முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்லனவும் தீயனவும்

      அதன்பின், அந்நகரத்தின்  முதியவர்களுள் ஒருவர், 'நல்லன, தீயனவற்றைப்பற்றி எங்களுக்கு விளக்குங்கள்' என, அவர் கூறுவார்.

    உங்களுள் உள்ள நல்லதைப்பற்றி மட்டுமே நான் கூற முடியும்.  ஆனால் தீமையைப் பற்றியல்ல.

    ஏனெனில், தன்னுடைய பசியாலும் தாக்கத்தாலும் சித்திரவதை செய்யப்பட்ட நன்மையின் வேறுருவமே தீமை என்பது அல்லாமல், தீமை என்பது வேறென்ன?



    உண்மையாகவே, நன்மையானது தான் பசியோடிருக்கும் போது , தன் உணவை இருண்ட குகைகளிலும் கூடத் தேடுகின்றது; தண்ணீரில்லாமல் நா வறண்டு தாகம் எடுக்கும் போது, நச்சு நீரைக் கூடப் பருகுகின்றது.

    நீங்கள் உங்களுள் ஒன்றி நிற்கும் நல்லவர்கள்.

    ஆனால், உங்களோடு நீங்கள் ஒன்றி நிற்காமலிருக்கும் போதும் நீங்கள் கெட்டவர்கள் அல்லர்.

    ஏனெனில், பகுக்கப்பட்ட வீடு திருடர்களின் குகை அன்று.  அஃது இரண்டாக்கப்பட்ட ஒரு வீடு தான்.

    சுக்கான் இல்லாத கப்பல் இலக்கில்லாமல் ஆபத்து நிறைந்த பல தீவுகளுக்கிடையே திரிந்தாலும் கடலின் அடித்தளத்திற்கு மூழ்கிப் போகாது.

    உங்களையே தியாகம் செய்ய நீங்கள் போராடும் போது, நீங்கள் நல்லவர்கள்.

    அப்படியன்றி , உங்கள் இலாபத்தை மட்டுமே கருதி நிற்கும் போது கூட, நீங்கள் கெட்டவர்கள் அல்லர்.

ஏனெனில், நன்னலத்திற்காக நீங்கள் போராடும் போது, நிலத்திலே ஊன்றி, நிலத்தின் பாலை உறிஞ்சும் மரத்தின் வேரை  ஒப்பானவர்கள் இவர்கள்.

    மரத்தின் உச்சியிலே உள்ள பழம் கீழே உள்ள வேரைப் பார்த்து,  'உண்மையாகவே நீ  என்னைப் போலப் பழுத்து முழுமை அடைந்து தன்னையே முழுமையும் கொடுத்துவிடும் தியாகியாக இரு,' என்று சொல்லாது.

    ஏனெனில், பழத்துக்குத் தன்னை முழுமையாகக் கொடுத்துத் தியாகம் செய்வது தான் அதன் இயல்பும் தேவையும் ஆகும்.  ஆனால், வேருக்கோ  நிலத்தின் பயனை உறிஞ்சுவது மட்டுமே அதன் இயல்பும் தேவையுமாகும் .

    நீங்கள் உங்கள் உரையாடலிலே விழிப்போடிருக்கும்போது 

    நல்லவர்களே.

    ஆனால், தூக்கத்திலே உங்கள் நாக்குத் தடுமாறிக் கருத்தின்றி உளறும்போதும் நீங்கள் கெட்டவர்கள் அல்லர்.

    ஏனெனில், தடுமாறி உளறுதலும் வலியற்ற நாவைப் பலப்படுத்தும்.

    உங்களுடைய இலக்கை நோக்கி நீங்கள் உறுதியான பெருமிதம் 

    நடையோடு நடந்து போகும்போது நல்லவர்கள்.

    ஆயினும் அவ்விலக்கை நோக்கியே நீங்கள் தட்டுத்தடுமாறி 

    நொண்டிச் சென்றாலும் நீங்கள் கெட்டவர்கள் அல்லர்.

    நொண்டிகளும் பின்னோக்கிச் செல்வதில்லையே.

    வலிவும் விரைவும் மிக்க நீங்கள், முடவர்கள் முன்னிலையில், அவர்களிடம் அன்பு காட்டுகிறோம் என்னும் நோக்கத்தோடு நொண்டி நடக்க வேண்டா.

    நீங்கள் எண்ணற்ற நெறிகளிலே நல்லவர்கள்.  ஆனால்,

    நல்லவர்களாக இல்லாத போது கெட்டவர்களாக இல்லை.

    அக்காலத்திலே நீங்கள் மந்தமாகவும் சோம்பியும் நடக்கின்றீர்கள் என்பதன்றி வேறில்லை.

    அந்தோ! மான்கள் தங்கள் வேகத்தை ஆமைகளுக்குக் கற்றுத்தர இயலாதே.

    உங்களது பேருருவமான, தனக்கெனக் கொள்ளும் தன்னலமான அவாவிலே நன்மை நிலவுகின்றது.  அந்த அவாவோ,உங்கள் யாரிடத்திலும் உண்டு.

    ஆனால், சிலரிடத்திலே அந்த அவாவானது, மலையடுக்கத்திலே உள்ள பொருள்களையும், காட்டினது இனிய இசையையும் நல்லனவும் தீயனவும் 

    சுமந்து கடலிலே கலக்கச் செல்லும் பெருவெள்ளத்தைப் போல அமைந்திருக்கும்.

    மற்றும் சிலருக்கோ அந்த அவா, ஊர்ந்து சென்று பல வளைவுகளையும் திருப்பங்களையும் பெற்றுக் கடலைச் சென்று அடையுமுன் மிக மந்தகதியிற் செல்லும் ஆற்றைப் போல  அமைந்திருக்கும்.

    பேராசைக்காரன் குறைவாக விரும்புகின்றவனை நோக்கி, 'நீ ஏன் நின்று நின்று வருகிறாய்,விரைந்து வரவில்லை?' எனக் கூறாது இருக்கட்டும்.

    ஏனெனில், உண்மையிலேயே நல்லவன் ஆடையற்ற மற்றவனை நோக்கி உன் உடை எங்கே என்றோ,வீடு இல்லாதவனைப் பார்த்து உன் வீடு என்னவாயிற்று என்றோ கேட்பதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...