முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈகைத்திறன்

      அங்குள்ள ஒரு செல்வந்தர், அவரை நோக்கி, 'ஐயா! ஈகையைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என்றார்.  அவர் சொல்லலுற்றார்:

     உங்களுக்குரிய உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும்போது 

     நீங்கள் மிகக் குறைவாகத் தான் கொடுப்பவர்கள் ஆவீர்கள்.

     ஆனால், நீங்கள் உங்களையே பிறருக்குக் கொடுத்துவிடும் 

     போது தான் நீங்கள் உண்மையான கொடை  வள்ளல்கள்.

     உங்கள் உடைமை என்பது என்ன?  நாளைக்கு உங்களுக்கு இவை இவை தேவைப்படும் என்பதாகக் கருதிப் பொருளை அச்சத்தோடு 
காப்பாற்றி வருவதன்றோ உடைமை என்பது.

     நாளை, இந்த நாளை என்பது என்ன?

     யாத்திரீகர்களைத் தொடர்ந்து செல்லும் மிக விழிப்பான நாய் தனக்குத் தேவைப்படும் எனக் கருதி நெறியற்ற மணல் வெளியிலே எலும்புத் துண்டுகளைப் புதைத்து வைத்து அந்த யாத்திரீகர்களைத் தொடர்ந்து சென்றுவிட்டால் அந்த எலும்புத் துண்டுகள் மறுநாள் அந்த 
விழிப்பான நாய்க்கு உதவுமா? இது போன்றதன்றோ நாளை என்பதும் உங்களுக்கு?

     தேவை என்பதைத் தவிர்த்துத் தேவைக்கான அச்சம் என்பது தான் என்ன?

     நம்முடைய கேணி நிறைந்திருக்கும் காலத்திலும் தீர்க்க முடியாத நீர் வேட்கை நமக்கு ஏற்படுவது பயங்கரமானது அன்றோ?

     தங்களிடம் உள்ள பெருஞ்செல்வத்தில் சிறிது கொடுக்கும் பலர் உள்ளனர். அவர்கள் அதைத் தம் சுய விளம்பரத்துக்கெனக் 
கொடுக்கின்றனர்.  அவர்களிடையே மறைந்துள்ள அந்த அவா, அவர் தம் கொடையைத் தூய்மையற்றதாக்கி விடுகின்றது.

     தங்களிடம் உள்ளது மிகக் குறைவேயாயினும் உள்ள யாவற்றையும் கொடுத்துவிடும் சிலர் உள்ளனர்.

     அவர்களே, வாழ்க்கையிலும் கொடையிலும் நம்பிக்கை உள்ளவர்கள்.  அவர்களின் செல்வம் எக்காலும் வற்றுவதே இல்லை.

     மகிழ்ச்சியோடு கொடுப்பவர்கள் சிலர் உள்ளனர்.அந்த மகிழ்ச்சியே அவர்கள் பெறும் பரிசாகும்.

     துன்பத்தோடு தருபவர்கள் பலர். அவர்கள் தம் துன்பமே அவர்களின் மனந்திரும்புதல் ஆகும்.

     மற்றும் சிலர் தாம் கொடுக்கும் போது , துன்பத்தையும் காணாமல் இன்பத்தையும் தேடாமல் அறத்தைப் பற்றிக் கூடச் (ஈதல் அறம் 
என்பதைப் பற்றியும்) சிந்திக்காமல்கொடுக்கிறார்கள்.

     அவர்களே, பரந்த வெளியில் வீசும் தென்றலுக்கு,மல்லிகை தன் முகை அவிழ்ந்து தன் நறுமணத்தைத் தந்து பரவச் செய்வதைப் 
போலத் தரும் கொடையாளிகள் ஆவார்கள்.

     இப்படிப் பட்டவர்களின் கைவண்ணம் மூலமாகவே இறைவன் பேசுகிறான்.அவர்களுடைய கண்களின் மூலமாகக் கண்டு, உலகைப் பார்த்து முறுவல் பூசுகிறான்.

     கேட்கும் போது  கொடுப்பது நல்லது.  ஆனால்,பிறர் கேளா, முன்னரே, குறிப்பறிந்து ஈதலே அதைவிட நல்லது.

     கொடையாளிக்குத் தான் தரும் ஈகையை ஏற்றுக் கொள்பவனைத் தேடுவது ஈதலைக் காட்டிலும் இன்பத்தைத் தரத்தக்கதாகும்.

