முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்பு

 அன்பு 

     அன்பினது வழி கரடுமுரடாகவும் பள்ளத்தாக்குகள் நிறைந்ததாகவும் இருப்பினும்,அன்பு உங்களை அழைக்கும் போது  அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த அன்பு தன்னுடைய சிறகுகளால் மூடி உங்களைப் பாதுகாக்கும் போது , அதனிடையே நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.ஒருவேளை அதன் சிறகுகளின் இடையிலேமறைந்துள்ள குத்துவாள்  உங்களை ஊறு செய்தாலும் அதனால் பாதகமில்லை.


     அன்பு உங்களுடன் உரையாடும்போது அதன் குரலொலி உங்கள் கனவுகள் அனைத்தையும் வாடைக்காற்று பூங்காவை அழித்து விடுவதைப் போலச் சிதறச் செய்வது போல் இருப்பினும் நீங்கள் அதன் வார்த்தையை நம்புங்கள். ஏனெனில், அன்பு எப்படி உங்களுக்கு முடி சூட்டுகிறதோ அப்படியே உங்களை அழிக்கிறது.  அது எவ்வண்ணம் உங்களை வளர்க்கிறதோ  அவ்வண்ணமே உங்களைத் தேய்க்கிறது.


     உங்களின் உச்சிக்கு அது உயர்ந்து சூரியன் முன் அசைந்தாடும் பசிய இளந்தளிர்களை எல்லாம் எங்கனம் அது தடவிக் கொடுத்துத் தழுவி நிற்கிறதோ, அங்ஙனமே அது நிலத்தில் ஊன்றியுள்ள உங்கள் ஆணிவேர் வரையிலும் கீழிறங்கி அசைத்து ஆட்டவும் வல்லது.

     தானியக் கதிர்களைக் கட்டுக்கட்டிப் பிணிப்பதைப்போல அன்பு உங்களை ஒன்று சேர்க்கிறது.  தானியப் போர்க்களத்திலே போர் அடித்தலைப் போன்று அது உங்களை மோதி அடிக்கின்றது.

     பதர்களிலிருந்து, உங்களை வேறுபடுத்திப் பிரித்தெடுக்க அது உங்களைக் கொழித்தெடுக்கிறது.உங்களை வெளுக்கும்படி செய்ய , அஃது உங்களை மாவாக அரைத்துவிடுகிறது.

     அன்பு, நீங்கள் இளகத் தக்கவாறு அது உங்களைப் பிசைந்து வைக்கிறது.  பின்னர் அவ்வன்பு உங்களைத்  தன்னுடைய   தூய்மையான நெருப்பிலே இட்டு இறைவனின் தூய்மையான விருந்துக்கு ஏற்றதோர் உணவாகச் சமைத்து வைக்கிறது.

     அன்பு தான் உங்களை இப்பாடுபடுத்துகிறது. ஏனெனில், இவற்றாலேயே நீங்கள் உங்கள் இதயத்தின் இரகசியங்களை அறிந்துணர்ந்து அவ்வறிவின் மூலமாக வாழ்வினது இதயத்தின் 
ஓர் அணுவாக மாற முடியும்.

     ஆனால், உங்களது அச்சத்தினால் அன்பினது அமைதியையும் அன்பால் வரும் இன்பத்தையுமே நீங்கள் தேடுவீர்களானால்,
அக்காலத்திலே நீங்கள் உங்கள் உண்மை உருவத்தைப் போர்வையிட்டு மூடி, அன்பினது கடின பாதையை விட்டு விலகிச் செல்வதே நலம்.  அங்கே அந்தப் பருவ மாறுதலற்ற உலகத்திலே 
நீங்கள் சிரிக்கலாம்.  முழுச் சிரிப்பாக அன்று.அழலாம், மனங் கசிந்து, அனைத்துக் கண்ணீரையும் சிந்தி அன்று.

     அன்பு தன்னைத் தவிர, வேறொன்றையும்  தருவதில்லை. அதைப் போலவே அது தன்னைத் தவிர்த்து வேறொன்றையும்  உங்களிடமிருந்து பிரித்தெடுத்து விடுவதுமில்லை. அன்பு எதையும் வைத்துக் கொள்வதுமில்லை.  ஏனெனில், அன்புக்கு அன்பு மட்டுமே போதுமானது.

     நீங்கள் அன்பு கொண்டால் 'கடவுள் எம் உள்ளத்திலே இருக்கிறார் ' என்று கூறாதீர்கள்.மாறாக, 'இறைவன் உள்ளத்திலே நாங்கள் 
உள்ளோம் ' என்று கூறுங்கள்.

அன்பின் பாதையை வகுக்க நீங்கள் முயல வேண்டாம். உங்களை ஒரு பொருட்டாக அவ்வன்பு கருதுமானால் அதுவே உங்கள் பாதையை வகுக்க வழிகாட்டும்.




     அன்புக்குத் தன்னை முழுமை உடையதாக்கிக் கொள்வதைத் தவிர வேறு பிற ஆசை கிடையாது.  ஆனால், நீங்கள் அன்பு கொண்ட 
பின்னரும் ஆசை உங்களிடம் முகிழ்க்குமானால் இவையே உங்கள் ஆசையாக இருக்கட்டும்.

     இரவின் தனிமைக்குப் பண்பாட உருகி ஓடும் அருவியைப் போல உள்ளம் அமையும் படியும்,

     அளவுக்கு மீறிய கருணையினால் எழும் நெஞ்சத்தின் துன்பத்தை அறியவும்,

     அன்பை நீங்கள் நன்காராய்ந்து அறிவதால், நீங்கள் புண் எய்தவும்,

     முழுமனத்தோடும் மகிழ்வோடும் நீங்கள் உங்கள் இரத்தத்தைச் சிந்தவும்,

     பறந்து செல்லும் இறக்கைகளையுடைய இதயத்தோடு, ஒவ்வொரு நாள் விடியலிலும் எழுந்து,

     நாம் அன்பு செலுத்துவதற்காக மற்றொரு நாளை அளித்தமைக்கு இறைவனுக்கு வணக்கஞ் செலுத்தவும்,

     நடுப்பகல் நேரத்திலே ஓய்வெடுத்து, அன்பின் பரவசத்தை ஆழ்ந்து சிந்திக்கவும்,

     நன்றியுணர்வுடன் மாலைக்  காலத்திலே இல்லம் திரும்பவும்,

     பின்னர் உங்களது உள்ளங்களிலே உள்ள அன்பின் வடிவங்களுக்கு வாழ்த்துக் கூறி, புகழ் பாடவுமான 

இவையே உங்கள் ஆசைகளாக விளங்கட்டும் என்றார் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...