ஆசிரியர் ஒருவர் பின்னர் அவரை நோக்கி, 'ஐயா! எங்களுக்குப் போதித்தலைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லுவார்:

     உங்கள் உள்ளத்திலே, ஏற்கெனவே பாதி உறக்கத்திலே கிடக்கும் அறிவின் உதயத்தை அல்லாமல், வேறெதையும் எந்த மனிதனாலும் உங்களுக்குப் போதிக்க முடியாது.

     கோயிலின் நிழலிலே தன் மாணவர் குழுவுடன் அமர்ந்துள்ள ஆசிரியர், தம்முடைய ஞானத்தை அவர்களுக்குத் தருவதில்லை.  மாறாகத் தம்முடைய நம்பிக்கையையும் விருப்பத்தையுமே  தருகிறார்.

     அவர் உண்மையாகவே ஞானமிக்கவரானால், தம் அறிவகத்தின் வாயிலுக்கு உங்களை அழைக்கமாட்டார்.  மாறாக உங்கள் உள்ளத்தினுடைய, அறிவின் நுழைவாயிலுக்கே வழிகாட்டுவார்.

     வான்வெளியைக் கணிப்பவர், உங்களிடம் தம் வான சாஸ்திர ஞானத்தை எல்லாம் போதிக்கலாம்.  ஆனால், அவர் உங்களுக்குத் தம்முடைய சாத்திர ஞான அறிவைப் பங்கிட்டுத் தர முடியாது.

     பரந்தவெளி அனைத்திலும் பரவிக் கிடக்கும் இசை ஞானத்தை எல்லாம் திரட்டி, ஒரு பாடகன் உங்களுக்கு இன்னிசை வழங்கலாம்.  ஆனால், அப் பாடகன் அவ்விசையைச் சிறை செய்யத்தக்க காதுகளையோ, பண்ணிசைக்கின்ற அவன் குரலையோ உங்களுக்குத் தர இயலாது.

     கணிதத்திலே மேதையான ஒருவர் உங்களுக்கு எடைகளையும், அளவைகளையும்,   அவை சார்ந்த கணித உலகத்தைப் பற்றிய அனைத்தையும் கற்றுத் தரமுடியும்.  ஆனால், உங்களை அவர் அக்கணித உலகத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது.

     ஏனெனில், ஒரு மனிதனின் பார்வை மற்றொரு மனிதனுக்குத் தன் சிறகுகளைத் தந்துதவாது.




     கடவுளின் உணர்விலே நீங்கள் ஒவ்வொருவரும் தனித்து நிற்பதைப் போலவே, நீங்கள் ஒவ்வொருவரும் கடவுளைப் பற்றிய அறிவிலும் உலகத்தைப் பற்றிய அறிவிலும் தனித்து நின்றே உணர வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...