முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிக்கோ அப்துல் ரகுமான்

  கஸ்தூரியைத் தேடி அலையும் மான்  என் அழுகை  சூரியனை நனைத்தது  என் கண்ணீர்த் துளிகள்  விழுந்த இடத்தில் நட்சத்திரங்கள் பூத்தன . நட்சத்திரங்களையும்  பூக்களையும்  ஒரே மாலையாகத் தொடுத்தவன் என் கண்ணீர்த் துளிகளையும் சேர்த்துத் தொடுத்தான் . என் சூரியனுக்கு  உதயம் மட்டுமே உண்டு அஸ்தமனம் இல்லை  என் அணுவில் அண்ட சராசரங்கள்  சுழல்கின்றன எனக்குள் எனக்கே தெரியாத ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன வசந்தத்தின் ஸ்பரிசம்  படுவதற்கு முன்பே என் பூங்கா  மலர்ந்துவிடுகிறது. பூக்கள் சொல்ல முடியாத  பேருண்மைகளை என் பாக்கள் சொல்கின்றன என்னிலிருந்து எழுந்த  இசையைக் கேட்டு இசைக் கருவிகள் எல்லாம் ஊமையாயின  இசைத் தேவதையே  என் பாடல்களைக் கேட்டு  வியந்தாள். கண்ணுக்குத் தெரியாத  ஒரு சூரியனின் கிரணத்தைப் போல் நான் இந்த உலகிற்கு வந்திருக்கிறேன் என்னை நானே அறியவில்லை என்னைத் தேடுவதில் நான் என்னைத்  தொலைத்து விட்டேன்  தனக்குள் இருக்கும் கஸ்தூரியைத்  தேடி அலையும்  மான் நான்  தேடல் எனக்கு விதிக்கப்பட்டிருந்தது...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...

வால்ட் விட்மன் கவிதைகள்

 பறவைகள் பாடுகின்றன   (சேவல் - பேடு) ஒளிர்க! ஒளிர்க! ஒளிர்க! மகத்தான ஞாயிறே! உன்னுடைய கதகதப்பைப் பொழிவாயாக! நாங்கள் இருவரும் அதில் ஒன்றாக இணைந்து குளிர் காய்கிறோம். "இருவரும் இணைந்து தென்றல் காற்றோ, வாடைக்காற்றோ ஒளியோடு பகல் வரட்டும் இருளோடு இரவு வரட்டும் தன்வீடோ, அல்லது தாயகத்தின் ஆறோ மலையோ  எந்நேரத்திலும் பாடியபடி நேரத்தைப் பற்றிய கவலையற்று, நாங்கள் இருவரும் ஒருங்கிணைந்துள்ள, அந்த நேரத்திலே பண்ணிசைப்போம்." (பேடு இறந்தபின்) பறவை பாடுகிறது "நிலவோ, தாழத் தொங்குகின்றது அதுதான் நேரம் தாழ்ந்து உதித்தது அது பின்தங்கி விட்டது. அதுதான் காதலாலே, காதலாலே, தன் உள்ளத்திலே பாரத்தைச் சுமக்கிறது என நான் நினைக்கிறேன். ஓ! பைத்தியம் பிடித்தபடி கடல் நிலத்தின் மீது மோதி உந்துகிறது  காதலாலே! காதலாலே! காலத்தைப் பற்றிய நினைவு எந்த ஒரு நாளும் குழந்தை பிறக்காமல் கழிவதில்லை நாள் என்ன? ஒரு நிமிஷமும் ஒரு விநாடியும் கழிவதில்லை பிரேதச் சடலமின்றி நாளும், நிமிஷமும்,  விநாடியும் கழிவதில்லை. மந்தமான இரவுகள் கடந்து போகின்றன. மந்தமான நாட்களும் அங்ஙனமே! படுக்கையிலே நீண்ட நாட்கள் படுத்துக் கிட...

