முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிழக்கு தூரமில்லை!

ஆசிரியர் : ஜோ மல்லூரி  விதையே!  கொஞ்சம் புதைந்து கொள்! வா .... வாழ்க்கை என்பது  சூதாடிப் பெறுவதல்ல. போராடிப் பெற வேண்டிய ஒன்று. இங்கு பெரும்பாலான இளைஞர்கள், வாழ்க்கை என்பது பூப்பல்லக்கிலே  புறப்பட்டு வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் . இல்லை ... நிச்சயமாக இல்லை .... வாழ்க்கைக்கு இன்னொரு பெயர் தேடல்; இந்தத் தேடல்தான் உனது முதற்படி, நீ சிந்திப்பதிலிருந்து அல்ல, பலவற்றைச் சந்திப்பிலிருந்துதான்  இந்தத் தேடல் ஆரம்பிக்கும். வாழ்க்கையில் எவ்வளவோ நிகழ்வுகளைச்  சந்திக்கிறாய்.  ஒவ்வொரு நிகழ்வுகளும்  ஒவ்வொரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. கற்றுக் கொள்ள வேண்டியது நீதான். இப்படித்தான், எவ்வளவோ மனிதர்களைச்  சந்திக்கிறாய்.  எல்லோருமே உன்னைப்  பாதித்துவிடவில்லை.  ஒரு சிலர்தான்  உனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். இப்படிச் சந்தித்த நிகழ்வுகளும் சந்தித்த  மனிதர்களும் உனக்குள் ஒரு பாதிப்பை  ஏற்படுத்துகிறதென்றால், நிச்சயமாக  அந்தப் பாதிப்பு உன்னைச்  சிந்திக...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...