முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நன்மை - தீமை

 நன்மை என்றும் தீமை என்றும் இல்லை; அவ்விதம் ஆக்குவது மனமே. - ஷேக்ஸ்பியர்



'நன்மை, தீமை' - நம் அறியாமையால் எழும் இரு பெயர்கள்.

நம் மனத்திற்கு உகந்ததை நன்மை என்கிறோம், பிறர் மனத்திற்கு உகந்ததைத் தீமை என்கிறோம். 

' தீமை' -  நமக்குத் தீங்கு இழைப்பது. 'நன்மை' அநேகமாய்ப் பிறர்க்குத் தீங்கு இழைப்பது. - பால் ரிச்சர்டு

 நேர்வழியில் அடைய முடியாததை ஒரு நாளும் நேர் அல்லாத வழியில் அடைந்துவிட முடியாது. - கதே 

 அற்ப விஷயங்கள் மனத்தைக் கலக்கினால் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம். துரதிர்ஷ்ட காலத்தில் அற்ப விஷயங்கள் உணர்ச்சிக்கு எட்டுவதில்லை. - ஷோப்பனார் 

 எப்பொழுதும் நமது சூரிய ஒளியில் ஒரு கறுப்புப் புள்ளி உண்டு, நமது நிழலே அது. - கார்லைல் 

 ஐயோ பேயை அடக்குவதினும் எழுப்புவது எளிது. - காரிக் 

 நன்மை தீமையினின்று பிறவாவிடினும்  அது தீமையை எதிர்ப்பிலேயே அடையக்கூடிய அபிவிருத்தி அனைத்தையும் அடையும். - ரஸ்கின் 

செல்வர், வறிஞர் காரியத்தில் சிரத்தை காட்டும் பொழுது ,அது தர்மம் எனப்படும்.

வறிஞர், செல்வர் காரியத்தில் சிரத்தை காட்டும் பொழுது, அது ஒழுங்கீனம் எனப்படும். - பால் ரிச்சர்டு

தண்டனை பெறுவதைவிட வெகுமதி பெறுவது இழிவில் குறைந்தது அன்று.

 உன் நற்செய்கை களுக்காக உனக்கு வெகுமதி அளிப்பார் என்று நீ எதிர் பார்க்கும் பொழுது, அவைகளுக்காகச் சாத்தான் உன்னைத் தண்டிக்கக் கூடும் என்பதை மறவாதே. ஆயினும் நற்செய்கைகளையே செய்வாயாக.

 அநேக ஜனங்கள் நன்மை செய்வதை விட்டுத் தீமை செய்தவன் காரணம், கடவுள் தண்டித்தாலும் தண்டிக்கட்டும், சாத்தான் தண்டனையை மட்டும் தாங்க முடியாது என்று கருதுவதே என்பதற்குச் சந்தேகமில்லை. - பால் ரிச்சர்டு 

 ஒளி நிறைந்த இடத்தில் நிழல் இருண்டிருக்கும். - கதே 

 தந்திரமும் ஏமாற்றமும் அறநெறி நிற்கப் போதுமான அறிவு இல்லாத மூடர் செயல். - பிராங்க்லின் 

 பாத்திரம் நிறைந்து இருப்பின் வெளியே ஊற்றாமல் உள்ளே ஊற்ற முடியாது. - அர்னால்ட் பென்னெட் 

  தீமை செய்வதினும் தீமை பெறுதலே நலம். - ஸிஸரோ 

 ரோஜா முள்ளின்றி மலர்வதில்லை, உண்மையே. ஆனால் மலர் இறக்க முள் இருக்கலாகாதன்றோ? - ரிக்டர் 

 அநேக சந்தர்ப்பங்களில் நாம் தீமை என்று கூறுவது, தவறியோ அல்லது மிதமிஞ்சியோ ஏற்பட்ட நன்மையாகும். மனோதைரியம் மித மிஞ்சினால் மடமையாகும். பட்சம் மித மிஞ்சினால் பலவீனமாகும். சிக்கனம் மித மிஞ்சினால் லாபமாகும். - ஆவ்பரி 

 மனிதர் தற்சமய நிலைமையில் காணும் தீமைகளுக்காக வருந்தும்பொழுது, வேண்டுமென்று விரும்பும் நிலையில் ஏற்படக்கூடிய தீமைகளைப்பற்றிச் சிறிதும் சிந்திப்பது இல்லை. - பிராங்க்லின் 

பையில் துவாரமிருந்தால் அதில் பணத்தை நிரப்பிப் பலனில்லை. - ஜார்ஜ் எலியட் 

அழுகிய பழங்களில் அது கொள்ளுவோம் இது தள்ளுவோம் என்று தேர்வது எப்படி? - ஷேக்ஸ்பியர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...