முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துயரம்

      பின்னர் ஒரு நங்கை, 'எங்களுக்குத் துன்பத்தைப்  பற்றிச் சொல்லுங்கள் ' என்று கேட்க , அவர் சொல்லத் தொடங்கினார் .

    உங்கள் துயரம் என்பது உங்களது பகுத்தறிவை மூடி மறைத்துள்ள புற  ஓட்டினை உடைத்தலே ஆகும்.  பழத்தின் உட்சுளையாகிய  இதயம்,சூரிய ஒளிச் சந்நிதியிலே நிற்பதற்கென, அப் பழத்தின் ஓட்டை உடைக்கும் கல்லைப்  போலவே , துயரத்தை நீங்கள் அறிதல் வேண்டும்.

     உங்கள் வாழ்க்கையிலே ஏற்படும் அன்றாட அதிசயங்கள் உங்கள் இதயத்தை வியப்பிலே  நிலைக்கச் செய்ய முடியுமானால், உங்கள் துன்பம் உங்கள் இன்பத்தைவிடக் குறைந்த அளவு அதிசயமானதாக இராது.




     உங்கள் வயல்கள் மீது கடந்து செல்லும் பருவ காலங்களைப் போலவே, உங்கள் இதயத்தின் பருவக்காலங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதே.

     பின்னரே நீங்கள் உங்கள் துயரமாம் குளிர்காலத்தையும் அமைதியோடு கண்காணிப்பீர்கள் .  உங்கள் துயரத்தின் பெரும்பகுதி நீங்களாகத்  தேர்ந்தெடுத்ததே.

     உங்கள் துயரமோ உங்களுள்ளே உள்ள மருத்துவன், பிணி வாய்ப்பட்ட உங்கள் ஆத்மா குணமடைவதற்குத் தரும் ஒரு கசப்பான மருந்தாகும்.

     எனவே, அந்த மருத்துவமனை நம்பி அவன் தரும் மருந்தை மௌனத்தோடும் அமைதியோடும் நீங்கள் அருந்த வேண்டியதே.

     ஏனெனில், அம்  மருத்துவன் கொணர்ந்து தரும் மருந்து நிறைந்த அம் மருந்துக்கிண்ணம் உங்கள் உதடுகளைத் தீய்க்குமாயினும், அக் கிண்ணம், அப் பரம்பொருளின் தூய கண்ணீரால் நனைக்கப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்டதே ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...