முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 14, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழகு

      அதன் பின் ஒரு கவிஞன் அவரைப் பார்த்து, 'ஐய ! அழகைப் பற்றிச் சிறிது சொல்லுங்கள்' என்றான்.  அவர் சொல்லத் தொடங்கினார்: அழகு எங்கே உள்ளது என்று உங்களால் தேட முடியுமா?  அந்த அழகே உங்கள் வழியாகவும் வழித்துணையாகவும் இருந்தாலன்றி, அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அந்த அழகே உங்கள் வார்த்தைகளின் கோர்வையாக அமைந்தாலன்றி, அதைப்பற்றி நீங்கள் எப்படிப் பேசமுடியும்? வருத்தப்படுவோரும் துன்பப்படுவோரும், அழகு என்னும் நங்கை, பரிவும் கனிவும் உடையவள்; தனக்கே உரிய பெருமிதத்தினால் நாணத்தோடு நடைபயிலும் கன்னித் தாயைப் போல், அந்த அழகு நம்மிடையே நடை பயில்கிறாள் என்கின்றனர். ஆர்வம் மிக்கவர்களோ அப்படியன்று.  அழகென்பது வன்மையும் அச்சமும் நிறைந்தது.  புயலைப் போல, அது நம் காலடியில் உள்ள பூமியையும் மேலுள்ள விண்ணையும் அசைத்து ஆட்டிவிடுகின்றது என்கின்றனர். களைப்புற்றவர்களும் சலிப்படைந்தவர்களும், அழகென்பது நம் காதின் அருகிலே கிசுகிசுக்கும்.  மென்மையாக ரகசியமாகப் பேசும் தன்மை வாய்ந்தது.  நம்முடைய ஆத்மாவிலேதான் அது உரையாகும் என்றும், சிறிய சுடர் இருளுக்கஞ்சி நடுங்கு...