முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தத்துவ ஞானம்

      தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும்.  முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய்.  மன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுக மரணம். - கோல்ரிட்ஜ்

      நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடமையே அதன் இலட்சணம். - தோரோ 

     வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும். - வால்டேர் 

     உண்மையான தத்துவ ஞானம், இல்லாததைச் சிருஷ்டிக்காது, உள்ளதையே நிரூபித்து உறுதி செய்யும். - கலின் 

     தவரான அபிப்பிராயத்தை ஒழிப்பதும், அறிவைத் தூய்மை செய்வதும், நமது அறியாமையின் ஆழத்தை உறுதி செய்வதுமே தத்துவ ஞானத்தின் தொழில். - ஹாமில்டன் 

     தத்துவ ஞானத்தின் லட்சியம் அறம். - பீட்டர் பெயின் 

     அறிவின் உதவியின்றி உணர்ச்சி மூலம் நம்பப் படுபவைகளுக்குத் தவறான காரணம் கண்டுபிடிப்பதே தத்துவ சாஸ்திரம். ஆனால் அக்காரணம் காண்பதும் ஓர் உணர்ச்சியே. - ப்ராட்லி 

     தத்துவ ஞானத்தை 'அறிவை அறியும் அறிவு' என்பர். ஆனால் உண்மையில் அது அறியாமையை அறியும் அறிவே ஆகும். அல்லது கான்ட் கூறுவதுபோல் அது அறிவின் எல்லையை அறியும் அறிவே ஆகும். - மாக்ஸ்முல்லர் 

     தத்துவ ஞானி போல் பேசுவதும் எழுதுவதும் எளிது; ஆனால் அறிவோடு நடப்பது -அங்குதான் கஷ்டம். - ரைவ ரோல்

     தத்துவ  ஞானிக்குப் பிறர் யோசனைகளைக் கேட்க விருப்பமும், அவற்றைத் தானே ஆராய்ந்து முடிவு கட்ட மன உறுதியும் வேண்டும். உழைப்பும் இருந்துவிட்டால் இயற்கையின் ஆலயத்திலுள்ள இரகசிய மண்டபத்தினுள் நுழையவும் எதிர்பார்க்கலாம். - பாரடே 

     தத்துவ ஞானம் கற்பது என்பது, 'தான்' சாகத் தயாராகுவதேயன்றி வேறன்று. - சிசரோ 

    



     தத்துவ சாஸ்திரிகள் உலக விவகாரங்களைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டிருப்பர். ஆனால் அதற்கிடையில் உலகை நடத்திச் செல்வன  பசியும் காதலுமேயாம். - ஷில்லர்

     நமது தத்துவ சாஸ்திரத்தில் நான் கனவு கண்டும் அறியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உண்டு .  - ஷேக்ஸ்பியர் 

     ஒருவன் யாரிடம் பேசுகின்றானோ அவனுக்குப் பொருள் விளங்காமலும், பேசுகின்ற தனக்குப் பொருள் விளங்காமலும் இருந்தால், பேசுவது தத்துவ சாஸ்திரம் ஆகும் . - வால்டேர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...