பறவைகள் பாடுகின்றன (சேவல் - பேடு)
ஒளிர்க! ஒளிர்க! ஒளிர்க!
மகத்தான ஞாயிறே!
ஒளிர்க! ஒளிர்க! ஒளிர்க!
மகத்தான ஞாயிறே!
உன்னுடைய கதகதப்பைப் பொழிவாயாக!
நாங்கள் இருவரும்
அதில் ஒன்றாக இணைந்து குளிர் காய்கிறோம்.
"இருவரும் இணைந்து
தென்றல் காற்றோ, வாடைக்காற்றோ
ஒளியோடு பகல் வரட்டும்
இருளோடு இரவு வரட்டும்
தன்வீடோ, அல்லது
தாயகத்தின் ஆறோ மலையோ
எந்நேரத்திலும் பாடியபடி
நேரத்தைப் பற்றிய கவலையற்று,
நாங்கள் இருவரும் ஒருங்கிணைந்துள்ள,
அந்த நேரத்திலே பண்ணிசைப்போம்."
(பேடு இறந்தபின்) பறவை பாடுகிறது
"நிலவோ, தாழத் தொங்குகின்றது
அதுதான் நேரம் தாழ்ந்து உதித்தது
அது பின்தங்கி விட்டது.
அதுதான் காதலாலே, காதலாலே,
தன் உள்ளத்திலே பாரத்தைச் சுமக்கிறது
என நான் நினைக்கிறேன்.
ஓ! பைத்தியம் பிடித்தபடி
கடல் நிலத்தின் மீது மோதி உந்துகிறது
காதலாலே! காதலாலே!
காலத்தைப் பற்றிய நினைவு
எந்த ஒரு நாளும் குழந்தை பிறக்காமல் கழிவதில்லை
நாள் என்ன? ஒரு நிமிஷமும்
ஒரு விநாடியும் கழிவதில்லை
பிரேதச் சடலமின்றி நாளும்,
நிமிஷமும், விநாடியும் கழிவதில்லை.
மந்தமான இரவுகள் கடந்து போகின்றன.
மந்தமான நாட்களும் அங்ஙனமே!
படுக்கையிலே நீண்ட நாட்கள் படுத்துக் கிடந்த
துன்பவேதனை கடந்துவிட்டது
மருத்துவர் தன்னுடைய நீண்ட தவணைக்குப்பிறகு
மௌனமான பீதி நிறைந்த பார்வையையே
தன் பதிலாகத் தருகிறார்.
...................
வெட்டவெளிப்பாதை
கடந்தகாலம், எதிர்காலம், மேன்மை,அன்பு,
இவைகளுள் நீ சூனியமாக இருப்பின்
இவையாவும் உன்னுள் சூனியமே!
ஒவ்வொரு பொருளின் உட்கருவே
அதை ஊட்டி வளர்க்கிறது.
உனக்காகவும், எனக்காகவும்,
- நம்மை மூடியுள்ள- உமியை நீக்கக் கூடியவன்
எங்கே இருக்கிறான்?

கருத்துகள்
கருத்துரையிடுக