முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உரையாடல்

      பின்னர் ஒரு புலவர், 'சொற்பொழிவைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லலுற்றார்:

     உங்கள் எண்ணங்களோடு உற்ற அமைதி முடிவடைந்த பின்னரே நீங்கள் பேசுகின்றீர்கள்.

     உங்கள் இதயத்தின் தனிமையிலே வசிக்க முடியாத நேரத்தில் எல்லாம் உங்கள் உதட்டினாலே வாழ்கின்றீர்கள்.  பேச்சொலி உங்களுக்கு ஒரு மாறுதலாகவும் பொழுது போக்காகவுமே உள்ளது.



     அதிகமான பேச்சால் உங்கள் சிந்தனை பாதிக்கு மேல் கொலை செய்யப்படுகிறது.

     ஏனெனில், சிந்தனை என்பது பரந்த வெளியிலே பறக்கும் பறவையாகும்.  வார்த்தைகளாம் கூட்டிலே உண்மையாகவே அது தன் சிறகுகளை விரிக்க இயலுமாயினும் அதனால் பறக்க முடியாது.

     உங்களிலே பலர் தனித்திருத்தலுக்கு அஞ்சிப் பேசுபவர்களைத் தேடிப் போகின்றீர்கள்.

     தனிமையின் அமைதி அப்படிப்பட்டவர்கள் கண்களுக்குத் தங்கள் ஆத்மாவின் உண்மை உருவை வெளிப்படுத்துகிறது.  எனவே, அவர்கள் அதிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்.

     இன்னும் பலர் பேசுவார்கள்.  அவர்கள் பேசும்போது சிந்தனையோ முன்யோசனையோ இன்றி, தாமே அறிந்து கொள்ள இயலாத சில உண்மைகளை எப்படியோ வெளிப்படுத்தி விடுவார்கள்.

     மற்றும் சிலர் பல உண்மைகளைத் தங்கள் உள்ளத்திலே புதைத்து வைத்திருப்பார்கள்.  ஆனால், அவர்கள் அவ்வுண்மைகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது இல்லை.

     இப்படிப் பட்டவர்களின் இதயத்திலே தான் உயிராற்றல் சாந்தம் இயைந்த கவிதையின் அமைதியிலே தங்கி இருக்கிறது.

     உங்களுடைய நண்பரை நெடுஞ்சாலையிலோ அங்காடித் தெருவிலோ நீங்கள் காண நேர்ந்தால், உங்களின் உள்ளே வசிக்கும் உயிராற்றல், உங்கள் உதடுகளை அசைத்து நாக்கை நெறியுய்க்கும்.

     உங்கள் குரலுக்குள்ளே உள்ள குரல் அவர்கள் புறச்செவிகளைத் துளைத்து, அகச் செவிக்குச் செல்லட்டும்.

     ஏனெனில், அவர்களுடைய ஆத்மா உங்கள் இதயத்தின் உண்மைகளை அவர் தம் நினைவில் வைக்கத்தக்க திராட்சை ரசத்தின் இனிப்பைப் போல நினைவில் வைத்திருக்கும்.

     திராட்சை ரசம் வைத்திருந்த ஜாடி மறைந்து போகலாம்.  அதன் மேற்பூச்சு வண்ணம் ஒளி இழந்துவிடலாம்.  ஆனால், பானத்தின் இனிப்பு மட்டும் நினைவில் இருந்து மாறாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...