முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்பமும் துன்பமும்

      அடுத்தபடி ஒரு மடந்தை அவரை நோக்கி 'ஐயா! இன்பத்தைப் பற்றியும் துன்பத்தைப் பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்வார்:

     உங்களது இன்பங்கள் யாவும் முகத்திரை களையப்பட்ட துன்பங்களே.

     உங்களது இதயத்தின் நிறைவினின்று எது உங்கள் சிரிப்புக்கும் களிப்புக்கும் காரணமாக இருந்ததோ அதுவே உங்கள் கண்களைக் 
கண்ணீரால் நிறைக்கவும் காரணமாகலாம்.

     மற்று  வேறெப்படி இருக்க முடியும்?

     துன்பம் உங்கள் உள்ளத்தின் எவ்வளவு அடி  ஆழத்தில் உளைகின்றதோ அவ்வளவுக்கு அதிகமான இன்பத்தை நீங்கள் 
அடைகின்றீர்கள்.




     நீங்கள் பழரசத்தை ஏந்திப் பருகும் அந்தக் குவளை, குயவனாள் சூளையிலே வேகவைத்து எடுக்கப்பட்டது அன்றோ?

     உங்கள் இதயத்தை இன்னிசையால் பரவசப் படுத்தும் அந்த வேய்ங்குழல் கத்தியால் வெட்டிச் சீவி, துளையிட்டுச் செப்பஞ் செய்யப்பட்டது தானே?

     நீங்கள் மகிழ்ச்சியில் மைந்துறும் போது உங்கள் உள்ளத்தையே உள்முகமாக நோக்க அங்கே, எது உங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்ததோ,  அதுவே உங்களுக்கு முன்னர் இன்பத்தை நல்கியதாக இருக்கக் காண்பீர்கள்.

     அதைப் போலவே நீங்கள் துன்பத்திலே உழன்றிருக்கும் போதும், உங்கள் நெஞ்சத்தை நோக்குவீர்களானால் எது உங்களுக்கு முன்னர் 
இன்பமாகக் காணப்பட்டதோ, அதுவே, உங்கள் இப்போதைய அழுகைக்கும் காரணம் என்பதைக் காண்பீர்கள்.

     சிலர் இன்பமே துன்பத்தைக் காட்டிலும் சிறந்ததென்றும், மற்றும் சிலர் இல்லை இல்லை துன்பமே இன்பத்தைக் காட்டிலும் 
சிறந்ததென்றும் கூறுகின்றீர்கள்.

     நான் கூறுகிறேன் அவை பிரிக்க முடியாதவை.

     அவை இரண்டும் இணைந்தே வந்தன.  உங்கள் இருக்கையில் ஒன்று உங்களுடன் அமர்ந்திருந்தால் மற்றொன்று உங்கள்  படுக்கையில் உறங்குகின்றதென உணர்வீர்களாக.

     இன்பமும் துன்பமும் இரண்டு புறமும் தொங்கும் துலாத் தட்டாக நீங்கள் இருக்கின்றீர்கள்.

     துலாக்கோல் காலியாக இருக்கும் போது நீங்கள் ஒருபுறம் சாயாமல் நிலைத்துச் சமனாக நிற்கின்றீர்கள்.

     ஆனால், கருவூலத்து முதல்வன் உங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் சீர்தூக்கிப் பார்க்கும்போது தான் உங்கள் இன்பத்தட்டோ துன்பத்தட்டோ தாழ்கின்றது அல்லது உயர்கின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...