கனவுக் குதிரைகள்

  மனமே கோவில்! மனிதனே தேவன்! உடலில் ரத்தம் ஓடவேண்டும் என்பதுதான் இறைவன் நமக்கு இட்ட கட்டளை! தெருவில் அதனை ஓட விடுவது தெய்வ நிந்தனை! தீபங்களே! நீங்கள்  தெரிந்து கொள்ளுங்கள்... திரிகள் மட்டுமே கருகிக் கொண்டிருக்கின்றன... தூண்டு கோல்கள் சுகமாகத் தூங்குகின்றன! அவரவர் மதக்கொடிகள் அசையட்டும் அழகாய்... வெறியெனும் நெருப்புக்கு விசிறியாய் அல்ல- களைத்தவர் வாழ்விற்குக் கலங்கரை விளக்கமாய்! சிறகுகள் பறவைகள் பறக்கிறதென்றா  சொல்கிறீர்கள்? இல்லை  காற்றில் படிந்துள்ள தூசியைச் சிறகால் துடைத்து விடுகின்றன! வெய்யிலில் புழுங்கும் மேகக் குழந்தைகளுக்கு விசிறி வீசுகின்றன. கூண்டுகளுக்குள்ளே குறுகி விடாமல் சிறகுகள் விசும்பிக் கொண்டு விண்ணெழும் போதுதான் ஆகாயம் மகிழ்ந்து அகலமாகிறது! பகல் ஒரு பைத்தியம் பகல் ஒரு பைத்தியம்... உள்ளதையெல்லாம்  உளறிக் கொட்டுகிறது! இரவு ஒரு ரகசியம்... எல்லாவற்றையும் மூடி மறைக்கிறது! மனிதனே... கையை விரித்துக் காட்டுகிறாய்... உள்ளே  ஒன்றுமே இல்லை... ஒப்புக் கொள்கிறேன்! ஆனாலும் அடுத்தவரைத் தூக்கிவிட இரண்டு தோள்கள் இருக்கிறதே... உள்ளம் ஒரு வெள்ளைத்தாள் வெள்ளைத் ...

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

  பாரதிதாசன் ஒரு பார்வை நீ எதைப்பற்றிதான்? எழுதவில்லை? பூமியின் தோள்களில் வெய்யில் தூரிகையால் தொய்யில் எழுதுமே விடிகாலை.... அதைப்பற்றி வெப்பப் பகலை வீழ்த்திய ஒரு புரட்சிக்குப் பிறகு.... உறைந்த ரத்தக்களமாய் குளிர்ந்து கிடக்குமே அந்தி அதைப்பற்றி காற்று வாங்க வருவோர்க்கு அலைச்சா மரங்கள் வீசுமே  கடல்.... அதைப்பற்றி ஓ! எதைப்பற்றித்தான் நீ எழுதவில்லை இலையுதிர் காலம் ஆண்டுக்கொரு முறை.... வெளிநாடு போனவள் வீட்டுக்கு வருவாள்! வந்ததும் வராததுமாய் மரக் காலண்டரின் அத்தனை தாள்களையும் மொத்தமாய்க் கிழிப்பாள்! நட்சத்திரங்கள் விடியல் - தன் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரேமூச்சில் ஊதி  அத்தனை மெழுகுவத்திகளையும் அணைத்து விடுகிறதோ? மெழுகுவர்த்தி மரணத்தை வரங்கேட்டா அந்த  உச்சித்தவம் நடக்கிறது? எந்தத் துயரத்தை எழுதியெழுதி இப்படி மசிகசிகிறது இந்தப்பேனா? கண்டு சொல்லுங்கள்! கண்ணெதிரே நடப்பதென்ன கொலையா? தற்கொலையா? எப்பொழுதுமே இதற்குத் தேய்பிறையென்றால் இது என்ன  சபிக்கப்பட்ட நிலவா? கண்ணீர் மருந்தாமோ? அழுவதை நிறுத்து அன்பே! காதலின் கடலோரம் எப்போதும் புன்னகை என்னும் முத்துக்குளித்தே பழக்கப்பட்ட ந...