முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பகுத்தறிவும் மனவெழுச்சியும்

     அதன் பின் கோயில் அர்ச்சகரின் மனைவி அவரைப் பார்த்து, எங்களுக்கு விவேகத்தைப் பற்றியும் மன எழுச்சியைப் பற்றியும் சொல்ல வேண்டும்' என, அவர் சொல்வார்:

     பல நேரங்களில் உங்கள் ஆத்மா ஒரு போர்க்களமாக மாறி நிற்க, அங்கே உங்கள் விவேகமும் தீர்ப்பும் உங்கள் மன எழுச்சி, அவா எனும் இவற்றோடு போர் செய்கின்றது.

     உங்கள் ஆத்மாவுக்கு நான் ஒரு சமாதானத் தூதுவனாகி, விலக்கப்பட்ட, போட்டி இடுகின்ற உங்களது  புலன் உணர்ச்சிகள் யாவும் ஒருங்கிணைந்து
பண்ணிசைக்கும்படி என்னால் மாற்ற இயலுமா?

     உங்களுள் நீங்களே அமைதியை விரும்புபவர்களாக விளங்காத முன், இல்லை -- புலன் உணர்வினைக் காதலிப்பவர்களாக அமையாத காலத்து, என்னால் இஃது எப்படிச் செய்வதற்கு இயலும்?

     கடற்பயணம் செய்யும் உங்கள் ஆத்மாவுக்கு உங்கள் பகுத்தறிவும் மனவெழுச்சியும் சுக்கானும் பாய்மரமுமாய் விளங்கும்.

     அந்தச் சுக்கான் உடைந்து விட்டாலும், பாய்மரம் முறிந்து விட்டாலும் நீங்கள் தட்டுத் தடுமாறித் திகைக்க அலைத்து இழுத்துச் செல்லப்பட்டோ, நடுக்கடலில் அசைவற்றோ நின்றுவிடுவீர்கள்.

     ஏனெனில், தனித்து ஆளுகின்ற பகுத்தறிவோ மூடி அடைத்து வைக்கப்பட்ட சக்தியாகும்.  கவனிக்கப்படாத மனவெழுச்சியோ தன்னைத் தானே எரித்து அழித்துக் கொள்ளும் சுடராகும்.

     எனவே, உங்கள் ஆத்மா தன் பகுத்தறிவை மனவெழுச்சியின் உயரத்திற்கு, அந்த மனவெழுச்சி தான் இனிய பண்பாடும் படியாக உயர்த்தட்டும்.

     உங்கள் ஆத்மா உங்கள் மனவெழுச்சியைப் பகுத்தறிவோடு இணைத்துச் செலுத்த, அதனால் உங்கள் அவாவும் மனவெழுச்சியும் நாள்தோறும் உயிர்த்தெழுந்து வாழ்வதோடு, தன்னுடைய (ஆத்மாவின்) சிலையின் சாம்பலில் இருந்தும் அம் மனவெழுச்சி உயிர் பெற்று எழுந்து சிரஞ்சீவியைப் போல் நீடூழி வாழச் செய்யட்டும்.

     உங்களுடைய பகுத்தறிவின் தீர்ப்பையும், உங்கள் உளப் பசியையும் உங்கள் இல்லத்திலே தங்கும் இரு விருந்தினர்கள் எனக் கருதுங்கள் என நான் கூறுகிறேன்.

     நிச்சயமாக நீங்கள் ஒரு விருந்தினரைக் காட்டிலும் மற்றொரு விருந்தினரை அதிகமாகக் கௌரவிக்க மாட்டீர்கள்.  ஏனெனில், யார் ஒருவர் ஒரு விருந்தினரைப் பிறனிலும் அதிகமாகக் கவனிக்கிறாரோ, அவர் இருவருடைய அன்பையும் நம்பிக்கையையும் இழந்து விடுபவர் ஆவார்.

     குன்றின் மீது குளிர்ந்த புங்கமரத்தின் நிழலிலே அமர்ந்து சேய்மையிலே உள்ள நிலத்தின் பள்ளத்தாக்குகளிலே, அமைதியும் சலனமற்ற தன்மையும் பங்கேற்று இருப்பதை நீங்கள் காணும் போது,  உங்கள் உள்ளம் தன்னுள்ளே, 'இறைவன் பகுத்தறிவிலே வசிக்கிறான்' என்பதாகச் சொல்லட்டும்.

     புயற்காற்று சழன்றுவீச, அவ்வலிய காற்றால், காடுகள் நடுநடுங்க, இடியும் மின்னலும் விண்ணின் காம்பீர்யத்தை நிலை நிறுத்தும் போது, உங்கள் இதயம் பயபக்தியோடு, இறைவன் மன வெழுச்சியிலே 
நடனமாடுகின்றான்' எனக் கூறுங்கள்.

     நீங்களோ இறைவனின் வெட்டவெளியிலே காற்றாகவும் , பராசக்தியின் கானகத்திலே ஓர் இலையாகவும் இருப்பதால் பகுத்தறிவிலே அமைதி
அடைந்து மனவெழுச்சியலே நடமாடுங்கள்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...