காதலித்துப்பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும் ராத்திரியின் நீளம் விளங்கும் உனக்கும் கவிதை வரும் கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும் கண்ணிரண்டும் ஒளிகொள்ளும் காதலித்துப்பார் *** தலையணை நனைப்பாய் மூன்றுமுறை பல்துலக்குவாய் காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய் வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய் காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால் இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய் வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளைக் காண்பாய் இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்தப் பூக்கள் எல்லாம் காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் காதலித்துப் பார் *** இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கும் நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும...