முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்பு

      அங்கிருந்த ஓர் இளைஞன், 'எமக்கு நட்பைப் பற்றிச் சொல்ல வேண்டும்' என, அவர் கூறுவார்:

     உங்களது நிறைவேற்றப்பட்ட தேவைகளே உங்கள் நண்பன் ஆகும்.

     நீங்கள் அன்போடு விதை தூவி, நன்றியோடு அறுவடை செய்யும் வயலும் அவனே.

     உங்கள் உணவும் உங்களது குளிர்காயும் கணப்பும் அவனே.

     ஏனெனில், அவனிடம் நீங்கள் பசியுடனே வருகின்றீர்கள்;

     உங்கள் அமைதிக்காகவே அவனைத் தேடுகின்றீர்கள்.

  உங்கள் நண்பன், தன் உள்ளத்தைத் திறந்து உங்களிடம் பேசும் போது, உங்கள் உள்ளத்திலே உதிக்கும் மாறான கருத்துக்கான அச்சமும் நீங்கள் கொள்வதில்லை.  உடன்பாட்டுக் கருத்தையும் நீங்கள் மறைப்பதில்லை.

     அவன் பேசாமல் மௌனமுற்றிருக்கும் போதும் உங்கள் நெஞ்சம் அவன் இதய ஒலியைக் கேட்பதைத் தடுப்பதும் இல்லை.

     ஏனெனில், நட்பின் இடையே சொற்களின்றி எல்லா நினைவுகளும், எல்லா அவாக்களும், விருப்பு வெறுப்புகளும், எல்லா எதிர்பார்த்தலும் உதித்து இருவரிடையேயும் மகிழ்வோடு, ஆனால் ஆரவாரமின்றிப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

     உங்கள் நண்பனிடமிருந்து, நீங்கள் பிரியும் காலத்திலே நீங்கள் வருந்த வேண்டா.

     ஏனெனில், சமவெளியில் இருந்து காணுவதைக் காட்டிலும் மலைமேல் ஏறி உச்சியை அடைந்தவனுக்கு மலை எப்படி விளக்கமாகத் தெரியுமோ, அதைப்போல், உங்கள் நண்பனிடமிருந்து எதை நீங்கள் அதிகமாக விரும்பி அன்பு கொண்டீர்களோ, அஃது அவன் பிரிவுக் காலத்திலே மிக விளக்கமாகத் தென்படும்.

     உங்களது உயிராற்றலை ஆழச் செய்வதன்றி வேறு எப்படிப்பட்ட பிரதிபலனும் நட்பிடையே நிலவாமல் இருக்கட்டும்.




     ஏனெனில், அன்பென்பது தன்னுடைய மறைபொருளை வெளிப்படுத்துவதன்றிப் பிறவற்றைத் தேடுவது அன்று.  ஆனால், அன்பற்ற ஒன்றோ வீசப்பட்ட வலையை ஒப்பானதே ஆகும்.  அந்த வலையில் இலாபமற்றவையே அகப்படும்.

     உங்களுடைய மிகச் சிறந்தவை யாவும் உங்கள் நண்பனுடையவை ஆகட்டும்.

     அவன் உங்கள் உள்ளக் கடல் அலைகளின் தணிவை அறிவதைப் போலவே, அவ்வலைகள் பொங்கிவரும் பெருக்கத்தையும் அறியட்டும்.

     நாழிகைகளைக் கொலை செய்ய உங்கள் நண்பனை நீங்கள் தேடுவதானால் அந்த நண்பன் எத்தகையவன்? 

     எப்போதும் வாழும் நாழிகைக்காக அவனைத் தேடுங்கள்.  உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வது தான் அவன் கடமையேயன்றி உங்கள் வெறுமையைப் பூரணமாக்குவதன்று.

     நட்பின் இனிமையிலே, நகையும் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளுதலும் நிலவட்டும்.

     ஏனெனில், சிறிய பொருள்களின் பனித்துளியிலே தான் இதயம் தன் வைகறையைக் கண்டு புத்துணர்வைப் பெறுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...