முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உண்ணும் சோறும் பருகும் நீரும்

     ஆங்கோர் உணவு விடுதிக்கார முதியவர், அவர் முன் வந்து, 'உண்ணுவதைப் பற்றியும் பருகுவதைப் பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்:

     நிலத்தின் புழுதியிலே  வாழ்ந்து, ஒளியினாலே நிலைபெற்று  நிற்கும் காற்றுத் தாவரம் போல், நீங்கள் வாழ்தல் கூடுமோ?




     நீங்கள் உண்ணுவதற்காகப் பிற உயிர்களைக் கொல்கின்கிறீர்கள்.  உங்கள் நீர்வேட்கையைத் தணித்தற்கெனவும் பருகுவதற்கெனவும்,
பசுவின் பாலைப் பச்சைப் பசுங்கன்றுக்கும் கொடாமல் பறிக்கின்றீர்கள். அவற்றிடையேயும் வாழ்க்கையின் வழிபாடு பின்னிக் கலந்து விளங்கட்டும்.

     உங்கள் இருக்கை ஒரு பலிபீடமாக அமையட்டும்.அங்குப் பலியிடப்படும் வயல்வெளிகளின் தூய விளைவுகளும், முல்லை நிலத்தின் கள்ளங் கபடமற்ற கால்நடைகளும், மாந்தர்களின் 
உள்ளத்திலே உறையும் மிகத் தூயதும் கபடமற்றதுமான ஆத்மாவுக்குப் பலியிடப்படுவதாகட்டும்.

     நீங்கள் ஓர் உயிரை அழிக்கும் போது உங்கள் உள்ளத்திலே  இவ்வண்ணம் நினைவு கூருங்கள்:

     எந்தச் சக்தி உங்களைக் கொள்கிறதோ அதே சக்தியால் நாங்களும் அழிக்கப்படுவோம்.  நாங்களும் உங்களைப் போலவே  சீரணிக்கப்படுவோம்.  ஏனெனில், எந்த நியதி உங்களை எங்கள் கரங்களில் சிக்க வைத்ததோ,அதே நியதியால் நாங்களும் எங்களிலும் வலிய கரங்களால் சிக்கித் தவிக்கத் தள்ளப்படுவோம்.
உங்களது குருதியும் எங்களது குருதியும் வானுலகத்துத் தாவரத்துக்குப் பெய்யும் நீரேயன்றிப் பிறிதில்லை.

     மற்றும் நீங்கள் ஓர் ஆப்பிள் பழத்தை உங்கள் பற்களால் கடித்து மெல்லும்போது உங்கள் உள்ளத்திலே இவ்வண்ணமாகச் சிந்தியுங்கள்:

     உனது விதை என் உடலிலே வசிக்கட்டும்.  உன்னுடைய நாளைய அரும்புகள் என் இதயத்தில் மலர்ச்சியடையட்டும்.  உன்னுடைய நறுமணமே என் உயிர்ப்பாக இருக்கட்டும்.  இவ்வண்ணமாக நாம் இருவரும் எல்லாப் பருவங்களிலும் மகிழ்ந்து நினைவு கூர்வோம்.

     கார் காலத்திலே கொடிமுந்திரிச் சாற்றைப் பிழிந்தெடுக்கப் பழங்களைத் திரட்டும் காலத்திலே உங்கள் உள்ளத்திலே இங்கனம் 
நினைவு கொள்ளுங்கள்:

     நானும் ஒரு கொடிமுந்திரித் தோட்டமே,  என் பழங்களும் கொடிமுந்திரி ஆலைக்காகத் திரட்டப்படும், புத்தம் புதிய கொடிமுந்திரிச் சாற்றைப் போலவே நானும் பரலோகப்  பாண்டங்களிலே சேமித்து வைக்கப்படுவேன்.

     மற்றும் நீங்கள் மழைக் காலத்திலே அச் சாற்றைப் பயன்படுத்த எடுக்கும்போது,  அதனுடைய ஒவ்வொரு குவளைக்கும் உங்கள் 
உள்ளம் இன்னிசை இசைக்கட்டும்.

     கார்காலம், கொடிமுந்திரித் தோட்டம், கொடிமுந்திரி ஆலை இவற்றின் இனிய நினைவுகளால் நிறைந்ததாக உங்கள் இன்னிசை அமையட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...