     கொடுப்பதற்கு இல்லை என மறுக்கத்தக்கது ஏதாவது உண்டா?

     உங்களிடம் உள்ளவெல்லாம் ஏதாவது ஒருநாள் கொடுத்துத் தீர வேண்டுவனவே.

     எனவே, இன்றே கொடுத்துவிடுங்கள். இந்த ஈகை உங்களுடைய சந்ததியார் காலத்துக்கென நீங்கள் தள்ளிப் போடாமல் உங்கள் 
காலத்திலேயே நிகழ்ந்ததாக இருக்கட்டும்.

     நாங்கள் கொடுப்போம். ஆனால், தக்கவர்களுக்கே கொடுப்போம் என நீங்கள் அடிக்கடி சொல்கின்றீர்கள்.

     உங்கள் தோட்டத்திலே உள்ள பழமரங்கள் இப்படிச் சொல்லவில்லையே! வயல் வெளியிலே மேயும் பசுமந்தைகள் இப்படிக் கூறவில்லையே!

     அவையாவும் தாம் வாழவே கொடுக்கின்றன. ஏனெனில்,

     கொடுக்க மறுப்பவையாவும் அழிந்தே விடும்.

     தன்னுடைய தேவைக்கெனப் பகலையும் இரவையும் அனுபவிக்கப் பெற்றிருக்கும் ஒருவனுக்கு உங்களிடமிருந்து எல்லாவற்றையுமே பெறத் தகுதியுண்டு.

     வாழ்க்கை எனும் பெருங்கடலையே பருகத் தகுதி பெற்றிருக்கும் ஒருவனுக்கு உங்களுடைய சிறு வாய்க்கால் நீரில் தன் குவளையை 
நிரப்பிக்கொள்ள நிச்சயமாகத் தகுதியுண்டு.




நம்பிக்கையிலேயும், தைரியத்திலேயும், 
ஈகையிலேயும், பெறுவதிலேயும் பொதிந்து 
கிடக்கும் மனப் பரப்புக்கு மிக்கதொரு 

     நிலப்பரப்பு எங்கேனும் உண்டோ? பிற மக்களுடைய ஆசைகளைப் 
போர்வையின்றியும் பெருமையைக் குழப்பமின்றியும் நீங்கள் காணவேண்டும் என்பதற்காக, உங்களிடம் கை நீட்டிப் பெறுபவர்கள் தங்கள் நெஞ்சத்தையே உங்களுக்குக் கொடுத்து விடவும் தம் 
பெருமையைக் கூடத் திறந்து காட்டவும் விழைகின்றீர்கள் என்றால், அதற்கு நீங்கள் யார்?

முதலில் நீங்கள் கொடுக்கத் தகுதி 
உடையவர்களாக, பிறருக்குக் கொடுப்பதற்கு 
ஏற்ற ஒரு கருவியாக உங்களை நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்.

     ஏனெனில் உண்மையிலேயே, வாழ்க்கை தான் வாழ்க்கைக்குத் தருகின்றது(நீங்கள் பிறருக்குத் தருவதன்று).  அக்காலத்தில் நீங்கள் அதற்கு ஒரு சான்றாக இருப்பதை  விடுத்து, 'நாங்களே,  கொடுப்பவர்கள் கொடை வள்ளல்கள்!' எனக்  கருதுகின்றீர்கள்.

     மற்றும், நீங்கள் கொடுக்கப்படும் கொடையைப் பெறுகின்ற நீங்கள் யாவரும் பெறுபவர்களே நன்றியின் சுமையைச் சிறிதும் கருதாதீர்கள். அது உங்களுக்கும், கொடுக்கும் வள்ளலுக்கும் 
இடையே நுகத்தடியைப் போலக் கொடிய பாரத்தைத் தரும் ஆதலின். வள்ளல்களோடு நீங்களும் அவர்கள் தரும் ஈகையின் மேலமர்ந்து 
சிறகடித்து மேன்மேலும் உயர்ந்து செல்லுங்கள்.

     ஏனெனில்,உங்கள் நன்றிக் கடனையே நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது உளமுவந்து நல்கும் நிலநல்லாளைத் தாயாகவும் 
இறைவனையே தந்தையாகவும் பெற்ற வள்ளலின் வண்மையின் மேலே உங்களுக்குள்ள நம்பிக்கை இன்மையையே அது காட்டுவ தாகும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...