முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமயம்

     பின்னர் ஒரு வயது முதிர்ந்த பூசாரி அவரை நோக்கி, 'எங்களுக்குச் சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள்' என அவர் கூறினார்.

    நான் உங்களிடையே இன்று, வேறு எதைப் பற்றியாவது பேசினேனா?

சமயம் என்பது எல்லாச் செயல்களும் எல்லாச் சிந்தனைகளுமேயன்றோ?

    அதுதான் செயல்களும் சிந்தனைகளும் இல்லையாயினும், கைகள் கல்லைச் செதுக்கும் போதோ, தறியைச் செப்பனிடும் போதோ, மக்கள் ஆத்மாவிலிருந்து திடீரென உதயமாகும் வியப்பும் உணர்வுமே அன்றோ?

    யாரால் தன்னுடைய செயல்களில் இருந்து தன் விசுவாசத்தைத் துண்டித்துக் கொள்ள முடியும்? அல்லது தன் தொழிலில் இருந்து தன்  நம்பிக்கையைப் பிரிக்க முடியும்?

    யார் தன்னுடைய காலத்தைத் தனக்கு முன்னால் பரப்பி, இது கடவுளுக்காக, இஃது எனக்காக என்றும், இஃது என் ஆத்மாவுக்கு, இஃது என் உடலுக்கு என்றும் கூற முடியும்?

    எல்லா நாழிகைகளும் ஓர் ஆத்மாவிலிருந்து மற்றோர் ஆத்மாவுக்குச் சிறகடித்துப் பறப்பனவே. 

    யார் தம்முடைய ஒழுக்கமே, தனக்குச் சிறந்த ஆடை எனக் கொள்கின்றனரோ அவருக்கு வேறு ஆடையே தேவை இல்லை.



    புயலும் ஞாயிற்றின் வெப்பமும் அவர் உடலைத் துளைத்தெடுக்க முடியாது.

    எவன் தன்னுடைய நடத்தைகளுக்கு நீதி நூல்களை ஆதாரம் காட்டுகிறானோ, அவன் தன்னுடைய பண்ணிசைக்கும் குயிலைக் கூட்டில் அடைத்தவன் ஆவான்.சுதந்தரமாக கீதம் இரும்புக் கதவுகளுக்கு உள்ளிருந்து கிளம்புவதில்லை.

    யாருக்கு வழிபாடு என்பது திறந்து மூடக்கூடிய ஒரு பலகணியாக விளங்குகின்றதோ, அவர் விடியற்காலம் முதல் அடுத்த விடியற்காலம் வரையிலும் உள்ள காலமெல்லாம், வழிபாடு செய்யும் பலகணியாக விளங்கும் தன் ஆத்மாவின் வீட்டைக் கண்டவர் அல்லர்.

    உங்களுடைய அன்றாட வாழ்வே உங்கள் கோயிலும் சமயமுமாகும்.

    நீங்கள் அதில் நுழையும் போதெல்லாம் உங்களிடமுள்ள அனைத்தையும் எடுத்துச் செல்லுங்கள்.

    கலப்பை, உலைக்களம் , சம்மட்டி, வீணை முதலிய யாவற்றையும் நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள், இவை எல்லாம் உங்கள் தேவைக்கும் மகிழ்ச்சிக்குமாக நீங்கள் அமைத்துக் கொண்டவையே.

    ஏனெனில், வெறும் வழிபாட்டின் மூலமாக, அவர்களது நம்பிக்கையைக் காட்டிலும் நீங்கள் உயரப் பறக்கவோ, அவர்கள் தம் நம்பிக்கை இழந்த பரிதாப நிலையைக் காட்டிலும் உங்கள் பணிவினால் நீங்கள் தாழவோ முடியாது.

    நீங்கள் இறைவனை அறியக் கூடுமானால், வாழ்க்கைச் சூத்திரங்களுக்குப் பேருரை செய்யாதீர்கள்.  அதைவிட உங்களைச் சுற்றி நோக்குங்கள்.

    இறைவன் உங்கள் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.

    வெட்ட வெளியைக் காணுங்கள் இறைவன் முகில் மீது நடந்து சென்று, மின்னலெனத் தன் கைகளை நீட்டி மழையூடே கீழிறங்குவதைக் காண்பீர்கள்.

    அவன் மலர்களிலே முறுவலித்தது.  பின் மேலுறு மரக்கிளைகளிலே தன் கைகளை நீட்டி உங்களை அழைப்பதையும் நீங்கள் காண்பீர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...