முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலட்சியம்

 இலட்சியம் இல்லாத மனிதன் திசையறி கருவி இல்லாத கப்பலை ஒப்பான். -  ஆவ்பரி 

     மேல் நோக்காதவன் கீழேயே நோக்குவான். உயரப் பறக்கத் துணியாத ஆன்மா ஒருவேளை தரையில் புரளவே விதிக்கப்பட்டிருக்கும் .  - பீக்கன்ஸ் பீல்டு 

      தாழ்ந்த இலட்சியத்தில் ஜெயம் பெறுவதைவிட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறுவதே சிலாக்கியம். - ராபர்ட் பிரௌணிங் 

     எவ்விதம் இறந்தான் என்பதன்று கேள்வி.  எவ்விதம் வாழ்ந்தான் என்பதே கேள்வி. -  டாக்டர் ஜான்சன்     

      தன் சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழியவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாயிருத்தல் அவசியம். - ரிக்டர் 

     உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி - இம்மூன்றையும் மனிதன் அநுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது. - பழமொழி 

     மானிட உள்ளத்தின் தலைசிறந்த சிருஷ்டிகள் கூடப் பரிபூரணத்தில் மிகக் குறைந்தவை என்பது முற்றிலும் நியாயம். - வாவனார்கூஸ் 

     ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்துவிட்டால், பின் அவனைப் பற்றி அறிந்து கொள்ளுதல் கஷ்டமான காரியம் அன்று. - ஹோம்ஸ் 

     எந்த மனிதனையும் முற்றச் சோதிப்பது, இவனுக்கு எது பிரியம்?  என்னும் கேள்வியே. - ரஸ்கின்

     ஆட்டு மந்தை போல் நடவாமையே அனைத்திலும் முக்கியமான விஷயம்.  பிறர்போகும் இடத்தைவிட்டு நாம் போகவேண்டிய இடத்தை அறிவதே கடன். - ஸெனீகா 

     வாழ்வின் இலட்சியத்தை அடைய முயல்வோனுடைய வாழ்வே நீண்டதாகும். இறுதியில் லட்சியத்தை  அடைவிக்குங் காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு இலட்சியமாயிருத்தல் வேண்டும். -கதே 

     மனிதனுடைய உயர்ந்த விஷயங்கள் அவன் அருகிலேயே உள. அவன் பாதங்களின் அடியிலேயே அமையும். - ஹாட்டன் பிரபு 




     இன்பங்களைப் பெற முயல்வதிலும் இலட்சியங்களைப் பெருக்க முயல்வதே நலம். - ஆவ்பரி 

     லௌகீக வாழ்வினின்று விடுதலை  பெற இரண்டு வழிகள் உள. ஒன்று இலட்சிய வாழ்விலும், மற்றொன்று மரணத்திலும் சேர்க்கும். - ஷில்லர் 

     முடிவில் பிரதானமானது நாம் எண்ணுவது எது, அறிவது எது, நம்புவது எது என்பதல்ல.  நாம் செய்வது எது என்பதொன்றே பிரதானமானதாகும். - ரஸ்கின் 

     ஒருவன் பிறர் லட்சியத்திற்காக இறக்க முடியும்.  ஆனால் அவன் வாழ்வதானால் தன் லட்சியத்திற்காகவே வாழ வேண்டும். -இப்ஸன் 

     தன் சக்தி எவ்வளவு உயர்ந்ததாயும் எவ்வளவு அளவொத்ததாயும் அபிவிருத்தியடைய முடியுமோ அவ்வளவு அபிவிருத்தியும் அடைவதே ஒவ்வொருவனுடைய லட்சியமாயிருக்க வேண்டும். ஹம்போல்ட் 

     மனிதர் அவசியம் கவனிக்க வேண்டிய உண்மையான, நியாயமான, கௌரவமான விஷயம் தங்களைச் சுற்றியுள்ளவர், தங்களுக்குப் பின் வாழப் போகிறவர் இவர்களுடைய நன்மையை நாடுவதே. - ஹாரியட் மார்ட்டினோ 

     இவ்வுலகத்தை நன்கு பயன்படுத்தியே அவ்வுலகத்தை அடைதல் இயலும் நம் இயல்பைப் பூரணாமாக்கும் வழி அதை அழித்து விடுவதன்று.  அதற்கு அதிகமாக அதோடு சேர்ப்பதும், அதன் லட்சியத்திலும் உயர்ந்த லட்சியத்தை நாடச் செய்வதுமே. - நியூமன் 

     வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதற்கன்றி வேறெதற்காக நாம் உயிர் வாழ்கின்றோம்? - ஜார்ஜ் எலியட் 

     நீண்ட காலம் வாழ வேண்டுமென்பது அநேகமாக ஒவ்வொருவருடைய ஆசையுமாகும்.  ஆனால் நன்றாய் வாழ விரும்புபவர் வெகுசிலரே. - ஹீஜிஸ் 

     நாளுக்கு நாள் ஏற்றம் பெற்றுவரும் லட்சியம் ஒன்று ஊழிகளை ஊடுருவி ஓடுகின்றதென்பதும், வருஷங்கள் ஆக ஆக மனிதர் கருத்துக்களும் விரிவடைகின்றன என்பதும் மெய். - டெனிஸன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...