முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பணி

     நீங்கள் பணியில் ஈடுபடுவதால் பூமியோடும் 

     பூமியின் ஆன்மாவோடும் நீங்கள் பயணிக்க 

     முடிகிறது.  முடங்கி கிடப்பது நடக்கும் பருவ காலங்களுக்கு அந்நியமாவதாகும் . எல்லையில்லாத ஒன்றுக்கு  பெருமையோடு 
கீழ்படிந்து அதை நோக்கி கம்பீரமாக நடைபோட்டு செல்லும் பேரணியிலிருந்து விலகுவதாகும்.

     நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது  ஒரு புல்லாங்குழல் ஆகிறீர்கள், உங்கள் இதயத்தின் வாயிலாக காலத்தின் முனுமுனுப்புகள் இசையாக மாறுகிறது .  உங்களில் யார் துளைகள் அற்ற மூங்கிலாகவே, அமைதியாக,பேச முடியாமல் இருக்க விரும்புகிறீர்கள், மற்றவை எல்லாமே இசைந்து பாடும் போது .

     உங்களுக்கு எப்போதும் கூறப்பட்டு இருக்கிறது, பணி என்பது ஒரு சாபம் என்றும் உழைப்பில் ஈடுபட வேண்டியிருப்பது ஒரு துரதிட்டம்  என்றும்.

     ஆனால், நான் சொல்கிறேன் நீங்கள் பணியில் ஈடுபடும்போது தொலைவில் இருக்கும் பூமியின் கனவை நிறைவேற்றுகிறீர்கள், அந்த கனவு பிறந்த போதே உங்களுக்கு என அது வழங்கப்பட்டது.

     நீங்கள் பணியில் ஈடுபடுவதால் வாழ்வை உண்மையாகவே நீங்கள் நேசிக்கிறீர்கள். பணியின் வாயிலாக வாழ்வை நேசிப்பது என்பது வாழ்வின் உள்மைய்ய இரகசியங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகும்.

     ஆனால், உங்கள் வேதனையின் காரணமாக பிறப்பை துன்பம் என்று கூறுகிறீர்கள்.  வயிற்றுக்கான உங்கள் பிழைப்பை நெற்றியின் 
மீது எழுதப்பட்ட சாபமாக கருதுகிறீர்கள். அதற்கு என் பதில், உங்கள் நெற்றி வேர்வையை தவிர வேறு எவற்றாலும் அந்த சாபத்தை அழிக்க முடியாது.

     வாழ்வு என்பது ஒரு இருள் என்று உங்களுக்கு கூறப்பட்டு இருக்கிறது.  நீங்கள் சோர்ந்து  போயிருக்கும் போது, சோர்ந்து  போனவர்களால் கூறப்பட்ட அந்த வார்த்தையை  எதிரொலிக்கிறீர்கள்.




     நான் சொல்கிறேன், வாழ்வு என்பது இருள் தான், ஒரு உயர் நோக்கம் இல்லை என்றால்.  எல்லா உயர்நோக்கமும் கண்மூடித்தனமானவை தான், மெய்யறிவு இல்லை என்றால்.

     எல்லா மெய்யறிவும் வீணானவை தான், பணியில் ஈடுபடவில்லை என்றால். எல்லா பணியும் வெற்றுத்தன்மை கொண்டவை தான்,
அன்பில்லை என்றால். நீங்கள் அன்போடு பணியில் ஈடுபடும் போது,
உங்களோடு ஒன்று கலந்து இருக்கிறீர்கள், ஒருவரோடு ஒருவர், மற்றும் இறைவனோடு இணைகிறீர்கள்.

     அன்போடு பணியில் ஈடுபடுவது என்றால் என்ன?

     உங்கள் இதயத்திலிருந்து திரித்து எடுக்கப்பட்ட நூலில் ஆடை நெய்வதாகும்,  உங்கள் உள்ளன்பானவர் உடுத்திக் கொள்ளப் போகிறார் என்ற எண்ணத்தில்.

     நேசத்தோடு ஒரு வீட்டை காட்டுவதாகும், உங்கள் உள்ளன்பானவர் அதில் வாசம் செய்யப் போகிறார் என்ற எண்ணத்தில்.

     விதைகளை கனிவோடு விதைப்பதாகும், அறுவடையை மகிழ்ச்சியை கொண்டாடுவதாகும், உங்கள் உள்ளன்பானவர் அதை உண்பார் என்ற எண்ணத்தோடு.

     உங்கள் உள்மனத்துடிப்பால் எல்லாவற்றுக்கும் ஒரு காந்த சக்தியை கொடுப்பதாகும். எல்லா இறந்த அருளாசி பெற்றவர்களும் உங்கள் 
அருகே நின்று பணியில் ஈடுபடுவதை கவனிக்கிறார்கள் என அறிந்திருப்பதாகும்..

    அடிக்கடி நீங்கள் இப்படி சொல்வதை நான் கேட்டு இருக்கிறேன், தூக்கத்தில் பேசுவதைப் போல,பளிங்கு கல் கொண்டு பணி  செய்பவன்,தன் ஆன்மாவில் வடிவை அந்த கல்லில் காண்கிறான் என்றால், அவன் நிலத்தை உழுபவனை விட சிறந்தவன் என்று.

     வானவில்லை பிடித்து இழுத்து அதன் வண்ணங்களை ஒரு துணியில் மனிதனுக்காக இடுபவன், கால்களுக்கு செருப்பு தயார் 
செய்பவனை விட மேலானவன் என்று.

     ஆனால், நான் சொல்கிறேன், தூக்கத்தில் அல்ல, பகல் பொழுதின் விழிப்புடன், காற்றானது ஓங்கி வளர்ந்த ஓக் மரத்தோடு கூடுதல் இனிமையோடு பேசுவது இல்லை, மிகத் தாழ்ந்து இருக்கும் புல்லின் இதழோடு பேசுவதை விட.

     யார் காற்றின் குரலை தன் வாழ்வின் முயற்சியால் இனிய பாடலாக மாற்றுபவன் எவனோ அவனே  உயர்ந்தவன்.

     பணியில் ஈடுபடுவது என்பது கண்களால் காணப்படும் அன்பு.  உங்களால் விருப்புடன் பணி செய்ய முடியவில்லை, ஆனால் வெறுப்புடனே தான் பணி செய்ய முடிகிறது என்றால்,அந்த பணியை  நீங்கள் விட்டு விலகி கோயில் வாசலில் அமர்ந்து விருப்பமுடன் பணி  
செய்பவர்களிடமிருந்து பிச்சை எடுங்கள்.

     காரணம், நீங்கள் ஈடுபாடின்றி ரொட்டியை தணலில் இட்டால், அது மனிதனின் பாதி பசியை தான் போக்கும்.

     நீங்கள் திராட்சையை மனக்கசப்போடு பிழிந்தால், அந்த மனக்கசப்பு அதன் சாறில் விஷமாக கலந்து விடும்.

     நீங்கள் விருப்பமின்றி தேவதையை போல பாடினாலும் அது நாளின், இரவின் இரைச்சலாகவே மனிதனின் காதில் விழும்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...