முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொடுத்தலும் கொள்ளலும்

     பின்னர் ஒரு வணிகன், ' கொடுத்தலைப் பற்றியும், கொள்ளுதலைப் பற்றியும் எங்களுக்குக் கூறுங்கள் ' என , அவர் கூறத் தொடங்கினார்.

     உங்களுக்காக நில நல்லாள் தன் பலன்களைத் தருகிறாள்.  நீங்கள் உங்கள் கைகளை எவ்வண்ணம் நிரப்பிக் கொள்வதென அறிந்தால் போதும்.  நீங்கள் தாழ்ச்சியுற மாட்டீர்கள்.

     மண் தந்த வளத்தைப் பரிமாறிக் கொள்வதிலேயே நீங்கள் அளவற்ற வளத்தைக் கண்டு திருப்தி உறுவீர்கள்.

     ஆயினும் அந்தப் பரிமாறுதல் தான் அன்போடும் கருணை வாய்ந்த நீதியின் மூலமும் நடைபெற வில்லை எனின், அது சிலரைப் 
பேராசைக்கும் மற்றும் பலரைப் பசிப்பிணிக்கும் ஆளாக்கி விடும்.

     அங்காடி வீதியிலும், கடலிலும், வயலிலும், திராட்சைத் தோட்டத்திலும் உழைக்கும் உழைப்பாளிகளாகிய நீங்கள், நெசவாளர்களையும், குயவர்களையும், வாசனைத் திரவியம் சேகரிப்பவர்களையும் காணும் போது, அந்த நேரத்திலே, உங்கள் மத்தியிலே வந்து உங்கள் துலாக் கோலைத்  தூயதாக்கிப் பின் மதிப்புக்கு மதிப்பு எவ்வண்ணம் சீர் தூக்குவதென விளக்குமாறு  உலகமகா சக்தியை வேண்டிக் கொள்ளுங்கள்.

     வெறுங்கையோடு வந்த தங்கள் வெற்று வார்த்தைகளையே 'உங்கள் உழைப்புக்கு ஈடாகப் நேரம் பேசுபவர்களை உங்கள்
வியாபாரத்தில் பங்கு கொள்ளும்படி வற்புறுத்தாதீர்கள்.

     அப்படிப் பட்டவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்:

     எங்களுடன் வயல்வெளிக்கு வாருங்கள். அல்லது எங்கள் சகோதரர்களுடன் கடலுக்குச் சென்று உங்கள் வலைகளை வீசுங்கள்.

     ஏனெனில் நிலமும் கடலும் எப்படி எங்களுக்குத் தாராளமாகத் தருகின்றனவோ அப்படியே உங்களுக்கும் தரும்.




     மற்றும் பாடகர்களும், நாட்டியக் கலைஞர்களும், குழலிசை வாணர்களும் அங்கு வந்தால் அவர்களுடைய கலைப்பரிசையும் 
வாங்கிக் கொள்ளுங்கள்.

     ஏனெனில், அவர்களும் உங்களைப் போலவே பழங்களையும் வற்றல்களையும் சேகரிப்பவர்களே.  அவர்கள் கொண்டு வந்துள்ளவை, கனவுத் தன்மையே பொருந்தியனவாயினும் உங்கள் ஆத்மாவுக்கு அவை உணவும் உடையுமாக அமையும்.

     நீங்கள் அங்காடி வீதியை விட்டு நீங்குமுன்னர் ஒருவரும் தாங்கள் வந்த வழியே வெறுங் கையோடு திரும்பிப் போகா வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

     ஏனெனில், உங்களிடையே உள்ள மிகக் கடைப்பட்ட கடைசி மனிதனுடைய தேவையும் நிறைவேற்றப் பட்டு விட்டதென அறிந்தபின் அல்லாமல் உலக மகாசக்தி மன நிம்மதியோடு காற்றின் மீது கண்ணுறங்காள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...