உண்மையே ஞானத்தின் உறைவிடம். - பழமொழி உண்மை உரைத்துச் சாத்தானை நாணமடையச் செய்க. - ராபிலே கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே. - போப் உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே . - ஹீன் உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம். - பாஸ்கல் உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஓலைக் குடிசையிலேயே வாழ்கின்றது.- ஷேக்ஸ்பியர் உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம், அவ்வளவு கம்பீரம்:- அதைப் பார்த்தால் போதும் நேசியாமல் இருக்க முடியாது. - ட்ரைடன் உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன். உண்மை அறிவதொன்றே என் விருப்பம். - லாக்ரடீஸ் கடவுள் வலது கையில் முழு உண்மையையும், இடது கையில் உண்மையைத் தேடுவதில் அழியா ஆசையையும் வைத்துக்கொண்டு, எது வேண்டும் என்று என்னைக் கேட்டால் - இடது கையில் உள்ளதை விரும்பினால் என்றும் இருட்டிலேயே இருக்க வேண்டியிருப்பினும் - நான் இடது கை முன் தலையைத்...