முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுள்

     கடவுள் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை . - டால்ஸ்டாய் 

    மக்களிடையே கடவுளை நாடுக. - நோவாலிஸ் 

    நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது. - எக்கார்ட் 

    கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான்.  அதனால் மனிதன் தன்னைப் போலவே கடவுளையும் படைத்திருக்கிறான். - ஹெர்மீஸ் 

     கடவுள் கோவில் கட்டும் இடத்தில் எல்லாம் சாத்தானும் ஒரு கோவில் கட்டிவிடுகிறான்.  அதுமட்டுமா?  அவன் கோவிலுக்கே அடியார்களும் அதிகம். - டீபோ 

    மனிதனுக்கு எத்துணைப் பைத்தியம்! ஒரு புழுவைச் சிருஷ்டிக்க முடியாது.  ஆயினும் கணக்கில்லாத கடவுளரைச் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கிறான். - மான்டெய்ன் 

    கடவுள் தகுதி உடையவர்க்குத் தாட்சண்யம் காட்டுவார்.  தகுதி அற்றவர்களே நியாயத்தை மட்டும் வழங்குவர். - பிளாட்டஸ் 

    தெய்வபக்தி லட்சியமன்று, சாதனமே.  அந்தச் சாதனத்தால் ஆன்ம விருத்தி அடையலாம்.வேஷதாரிகளே தெய்வ பக்தியை லட்சியமாகச் செய்து கொள்வர். - கதே 

    பரிபூரண நிலையில் ஆன்மாவுக்கு ஏற்படும் சொற்ப அவாவை வைத்தே கடவுள் இருப்பதைக் கணித சாஸ்திர முறையைக் காட்டிலும் அதிகமாய் நிரூபித்துக் காட்டலாம். - ஹெம்ஸ்டர் ஹூஸ் 

    'அவன்' என்னும் மொழி அவனைக் குறைத்து விடுகிறது. - டால்ஸ்டாய் 

    ஆண்டவன் இலன் எனினும் அறநெறி நிற்போம்   என்பவரே அவன் அடியராவர் . ராபர்ட் பிரௌனிங் 

    ஒருவன் கடவுள் பக்கம் இருப்பின், அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான். - வெண்டெல் பிலிப்ஸ் 

    ஆன்மாவுக்கு வெளியே கடவுளைத் தேடினால் கடவுளின் விக்கிரகங்களை மட்டுமே காண்பாய்.  ஆன்மாவை ஆராய்ந்தால் அங்குள்ள உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஆண்டவனை அறிவிக்கும்.  அயலார்க்கு நன்மை செய்யும் பொழுதுதான் ஆண்டவனைத் துதிப்பதாகக் கூறமுடியும். - ஸ்வனரோலா 

    தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம். - சாக்ரடீஸ் 

        பரிபூரணம் தேவரை அளக்கும் கோல்.  பரிபூரணத்தில் பற்றே மனிதரை அளக்கும் கோல். - கதே 

    ஆன்ம எளிமை கண்டே ஆண்டவன் மகிழ்கிறான்.  எளிமைக் குணத்தைக் கண்டுதான் மகிழ்கிறான்; இறக்கும் குணத்தைக் கண்டன்று. - கதே 

    குழந்தை இயல்புடையவர் - அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர்.  இவர்க்கே கடவுள் ராஜ்யம்.  - ஆர்.எல். ஸ்டீவன்ஸன் 

    கடவுள் பார்ப்பதைப் போல் எண்ணி மனிதரோடு வாழ்க.  மனிதர் கேட்பதைப் போல் எண்ணிக் கடவுளோடு பேசுக. - செனீகா 



    மனிதர் அறிய விரும்பாதது எதையும் கடவுளிடம் கேட்காதே.  கடவுள் அறிய நீ விரும்பாதது எதையும் மனிதனிடம் கேட்காதே. - செனீகா 

    வட்டத்தில் எந்தவிடத்திலிருந்தும் மத்திக்குச் செல்ல வழியுண்டு.  எவ்வளவு பெருந் தவறானாலும் இறைவனிடம் செல்ல வழியுண்டு. - ரூக்கர்ட் 

    கடவுளை அறிதல், கடவுளிடம் அன்பு செலுத்துதல் இரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் எவராலும் இவ்வளவு என்று சொல்ல முடியாது. - பாஸ்கல் 

    கடவுளை அறிந்து விடுவோமென்று எதிர்பார்க்க இயலாது.  ஆனால், கடவுளை அறியாமல் வேறு எதையும் அறியவும் எதிர்பார்க்க இயலாது. - பூடின் 

    மனிதர்க்குப் பேருணர்ச்சி தந்து போருக்கு நடத்திச் செல்லும் மூன்று மொழிகள் கடவுள், நித்யத்வம், கடமை என்பன.  முதல் விஷயம் அறிவுக்கு அப்பாற்பட்டது.

    இரண்டாவது நம்ப முடியாதது, மூன்றாவது ஒரு காலும் அலட்சியம் செய்ய முடியாதது. - மையர்ஸ் 

    ஏதேனும் பழுதிலாத ஒன்றை இயற்ற முயல்வதைப் போல் ஆன்மாவைப் புனிதமாக்குவதும் சமய வாழ்வு வாழச் செய்வதுமானது வேறெதுவும் இல்லை.  ஏனெனில் பரிபூரணமே கடவுள்.  அதனால் பூரணத்தை நாட முயல்பவன் கடவுள் தன்மையை நாடுபவனாவான்.- மைக்கேல் ஏஞ்சலோ 

    கடவுளின் நீதி மெதுவாகத்தான் நகரும்.  ஆனால் ஒருபொழுதும் வழியில் தங்குவதில்லை.  தவறு செய்தவனைச் சேர்ந்தேவிடும். - ராபர்ட் பிரௌனிங்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...