முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டங்கள்

      பின்னர் ஒரு வழக்கறிஞர், 'ஐயா! அப்படியாயின் நம் சட்டங் களைப் பற்றிய தங்கள் கருத்து யாது?' என, அவர் சொல்லத் தொடங்கினார்:

     நீங்கள் சட்டங்களை இயற்றுவதிலே இன்பங் காண்கின்றீர்கள்.

     ஆனால், அவற்றைச் சிதைப்பதிலே தான் அதைவிட இன்பத்தைக் காண்கின்றீர்கள்.

     உங்கள் செயலோ, கடற்கரையிலே குழந்தைகள் உறுதியுடன் மணல் வீடுகளைக் கட்டிப் பின் சிரிப்பலையுடனே, அவற்றை அழித்தலைப் 
போன்றதே ஆகும்.

     ஆனால், நீங்கள் மணல் வீடுகளைக் கட்டும்போது கடல் மேலும் மேலும் மணலைக் கொணர்ந்து  குவிக்க, நீங்கள் அவற்றை அழிக்கும் போது கடலும் உங்களுடனே சேர்ந்து பிரிக்கின்றது.

     உண்மையாகவே கடல் களங்கம் அற்றவர்களுடனே கூடிச் சிரிக்கின்றது.

     எவருக்கு வாழ்க்கை ஒரு கடல் அல்லாமலும், மனிதனால் செய்யப்பட்ட சட்டங்கள் மணல் வீடுகளைப்  போல் அல்லாமலும் உள்ளதோ?

     எவருக்குப் பாறையே தம் வாழ்க்கையாகவும், அப்பாறை மீது தாம் விரும்பியபடி செதுக்கிக் கொள்ளத்தக்க சிற்றுளியே சட்டமாகவும்
உள்ளதோ அவர்கள் எத்தகையவர்கள்?

     நடனக் கலையை வெறுக்கும் முடவன் எத்தன்மையானவன்?

     காட்டிடையே சுதந்நரமாக ஓடுகின்ற மானையும் கடமையையும் பார்த்து.  இவை நாடோடி என்றும் நெறி தவறியன என்றும் சொல்லுகின்ற, தன்
நுகத்தடியையே காதலிக்கின்ற வண்டிமாடு எப்படிப்பட்டது?

     திருமண விழாவுக்கு முன்னதாகவே வந்திருந்து, விருந்தை மிகுதியாக உண்ட பின்னர்க் களைத்துத் திரும்பித் தம் இல்லம் செல்லும்போது எல்லா விருந்தாட்டும் சட்டத்தை மீறியனவே என்றும் , விருந்து தருபவர்கள் அனைவரும் சட்டத்தை மீறினவர்களே என்று கூறும் ஒருவனைப் பற்றி என்ன வென்று கருதுவது?

     இவர்களும் கதிரவன் ஒளியிலேதான் நிற்கிறார்கள்.  ஆனால், தங்கள் முதுகைக் கதிரவனுக்குக் காட்டி நிற்கிறார்கள் என்பதைத் தவிர, வேறு என்ன நான் இவர்களைப் பற்றிச் சொல்ல முடியும்?

     இவர்கள் தங்கள் நிழலையே காண்கின்றனர்.  இவர்கள் நிழலே இவர்களுக்குச் சட்டங்கள்.  இவர்களுக்கோ, கதிரவன் என்பது நிழலை உருவாக்கும் ஒரு கருவியே அன்றி வேறில்லை.

     சட்டத்தினை ஒப்புக் கொள்ளுதல் என்பது இவர்கள் வரையிலும், தலை தாழ்ந்து தங்களது நிழலைத் தாங்களே நிலத்தின் மீது தேடுவது என்பது அல்லாமல் வேறென்ன?

     ஆனால், நீங்கள் ஞாயிற்றை நோக்கிச் சென்றீர்களானால், தரையின் மீது படியும் வேறு எந்த நிழல் தான் உங்களைச் சிறைப்படுத்த முடியும்?

     காற்றூடே  பயணம் செய்யும் உங்களை எந்தக் காற்றாடி தான் திசைமாற்றித் திருப்ப முடியும்?




     மற்றொரு மனிதனின் சிறைக் கதவின் மீதன்றி நீங்கள் உங்கள் நுகத்தடியை வேறெங்காவது உடைத்துக்கொள்ள முடியுமானால், மனிதனின் எந்தச் சட்டம் உங்களைக் கட்டுப்படுத்த முடியும்? 

     பிற எந்த மனிதனுடைய இரும்புத் தளையின் (விலங்கு) மீதும் தடுக்கி விழாமல் நீங்களே களித்தாடக் கூடுமானால், எந்தச் சட்டங்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டும்?

     யாருடைய நெறியிலும் இடையூறு உண்டாக்காமல் நீங்களே உங்கள் உடையைக் கிழித்துக் கழித்துப்போடக் கூடுமானால் , யார் உங்களை நீதி 
விசாரணைக்கு அழைக்க முடியும்?

     ஆர்பலீஸ் நகர மக்களே, நீங்கள் முரசத்தை மூடிப் போர்த்து வைக்கலாம்; யாழின் நரம்புகளைத் தளர்த்தி விடலாம்.  ஆனால், வானம்பாடியைப் பண் இசைக்காதே என உங்களிலே யாராவது உத்தரவிட முடியுமா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...